யாரும் செய்திடாத முற்றிலும் புதிய தொழில்..! Surgical bandage making business…!

0
968

இன்று நாம் யாரும் செய்திடாத முற்றிலும் புதுமையான தொழிலை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது சாதாரண காயம் அல்லது ஏதாவது விபத்தினால் ஏற்படும் காயங்களுக்கு கட்டு போட வேண்டும் என்றால் அதற்கு அவசியம் பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் பேண்டேஜினை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் லாபம் பெறலாம். இந்த surgical bandage தொழில் பொறுத்தவரை சந்தையில் அதிகம் வரவேற்கப்பட கூடியவை மற்றும் போட்டி இல்லாத தொழிலும் கூட, எனவே புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்கள் இந்த surgical bandage making business-ஐ செய்யலாம், இதன் மூலம் நல்ல வருமானமும் பெறலாம்.

சரி இந்த பதிவில் surgical bandage making business செய்வது எப்படி? எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதற்கான இயந்திரங்கள் எங்கு கிடைக்கும், இந்த தொழில் செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெறலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இயந்திரம்:-

Surgical bandage rolling machine & surgical bandage cutting machine இவை இரண்டும் பேண்டேஜ் உற்பத்தி செய்ய தேவைப்படும் இயந்திரங்கள் ஆகும். இவை இரண்டும் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே அங்கு ஆர்டர் செய்தும் பெற்று கொள்ளலாம். இந்த இரண்டு இயந்திரங்களையும் வாங்க குறைந்த பட்சம் 3,00,000/- வரை தேவைப்படும்.

மூலப்பொருட்கள்:-

surgical bandage cloth, காக்கி பேப்பர் மற்றும் பசை இந்த மூன்று பொருட்கள் தான் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் மூல பொருட்கள் ஆகும். இவற்றையும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

சர்ஜிக்கல் பேண்டேஜ் உற்பத்தி செய்யும் முறை:-

Surgical bandage rolling machine-யில் surgical bandage cloth, காக்கி பேப்பர் மற்றும் பசை இவை மூன்றையும் செட் செய்து இயந்திரத்தை இயக்கினால், சர்ஜிக்கல் பேண்டேஜ் ரோல் ஆகும். இவ்வாறு ரோல் செய்யப்பட்ட பேண்டேஜினை கட்டிங் இயந்திரத்தில் பொருத்தி கட்டிங் செய்ய வேண்டும்.

உற்பத்தி செலவு:-

ஒரு மாதம் அதாவது 25 நாட்களுக்கு 4 இன்ச் கொண்ட சர்ஜிக்கல் பேண்டேஜ் உற்பத்தி செய்ய ஆகும் செலவுகளை பற்றி இப்பொழுது தெளிவாக பார்க்கலாம். நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு 4 இன்ச் அளவு கொண்ட சர்ஜிக்கல் பேண்டேஜிகளை 800 பீஸ் வரை தயார் செய்யலாம், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை உற்பத்தி செய்தால் 8,000 பீஸ் பேண்டேஜ் உற்பத்தி செய்யலாம். இவ்வாறு தயார் செய்வதன் மூலம் 25 நாட்களுக்கு 2,00,000/- பீஸ் பேண்டேஜிகளை தயார் செய்யலாம். சரி இப்பொழுது இதற்கான உற்பத்தி செலவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வேலையாட்களை வைத்து இயந்திரங்களை இயக்குவதற்கு இரண்டு வேலையாட்கள் தேவைப்படும் இவர்களுக்கு மாதம் சம்பளமாக 20,000/- ரூபாய் தரவேண்டிதாக இருக்கும்.

இயந்திரங்களை இயக்குவதற்கு 2KW மின்சாரம் அவசியம் தேவைப்படும். எனவே இதற்க்கான மின்சார செலவு 4000/-

பேக்கிங் செய்வதற்கு மற்றும் மற்ற இதர செலவுகளுக்கு 65,000/- தேவைப்படும்.

எனவே ஒரு மாதம் உற்பத்திக்கான தயாரிப்பு செலவு 80,000/- தேவைப்படும்.

அடுத்ததாக மூலப்பொருட்கள் வாங்க ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி இப்பொழு பார்க்கலாம்.

சந்தைகளில் ஒரு மீட்டர் surgical bandage cloth-யின் விலை 7 ரூபாய், நம் உற்பத்திக்கு கிட்டத்தட்ட 50,000 மீட்டர் surgical bandage cloth தேவைப்படும். இதற்கு 3,50,000/- செலவாகும்.

உற்பத்தி செலவிற்கு மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்க்கு கிட்டத்தட்ட நமக்கு 4,20,000/- ஒரு மாதத்திற்கு சர்ஜிக்கல் பேண்டேஜ் தயார் செய்வதற்கு தேவைப்படும்.

இந்த 4 இன்ச் அளவு கொண்ட சர்ஜிக்கல் பேண்டேஜ் சந்தைகளில் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாம் 2,00,000/- சர்ஜிக்கல் பேண்டேஜினை உற்பத்தி செய்துள்ளோம் என்றால் 6,00,000/- ரூபாய் நமக்கு வருமானமாக கிடைக்கும். இந்த 6 லட்சத்தில் உற்பத்தி செலவு போக நமக்கு லாபமாக 1,70,000/- ரூபாய் கிடைக்கும்.

இந்த தொழில் துவங்க நமக்கு தேவைப்படும் லைசன்ஸ்:

Trade license பெற்றிருக்க வேண்டும், உத்யோக ஆதார் என்கின்ற ஆன்லைன் சேவையில் பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு GST-க்கு அப்ளை செய்ய வேண்டும். அதன் பிறகு Drug license பெற்றிருக்க வேண்டும். இந்த அனைத்து லைசன்ஸ்களையும் பெற்றிருக்க வேண்டும்.

சந்தை வாய்ப்பு:

நாம் தயார் செய்த இந்த சர்ஜிக்கல் பேண்டேஜினை அனைத்து மெடிக்கல் ஷாப் மற்றும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here