ஆடு கோழி முயல் பன்றி வளர்ப்பு (NABARD) 

0
1215

ஆடு கோழி முயல் பன்றி மற்றும் ஆண் எருமை வளர்ப்புக்கான பண்ணை அமைக்க மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியின் திட்டம்

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

 Entrepreneurship Development & Employment Generation (EDEG) scheme

தேசிய கால்நடைதிட்டம்

மத்தியஅரசின்கால்நடைவளர்ப்புமற்றும் பால்வளத்துறையினால்இத்திட்டம்நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:-

தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு (2020-21நிதியாண்டு): ரூ.569.13லட்சம் (இதில், பொதுப்பிரிவினருக்கு(General) – ரூ.373.20லட்சம்; பட்டியல் சாதியினருக்கு(SC) – ரூ.135.77லட்சம்; பட்டியல் பழங்குடியினருக்கு(ST) – ரூ.60.16லட்சம்).

தகுதியான பயனாளிகள்: விவசாயிகள், தொழில் முனைவோர்கள், தொண்டு நிறுவனங்கள்,  கம்பெனிகள், கூட்டுறவு சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட/செய்யப்படாத குழுக்கள்(சுய உதவி குழுக்கள்(SHG)&கூட்டுப்பொறுப்பு குழுக்கள்(JLG)).

மானியம்:

 • முதலீட்டுக்கடனுக்கானபின்விடுப்புமானியம் (Credit Linked Back-ended Capital Subsidy)

o    25% – வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்கள்(APL);

o    33.33% – வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள்(BPL), பட்டியல் சாதியினர்(SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர்(ST).

o    நீலகிரிமாவட்டத்தினருக்கு: 35% – வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்கள்(APL); 50% – வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள்(BPL), பட்டியல் சாதியினர்(SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர்(ST)

 • மானியமானது  கடன்தொகை முழுவதும் கட்டி முடித்தபின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் (கடன் வாங்கியதிலிருந்து குறைந்தது மூன்று வருடங்களுக்கு அப்பால்).
 • பயனாளி வங்கிக்கடனை செலுத்த தவறினால் (வாராக்கடனானால்), மானியம் திரும்பப் பெறப்படும்.

பயனாளியின் பங்களிப்பு:மொத்த திட்ட மதிப்பில் குறைந்தது 10% (வங்கிக்கடன் ரூ.1.60 லட்சத்திற்கு மேலிருப்பின்)

பயனாளி திட்டத்தை முடிப்பதற்கான கால அவகாசம்: பயனாளி முதல் தவணை வங்கிக்கடன் வாங்கியதிலிருந்து ஒரு வருடத்திற்குள் திட்டத்தை முடித்து தொழில் தொடங்க வேண்டும்.

கடன் தவணைக்காலம்:

 

செயல்கள் கடன் தவணைக்காலம் கருணைக்காலம்
கோழிவளர்ப்புமுதலீட்டு நிதி 5 – 9 வருடங்கள் 6 மாதங்கள்- 1 வருடம்
சிறிய அசைபோடும் விலங்குகள் மற்றும் முயல் வளர்ப்பு அதிகப்பட்சம் 9 வருடங்கள் 2 வருடங்கள்
பன்றி வளர்ப்பு 5 – 6 வருடங்கள் 1 வருடம்
ஆண் எருமைகள் மீட்டெடுப்பு மற்றும் வளர்ப்பு 4 – 6 வருடங்கள் 1 வருடம்

அறிவிப்பு பலகை: இத்திட்ட பயனாளிகள் “Assisted under EDEG-NLM by Dept. of Animal Husbandry &Dairying, Govt. of India through NABARD” என்ற அறிவிப்பை, திட்டம் செயல்படுத்தப்படும் இடத்தில் வைக்க வேண்டும்

தகுதியான செயல்கள்:

குறிப்பு:

 • மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்ட மதிப்புகள் உதாரணத்திற்கானவை. இந்த மதிப்பில் மாறுதல்கள் செய்யப்படலாம்.
 • மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்ட மதிப்புகள் (EDEG) தீவனம், இன்சூரன்ஸ் மற்றும் இதர செலவுகளையும் உள்ளடக்கியது.
 • ஒரு பயனாளி ஒரே செயலுக்கு ஒரு முறை மேல் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச அளவைவிட) பயன் பெற முடியாது.
 • ஆண் எருமைகள் மீட்டெடுப்பு மற்றும் வளர்ப்பு – குறைந்தது 24 மாதங்களுக்கு – அதிகபட்ச மானியம்:25% முதல் 40% மட்டும்

மானியத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:

