45 நாள் சார்ஜ் நிற்கும் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்..!

0
1174

பயனுள்ள தகவல்கள் – தொடர்ந்து 45 நாள் சார்ஜ் நிற்கும் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்சியினை இந்தியாவில் தற்பொழுது ஹூவாமி நிறுவனம் (Xiaomi Huami Amazfit Bip) புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை இந்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – மக்களிடையே அதிக வரவேற்பு:-

சாதாரண வாட்சை விட ஸ்மார்ட்வாட்ச் அணிந்து கொள்ளும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இளைஞர்கள் மட்டும் இல்லாமல், முதியோர்களுக்கும் இது பயன்படும் வகையில் பல பயன்களை ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது.

அந்த வகையில், தற்போது எம்.ஐ நிறுவனத்தின் துணை பிராண்டான ஹூவாமி நிறுவனம் புதிதாக ‘அமேஸ் ஃபிப் லைட்’ Amazfit Bip Lite என்ற ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இப்போது தெரிந்து கொள்வோம் வாங்க..!

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – ஸ்மார்வாட்சியின் சிறப்பம்சங்கள்:-

அமேஸ் ஸ்மார்ட்வாட்சை ஒரு முறை சார்ஜ் ஏற்றி விட்டால் போதும். 45 நாட்கள் வரையில் சார்ஜ் தொடர்ந்து நீடித்து நிற்கும். இதில் 1.28 இன்ச் அளவு குட்டி திரை டிஸ்ப்ளே, 176 x 176 பிக்சல் கொண்டதாகவும், மேலும் 2.5  Corning Gorilla glass-வுடன்  செயல்படுகிறது.

மேலும், இதய துடிப்பை உணரக்கூடிய சென்சார்களும் புகுத்தப்பட்டுள்ளது. எனவே, இப்போது நம்முடைய இதய துடிப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை அறியலாம்.

வாக்கிங், ஜாக்கிங், ஸ்போர்ட்ஸ் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களிலும் அமேஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளது.

மேலும், ஏதேனும் ஆப் நோட்டிபிக்கேஷன் வந்தால் கூட அதை உடனுக்குடன் தெரிவித்து விடும். இதே போல், மொபைல் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் போது, நமது போனில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வந்தால், அத்தகைய நோட்டிபிகேஷன்களும் உடனுக்குடன் வந்து விடும்.

இதய துடிப்பு உணருவதற்காக PPG சென்சார் உள்ளது. அதே போல், ஆஸிலோமீட்டர், பேரோமீட்டர், காம்பஸ் சென்சார்களும் உள்ளது.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here