போட்டோ ஸ்டுடியோ தொழில் செய்வது எப்படி?

0
1157

சுயதொழில் – சுயமாக தொழில்துவங்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த தொழில் வாய்ப்பை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். அதாவது போட்டோ ஸ்டுடியோ சுயமாக வைத்து அதில் எப்படி இலாபம் எடுக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.  செல்போன் கேமரா வீட்டுக்கு வீடு இருந்தாலும், நல்ல கலைநயத்தோடு மிகவும் துல்லியமாக புகைப்படம் எடுக்க ஸ்டுடியோக்களுக்குத்தான் அதிகமாக மக்கள் நாடுகின்றனர். போட்டோக்கள் எடுப்பது கலை நுணுக்கமானது என்றாலும். இந்த கலையை கற்றுக்கொண்டால் போதும் யாருவேண்டுமானாலும் ஸ்டுடியோ வைத்து நன்றாக சம்பாதிக்கலாம்.

சுயதொழில் – கட்டிடமைப்பு:

போட்டோ ஸ்டுடியோ வைத்து சுயதொழில் துவங்க நினைப்பவர்கள் 10க்கு 20 அடி நீள, அகலமுள்ள அறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் பாதி ஸ்டுடியோ, கால்பாகம் மேக்கப் அறை, கால் பாகம் அலுவலக அறை அமைக்க ஒதுக்க வேண்டும்.

இந்த சுயதொழில் பொறுத்தவரை இன்டீரியர் டெக்கரேஷன் செலவு ரூ.10,000/-ஆகும். அறை அட்வான்ஸ் ரூ.20,000/-.

சுயதொழில் – முதலீடு:-

ஸ்டுடியோ அறையில் பேக்கிரவுண்ட் ஸ்கிரீன்(ரூ.200), ஸ்டூல் 1 (ரூ.125), பேபி சேர் 1 (ரூ.125), அம்ப்ரல்லா லைட் 800 வாட்ஸ் 2 (ரூ.16,000/-), கேமரா குறைந்தபட்சம் 5 எக்ஸ் ஆப்டிகல் லென்ஸ், 16 மெகா பிக்ஸல் திறனுள்ள கேமரா 1 (ரூ.12,000/-) மேக்கப் ரூம் ஆளுயர கண்ணாடி 1 (ரூ.1,000/-), போட்டோ கலர் கரெக்ஷன் செய்ய கம்ப்யூட்டர் 1 (ரூ.25,000/-), பிரின்ட் எடுக்க பிரின்டர் 1 (ரூ.8,000/-). டேபிள் 1 (ரூ.4,000/-), சேர் 4 (ரூ.1,200/-), போட்டோ டிஸ்ப்ளே போர்டு (தெர்மோகோலில் வெல்வெட் துணி மூடி பிரேம் செய்தது) 3 (ரூ.2,250), ஸ்டுடியோ பெயர் பலகை 1 (ரூ.3,000/-). கட்டிங் கருவி (ரூ.1,100/-).

ஆக மொத்தம் போட்டோ ஸ்டுடியோ வைக்க குறைந்த பட்சம் முதலீடு ரூ.1.04 லட்சம்.

சுயதொழில் – நிர்வாக செலவுகள்:-

இந்த சுயதொழில் பொறுத்தவரை வாடகை ரூ.2000/-, மின்சார செலவு ரூ.500, 900 போட்டோ கார்டு அடங்கிய, பிரின்டர் கேட்ரிஜ் 6க்கு ரூ.7,800/-. அழகு சாதன பொருட்கள் ரூ.200, கேமரா, கம்ப்யூட்டர் சர்வீஸ் ரூ.100, ஆல்பம் 5 ரூ.1000/-, இதர செலவுகள் ரூ.1000/-, மொத்த செலவு ரூ.12,600/-.

சுயதொழில் – மாத வருமானம்:-

போட்டோ ஸ்டுடியோ பொறுத்தவரை தினமும் சராசரியாக 10 பேருக்கு பாஸ்போர்ட் படம் எடுத்தால் மாதம் 250 பேர் ஆகிறது. நபருக்கு குறைந்தபட்சம் ரூ.50 வீதம் ரூ.12,500.