 1. வங்கிக்கடன் அனுமதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், வங்கிகள் https://ensure.nabard.org என்ற இணையதளத்தில் வங்கிக்கடன் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து மானியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
 2. இணையதளத்தில் முதல் பதிவேற்றம் செய்த 30 நாட்களுக்குள் கடனில் முதல் தவணையை பயனாளிக்கு விடுவித்து அந்த தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் (தவறினால் முதல் பதிவேற்றம் தானாக நிராகரிக்கப்படும்).
 3. வங்கிகள் நபார்டிலிருந்து மானியம் பெற்றதும் அதை “மானிய இருப்பு கணக்கில்(SUBSIDY RESERVE FUND ACCOUNT)” 7 நாட்களுக்குள் வரவு வைக்க வேண்டும். மானியம் பெற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் வங்கிகள் “பயன்பாட்டு சான்றிதழ்(Utilisation Certificate)” சமர்ப்பிக்க வேண்டும்.
வ.எண் தகுதியான செயல்கள் திட்டஅளவு அதிகபட்சதிட்ட மதிப்பு அதிகபட்ச மானியம்

(வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்கள்(APL))

அதிகபட்ச மானியம்

(வறுமைக்கோட்டிற்கு

 கீழுள்ளவர்கள்(BPL),

 பட்டியல் சாதியினர்(SC)

 மற்றும் பட்டியல்

 பழங்குடியினர்(ST))

கோழிவளர்ப்புமுதலீட்டு நிதி
1. இனப்பெருக்க பண்ணை – வான்கோழி,

வாத்து (duck / geese), ஜப்பானிய காடை, கினி கோழி

ரூ.30 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.7.5 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.9.9 லட்சம்)

2. மைய வளர்க்கோழி பண்ணை ஒரு சுழற்சியில் 16000

வளர்க்கோழிகள்

ரூ.40 லட்சம்

(16000

வளர்க்கோழிகள்)

திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.10.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.13.3 லட்சம்)

3. கலப்பின முட்டைக்கோழி

பண்ணை

2000 முதல்  20000

கோழிகள்வரை

ரூ.80 லட்சம்

(20000 கோழிகள்)

திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.20.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.26.6 லட்சம்)

4. கலப்பின கறிக்கோழி பண்ணை 1000 முதல்  20000

கோழிகள்வரை

ரூ.44.8 லட்சம்

(20000 கோழிகள்)

திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.11.2லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.14.9லட்சம்)

5. தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழியினங்கள்  (நந்தனம் 99),

வான்கோழி,

வாத்து (duck / geese), ஜப்பானிய காடை, கினி கோழிவளர்ப்பு

ரூ.20 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.5.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.6.6 லட்சம்)

6. தீவன கலவை நிலையம்

நோய் புலனாய்வு ஆய்வகம்

தீவன கலவை நிலையம்

(1 மணி நேரத்தில்

1 டன் அளவு திறன்கொண்ட)

ரூ.16 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.4.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.5.3 லட்சம்)

7. கோழிக்கானபோக்குவரத்து வாகனங்கள் – திறந்த கூண்டு ரூ.8 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.2.6 லட்சம்)

8. கோழிக்கானபோக்குவரத்து வாகனங்கள் – குளிரூட்டப்பட்டவை ரூ.15லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.3.75லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.4.9லட்சம்)

9. சில்லறை வர்த்தக நிலையம்- இறைச்சிக்கூடம் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.5 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.3.3 லட்சம்)

10. சில்லறை வர்த்தக நிலையம்- விற்பனைக்கூடம் ரூ.15 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.3.75 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.4.9 லட்சம்)

11. நடமாடும்  விற்பனைக்கூடம் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.5 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.3.3 லட்சம்)

12. கோழிப்பொருட்களுக்கான

குளிர்பதன கிடங்கு

ரூ.20 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.5.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.6.6 லட்சம்)

13. முட்டை/கறி வண்டி ரூ.15,000 திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.3750) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.4990)

 

 

 

 

சிறிய அசைபோடும் விலங்குகள் மற்றும்

முயல் வளர்ப்பு

1. வெள்ளாடு/செம்மறியாடு வளர்ப்பு

(10 பெட்டை  + 1 கிடா)

10+1 / 20+2 / 30+3 / 40+4 ரூ.2 லட்சம்

(40 பெட்டை  +

4 கிடா)

திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.50,000) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.66,660)

2. இனப்பெருக்க பண்ணை – வெள்ளாடு/செம்மறியாடு

(100 பெட்டை  + 5 கிடா)

100 பெட்டை  + 5 கிடா ரூ.10 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.5 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.3.3 லட்சம்)

