Small business ideas in tamil:- சமீபகாலமாக ஆண், பெண் இருபாலரும் சொந்தமாக ஏதாவது ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது. மிகக் குறைந்த சம்பளத்தில் பற்றாக்குறை பட்ஜெட்டில் அல்லாடுவதைவிட, சொந்தமாக ஏதாவது தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
அதே நேரத்தில் முதலீடும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். இவர்களுக்காக குறைவான முதலீட்டில் செய்யக்கூடிய சில சிறு தொழில் பட்டியல்கள் இங்கே.
Small business ideas in tamil – சூப் கடை:

இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் மக்கள் அதிகமாக ஆரோக்கியமாக உணவுகளை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் சூப் கடை வைத்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.
அதாவது கொள்ளு சூப், வாழைத்தண்டு சூப், காய்கறி சூப் என்று விதவிதமாக தயார் செய்து மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் விற்பனை செய்யலாம்.
அதேபோல் இப்போது மக்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்று காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளையும் நடைப்பயிற்சியை மேற்கொள்வதினால். அங்கு சென்றுகூட தயாரிப்பு செய்த சூப்பினை விற்பனை செய்யலாம்.
முதலீடு: இந்த சூப் கடை வைப்பதற்கு குறைந்த முதலீடே போதுமானது. அதாவது ரூ.15,000/- முதலீடாக தேவைப்படும். அதுவும் இந்த முதலீடானது ஆரம்ப செலவிற்கு மட்டும்தான் அதாவது ஒரு சிறிய தள்ளுவண்டி, சூப் தயார் செய்வதற்கு பாத்திரங்கள் வாங்குவதற்கு இந்த 15,000/- முதலீடாக தேவைப்படும்.
அதன் பிறகு தினமும் சூப் தயார் செய்வதற்கு மூலப்பொருட்கள் காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள், கப் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு தினமும் சிறிய அளவில் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.
சுவைக்கு தகுந்தது போல் ஒரு கப் சூப்பின் விலை 15 ரூபாயில் இருந்து 25 வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் தினமும் நல்ல லாபம் பார்க்க முடியும்.