சிந்தனை : Hobby, Interest இதற்குள் அடங்கியிருக்கும் ஒருவித Passion

0
1164

எனது நண்பன் ஒருவன் மொபைலில் கேம் விளையாடி கொண்டிருந்தான். அப்பொழுது மற்றோரு நண்பன் என்னிடம் ” இவன் ஒரு கேம் Addict, எப்பொழுதும் கேம் விளையாடிக் கொண்டிருப்பான், இவனுக்கு இதே பொழுதுபோக்கு (hobby) தான்” என்று கூறினான்.

எனக்கு அப்பொழுது ஒன்று தோன்றியது, இந்த hobby, interest, Addict மனநிலையிலும் ஒருவித Passion அடங்கி இருக்கிறதோ என்று. ஏனெனில் passion என்பது நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தை தீவிர காதலுடன் செய்வது. பணம் மற்றும் புகழ் ஈட்டும் நோக்கத்தை தாண்டி  மனதிற்கு பிடித்ததற்காக, மன நிறைவிற்காக தீவிர காதலுடன் செய்கின்ற செயலை நமது Passion என்று சொல்லலாம்.

Passion

நமக்கு passion உடைய ஒரு விஷயத்தை செய்யும்போது அதிக கவன குவிப்புடன், மிகுந்த ஈடுபாட்டுடன், ஒரு முக சிந்தனையுடன் செய்வோம். இதே போல் சில நல்ல விஷயங்களில் hobby, addict ஆக உள்ளவர்கள் அந்த விஷயங்களை மனதிற்கு பிடித்தும், மன நிம்மதியுடனும், அதிக நேரமும் செய்வார்கள். ஆக இந்த addict யிலும், hobby மனநிலைக்கு உள்ளேயும் ஒரு வித passion இருக்கிறது.

Passion உள்ள விஷயத்தில் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, குறிக்கோளை செய்து முடிக்கும் குணம், சவால்களை சந்தித்தல், சமாளித்தல், தோல்வியிலும் துவளாமல் மீண்டும் எழும் தன்மை, என்ன ஆனாலும் விட்டுவிடாத தன்மை, எதற்காவும் கனவை சமரசம் செய்யாத தன்மை போன்ற பல நேர்மறை சிந்தனைகள் அடங்கியிருக்கும்.

ஆனால் hobby, interest உள்ளே இந்த நேர்மறை எண்ணங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனுடன் பல நேர்மறை எண்ணங்கள் சேரும்போது அது passion ஆக வாய்ப்புள்ளது.

Passion ஆக மாற்றியவர்கள்

என் நண்பர் திரு.பிரவீன் குமார் அவர்கள் புதுப்புது உணவு வகைகளை சமைக்கும் பழக்கம் கொண்டவர். இதன் காரணமாக அவர்  www.awesomecuisine.com என்ற தளத்தை தொடங்கினார்.  இதில் தனது உணவு ரெசிப்பிக்களை பதிவிடுவார் அவர். இத்தளத்தை பயன்படுத்திய பலர், சில சமையல் குறிப்புகளுக்குத் தேவையான ஒரு சில பொருட்களை வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும் விலை உயர்ந்ததாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இவர் ‘Awesome chef ’ (ஆசம்செஃப்) என்ற அந்நிறுவனத்தை உருவாக்கினார்.  சுவையான சமையல் செய்முறை குறிப்புகளுடன் அதற்குத் தேவையான பொருட்களை தேவையான அளவுகளுடன் இந்நிறுவனம் விற்கிறது.

திரு.பிரசாந்த் அவர்களோ படங்கள் அதிகம் பார்க்கும் ஆர்வம், பொழுதுபோக்கு கொண்டவர். அந்த ஆர்வத்தின் காரணமாக  இப்பொழுது படங்களின் விமர்சனங்களை Tamil cinema review என்ற சேனலை தொடங்கி Youtube யில் வெளியிடுகிறார். இதை அவர் மிகச் சிறந்த தொழிலாக மாற்றியுள்ளார்.

ஊர் சுற்றுவதை கோபப்பிய யாக வைத்திருந்த பல பேர், அதை passion ஆக மாற்றி அது தொடர்பான ஆலோசகராக, வீடியோ, இணையத்தளம் போன்ற பல தொழில் வாய்ப்புகளாக மாற்றியவர்கள் உண்டு.

இதே போல் சமூக வலைத்தளத்தில் (social media) அதிக நேரம் செலவிட்ட சில பேர், அதில் உள்ள வாய்ப்புகளை அறிந்துகொண்டு digital marketing துறையில் இறங்கியவர்களும் உண்டு.

People don’t pursue careers in dance unless dance is their passion.

Hobby, Interest, Likes, Addict  உள்ள ஒரு விஷயத்தை அதை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றில் உள்ள வாய்ப்பை தெரிந்துகொண்டு, பயனுள்ள விஷயமாகவும், இன்ன பிற செயல்களாகவும், மிகுந்த தீவிர காதலுடன் செய்யும்போது நம் Hobby யும்  Passion ஆக மாறியிருக்கும்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here