3. அங்கோரா இன முயல் வளர்ப்பு

(15 பெண்+ 5 ஆண்)

15 பெண்+ 5 ஆண் ரூ.3 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.75,000) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.99,990)

4. இனப்பெருக்க பண்ணை – அங்கோரா இன முயல்

(15 பெண்+ 5 ஆண்)

15 பெண்+ 5 ஆண் ரூ.3 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.75,000) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.99,990)

பன்றி வளர்ப்பு
1. பன்றி வளர்ப்பு

(3 பெண் + 1 ஆண்)

3+1 / 6+2 / 9+3 / 12+4 ரூ.4 லட்சம்

(12 பெண் +

4 ஆண்)

திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.1.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.1.3 லட்சம்)

2. இனப்பெருக்க பண்ணை – பன்றி

(20 பெண் + 4 ஆண்)

20 பெண் + 4 ஆண் ரூ.8 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.2.6 லட்சம்)

3. குளிரூட்டப்பட்டசில்லறை வர்த்தக நிலையம் ரூ.12 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.3.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.3.9 லட்சம்)

ஆண் எருமைகள் மீட்டெடுப்பு மற்றும் வளர்ப்பு
1. சிறிய பண்ணை 25 கன்றுகள் வரை ரூ.6.25 லட்சம்

(25 கன்றுகள்)

திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.1.56 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.2.08 லட்சம்)

2. வணிக பண்ணை 25 முதல் 200

கன்றுகள் வரை

ரூ.48 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.12.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.15.9 லட்சம்)

3. இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணை 200 முதல் 2000

கன்றுகள் வரை

ரூ.250 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.62.5 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.83.3 லட்சம்)

விலங்கு கழிவு மேலாண்மை(மாநில அரசுகள் மூலம்)
1. கட்டிடம் ரூ.100 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.25.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.33.3 லட்சம்)

2. ஆலை மற்றும் இயந்திரங்கள் ரூ.100 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.25.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.33.3 லட்சம்)

3. பயன்பாட்டு உபகரணங்கள் ரூ.60 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.15.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.19.9 லட்சம்)

4. ஆலை செயல்பாட்டுக்கு முந்தைய செலவுகள் ரூ.20 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.5.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.6.6 லட்சம்)

5. நடப்பு மூலதனபங்களிப்பு ரூ.20 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.5.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.6.6 லட்சம்)

தீவன சேமிப்பக அமைப்பு(மாநில அரசுகள் மூலம்)
1. சேமிப்பக அமைப்பு 1000 பசுக்களுக்கு தேவையான கொள்ளளவு ரூ.500 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.125.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.166.6 லட்சம்)

2. தீவனங்கள் கையாள தேவையான உபகரணங்கள் ரூ.100 லட்சம் திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.25.0 லட்சம்) திட்ட மதிப்பில் 33.33%

(அதிகபட்சம் – ரூ.33.3 லட்சம்)

குறிப்பு:

 • மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்ட மதிப்புகள் உதாரணத்திற்கானவை. இந்த மதிப்பில் மாறுதல்கள் செய்யப்படலாம்.
 • மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்ட மதிப்புகள் (EDEG) தீவனம், இன்சூரன்ஸ் மற்றும் இதர செலவுகளையும் உள்ளடக்கியது.
 • ஒரு பயனாளி ஒரே செயலுக்கு ஒரு முறை மேல் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச அளவைவிட) பயன் பெற முடியாது.
 • ஆண் எருமைகள் மீட்டெடுப்பு மற்றும் வளர்ப்பு – குறைந்தது 24 மாதங்களுக்கு – அதிகபட்ச மானியம்:25% முதல் 40% மட்டும்

மானியத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:

 1. வங்கிக்கடன் அனுமதிக்கப்பட்ட30 நாட்களுக்குள், வங்கிகள் https://ensure.nabard.org என்ற இணையதளத்தில் வங்கிக்கடன் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து மானியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
 2. இணையதளத்தில் முதல் பதிவேற்றம் செய்த30 நாட்களுக்குள் கடனில் முதல் தவணையை பயனாளிக்கு விடுவித்து அந்த தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் (தவறினால் முதல் பதிவேற்றம் தானாக நிராகரிக்கப்படும்).
 3. வங்கிகள் நபார்டிலிருந்து மானியம் பெற்றதும் அதை”மானிய இருப்பு கணக்கில்(SUBSIDY RESERVE FUND ACCOUNT)” 7 நாட்களுக்குள் வரவு வைக்க வேண்டும். மானியம் பெற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் வங்கிகள் “பயன்பாட்டு சான்றிதழ்(Utilisation Certificate)” சமர்ப்பிக்க வேண்டும்.

 உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here