கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழில் (Small profitable business ideas):-
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கரும்பு ஜூஸை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. மேலும் கரும்பு ஜூஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, என்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த கரும்பு ஜூஸ் மெஷின் குறைந்த விலையில் கூட பல ஆன்லைன் ஷாப்பிங் ஷ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே மிக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்கள் தயக்கம் இல்லாமல் இந்த சிறுதொழிலை துவங்கலாம்.
கரும்பு ஜூஸ் இயந்திரம் விலை
இந்த கரும்பு ஜூஸ் இயந்திரம் குறைந்தபட்சம் ரூபாய் 18,000/- முதல் அதிகபட்சம் ரூபாய் 65,000/- வரை கிடைக்கின்றது.
இந்த சிறு தொழிலை துவங்க நினைப்பவர்கள் இப்போதே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கரும்பு ஜூஸ் இயந்திரத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தொழில் துவங்குங்கள்.
பொதுவாக கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழிலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் துவங்க வேண்டும். அதாவது பேருந்து நிலையம், மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கடை வீதிகளில் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இதன் வரவேற்பு மக்களிடம் அதிகமுண்டு.

தரை துடைப்பான் (mop) தயாரிப்பு தொழில் (Small profitable business ideas):
சிறு தொழில் பட்டியல் 2020 (siru thozhil vagaigal in tamil):- மக்களிடையே அதிக வரவேற்பு உள்ள ஒரு பொருள் தரை துடைப்பான் (Mop), இந்த mop-ஐ பயன்படுத்தும் காலம் மிக குறைவு என்பதால், சந்தையில் இதன் தேவை அதிகம். எனவே தரை துடைப்பான் (mop) தயார் செய்து சந்தையில் விற்பனை செய்தால், அதிக வருமானம் பார்க்க முடியும்.
இதற்க்கான இயந்திரங்கள் மற்றும் மூல பொருட்கள் அனைத்தும் மிக குறைந்த விலையில், அனைத்து ஆன்லைன் ஷ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்கள், இந்த தரை துடைப்பான் தயாரிப்பு தொழிலை துவங்கலாம்.

ரெடிமேட் சப்பாத்தி தொழில் (Small profitable business ideas):
சிறு தொழில் பட்டியல் 2020 (siru thozhil vagaigal in tamil):- இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்கின்ற காரணத்தினால், சரியான நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு பயன்படும் வகையில் ரெடிமேட் சப்பாத்தி செய்து விற்பனை செய்யலாம்.
இதன் மூலமும் தினசரி வருமானம் பெறலாம். குறைந்த முதலீட்டில் பெண்கள் வீட்டில் (Small profitable business ideas) இருந்தபடி தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு, இது ஒரு சிறந்த சிறுதொழிலாகும்.
குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இது ஒரு சிறந்த பதிவாக அமையும் என்று நம்புகின்றோம்.
