Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை

0
1000

இன்று உலகில் அதிக ஹோட்டல்களை கொண்ட நிறுவனம் Holiday Inn. Holiday Inn நிறுவனத்திற்கு உலகின் பல நாடுகளில் ஹோட்டல்கள் உள்ளன. Holiday Inn நிறுவனத்தை தொடங்கியவர் Kemmons Wilson. அவர் வெற்றிக்காக 20 யோசனைகளை கொடுத்துள்ளார்.

Kemmons Wilson

Kemmons Wilson-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை (20 Tips for Success):
தினமும் அரை நாள் கடுமையாக உழையுங்கள். ஒரு நாளுக்கு இருபத்துநான்கு மணி நேரம் இருக்கிறது. இதில் பன்னிரண்டு மணி நேரம் .. அதாவது அரை நாள் நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் பயன்படுத்தினால் வெற்றி வசப்படும் (Work only half a day).
உழைப்புதான் எல்லா வாய்ப்புகளையும் திறக்கும் சாவி (Work is the master key that opens the door to all opportunities).
ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத்திறனை விட மனப்பாங்கே முக்கிய பங்காற்றுகிறது (Mental attitude plays a far more important role in a person’s success or failure than mental capacity).

வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும் (Remember that we all climb the ladder of success one step at a time).
ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது (There are two ways to get to the top of an oak tree. One way is to sit on an acorn and wait; the other way is to climb it).
வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள பயப்படாதீர்கள். (Do not be afraid of taking a chance. Remember that a broken watch is exactly right at least twice every 24 hours).
மகிழ்ச்சியின் ரகசியம் பிடித்ததை செய்வதில் இல்லை, செய்யும் காரியத்தை பிடித்ததாய் ஆக்கிகொள்வது. ( The secret of happiness is not in doing what one likes, but in liking what one does).
முடியாது, பிடிக்காது போன்ற வார்த்தைகளைச் சொல்லவே கூடாது (Eliminate from your vocabulary the words, “I don’t think I can” and substitute, “I know I can.”).
பாதுகாப்பாக ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது (In evaluating a career, put opportunity ahead of security).

வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு (Remember that success requires half luck and half brains).
வெற்றியடைய துணிச்சலாய் காரியங்களை செய்ய வேண்டும் (A person has to take risks to achieve)
சம்பாதிப்பதை விட அதிகமாக உழைக்கவில்லையென்றால், உழைக்கும் அளவை விட அதிகமாக சம்பாதிக்க இயலாது (People who take pains never to do more than they get paid for, never get paid for anything more than they do).
மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது (No job is too hard as long as you are smart enough to find someone else to do it for you).
வாய்ப்புகள் அடிக்கடி வரும். வாய்ப்பு அடிக்கடி தட்டும்போது காதுகளை வாய்ப்புகளை கேட்பதற்கும், கண்களை வாய்ப்புகளை பார்பதற்கும், கைகளை வாய்ப்புகளை பற்றுவதற்கும், மூளையை வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கும் பழக்கப்படுத்துங்கள் (Opportunity comes often. It knocks as often as you have an ear trained to hear it, an eye trained to see it, a hand trained to grasp it, and a head trained to use it).

எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது (You cannot procrastinate – in two days, tomorrow will be yesterday).
கைகடிகாரத்தைக் கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள் (Sell your wristwatch and buy an alarm clock).
வெற்றிகரமான மனிதர் ஊக்கத்தை தன்னிடமிருந்து தொடங்குகிறான். சுய ஊக்கத்திற்கான பொறி அவர்களிடமே இருக்கும். (A successful person realizes his personal responsibility for self-motivation. He starts himself because he possesses the key to his own ignition switch).
கவலைப்படாதீர்கள், கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. எதிர்காலத்தை பற்றி கவலைபட்டால் உங்கள் நிகழ்காலம் அழிந்துவிடும். கவலையில் எந்த நன்மையையும் கிடையாது (Do not worry. You can’t change the past, but you sure can ruin the present by worrying over the future. Remember that half the things we worry about never happen, and the other half are going to happen anyway. So, why worry?).
உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது மகிழ்ச்சி உருவாக்காது. உங்களிடம் இருப்பதை எவ்வளவு கொண்டாடுகிறீர்கள் என்பதில்தான் மகிழ்ச்சி உருவாகும். (It is not how much you have but how much you enjoy what you have that makes happiness).
கடவுளை நம்புங்கள் (Believe in God and obey the Ten Commandments).











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here