கையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது? பணத்தை பெருக்க என்னவழி ?

0
1294

கையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது? பணத்தை (money) பெருக்க என்னவழி ? என்று யோசிக்கிறீர்களா.

ஐயா, இங்கு கோடிக்கணக்கான நபர்கள் உங்களை போன்றோர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களை போன்றோர்களை அவர்கள் தெய்வமாக பார்க்கிறார்கள்.

ஒரு சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள், அவர்களின் செயல்திறனை (performance) ஆராயுங்கள், அவர்கள் நிறுவனத்தின் மீது முதலீடு (investment) செய்யுங்கள். அவர்களிடம் ஒப்பந்தம் போடுங்கள் வருடம் எனக்கு இவ்வளவு வருமானம் வேண்டும் என்று அல்லது நிறுவனம் நன்கு வளர்ந்த பிறகு உங்களுடய பங்கை ஒரு வெஞ்சர் கேப்பிடல் (Venture Capital) நிறுவனத்திடம் 20, 30 மடங்கு லாபம் வைத்து விற்றுவிடுவேன் என்று முடிவு செய்யுங்கள்.

ஒரு நல்ல ஏஞ்சல் முதலீட்டாளர் செய்யவேண்டியது எல்லாம், ஒரு நிறுவனத்தில் நுழையும் போதே, எப்போது வெளியேற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். என்ன முடிவுகள் நீங்கள் எடுப்பீர்கள், எந்த விசயத்தில் தலையீட மாட்டீர்கள் என்பது போன்ற சரியாக வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

சரியான ஐடியா (idea) உள்ள நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அதில் ஐடியா கொடுத்த தொழில் முனைவோருக்கு வேண்டிய சுதந்திரம் கொடுத்து நிறுவனத்தை வளர்க்கவேண்டும், அதற்கு நல்ல வருங்காலம் இருக்கிறது என்பதை வெஞ்சர் கேப்பிடல் நிறுவனங்களிடம் எடுத்துரைத்து போட்ட முதலீடு போல் பலமடங்கு லாபம் அடையவேண்டும்.

பத்து லட்சம் முதலீடு செய்கிறீர்கள், வெளியேறும் போது 60 இலட்சம் ஆகிறது, சரியான நேரத்தில் வெஞ்சர் கேப்பிடலிடம் விற்று உங்கள் முதலீட்டை வெளியே எடுத்துவிடுங்கள், இப்போது இன்னொரு புது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள், அந்த நிறுவனத்தை விரிவுப்படுத்துங்கள், மேலும் லாபம் பெறுங்கள்.

இன்றைய சூழலில் பல தொழில்முனைவோர்கள் சரியான, முதலீட்டாளர்கள் இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள்.

இது சரியான தருணம் இப்போதே களமிறங்குங்கள், இலட்சகணக்கான தொழில்முனைவோர்களின் கனவை நினைவாக்குங்கள்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here