வெளியே நடைபெறும் விழாக்கள் சராசரியாக 5 ஆர்டர் வருவதாக வைத்து கொண்டால் குறைந்தபட்சம் ஒரு ஆர்டருக்கு 70 படங்களாவது எடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஆர்டருக்கு ரூ.3400 வீதம், 5 ஆர்டருக்கு ரூ.17,000/- கட்டணம்.

மொத்த வருவாய் ரூ.29,500. செலவு போக லாபம் ரூ.16,900. இதை உழைப்புக் கூலியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் கூடக்கூட ஆர்டர்கள் பெருகும். கூடுதலாக ஒரு கேமரா வாங்கி, போட்டோ எடுக்க சம்பளத்துக்கு ஊழியர் நியமித்தால் வருவாய் பெருகும். போட்டோவோடு வீடியோவும் எடுப்பதற்கேற்ப கேமராக்கள் உள்ளன (ரூ.25,000/- போதும்). இதை வாங்கிக் கொண்டால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து வருவாயை பெருக்கலாம்.

பள்ளி சேர்க்கை, தேர்வு, வங்கி கணக்கு என எல்லாவற்றுக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவை. எனவே நாள் தவறாமல் புகைப்படம் எடுக்க யாராவது வந்து கொண்டு இருப்பார்கள்.

திருமண நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் காதுகுத்து, சீர் என்று அனைத்திற்கும் போட்டோ எடுக்கும் வழக்கம் உள்ளதால் தொழிலில் தொய்வு இருக்காது.

சுயதொழில் – போட்டோ எடுப்பது எப்படி?

கையிலேயே டிஜிட்டல் கேமராவை பிடித்து படம் எடுக்கலாம். ஸ்டாண்ட் தேவை இல்லை. போட்டோ எடுக்கும்போது லைட்டிங் முக்கியம்.

ஸ்டுடியோவில் படம் எடுக்க அம்ப்ரல்லா லைட்டிங் போட்டு, அதன் வெளிச்சத்தில் கேமராவை கிளிக் செய்தால் போதும். வெளியே என்றால் அறைக்குள் அல்லது இரவு நேரங்களில் எடுக்கும்போது லைட்டிங் பற்றாக்குறையை ஈடுகட்ட பிளாஷ் உபயோகிப்பது, பகலில் அறைக்கு வெளியே என்றால் மேகமூட்டம், சூரிய வெளிச்சம் ஆகிய இயற்கை ஒளிக்கேற்ப மோடு அட்ஜஸ்ட் செய்து கேமராவை கையாள்வது, குளோஸ் அப் மற்றும் லாங்ஷாட்டுக்கு ஏற்ப ஜூம் உபயோகிப்பது ஆகியவை அடிப்படை விஷயங்கள். அனுபவத்தில் கற்றுக்கொள்ள ஒரு வாரம் போதும்.

கேமராவில் எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து, அந்த படங்களை கம்ப்யூட்டர் மூலம் கலர் கரெக்ஷன் போட வேண்டும்.

இது படங்களை தெளிவாக்கும். இதையும் ஒரு வாரத்தில் கற்கலாம். கம்ப்யூட்டரில் கலர் கரெக்ஷன் செய்த பிறகு படங்களை பிரின்ட் செய்ய வேண்டும்.

ஒரு கார்டில் 8 பாஸ்போர்ட் படங்கள் வரை பிரின்ட் செய்யலாம். பிரின்டாகி வரும் கார்டில் உள்ள படங்களை பாஸ்போர்ட், ஸ்டாம்ப் சைஸ், 2பி ஆகிய சைஸ்களுக்கேற்ப கட்டிங் கருவி மூலம் வெட்டினால் போட்டோ ரெடி.

போட்டோ எடுத்து 10 நிமிடத்தில் படம் கொடுக்கலாம். வெளியே சென்று எடுக்கப்பட்ட 70 படங்களை 2 மணி நேரத்தில் பிரின்ட் செய்து கொடுக்கலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here