தயாரிப்பு தொழில் நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு..!

0
1060

நான் ஓவன் என்னும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள்,  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. தமிழகத்தில் குறிப்பாக பிளாஸ்ட்டிக் கவர் பயன்படுத்த கூடாது என்று  தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் நான் ஓவன் மூலம் பேக் தயார் செய்து விற்பனை செய்தால் நிச்சயம் நல்ல இலாபத்தை பெறமுடியும்.

தயாரிப்பு தொழில் நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு..!

கட்டிட அமைப்பு:

இந்த நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு தொழில் (non woven bags business plan) செய்வதற்கு பத்துக்கு, பத்து அளவு கொண்ட சிறிய அறை இருந்தால் போதும்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

இந்த நான் ஓவன் பேக்ஸ் (non woven bags business plan) தயாரிப்பு தொழில் பொறுத்தவரை நான் ஓவன் பேப்ரிக் ரோல் (non woven fabric rolls) ஒரு கிலோ 150 ரூபாய். பலவித கலர்களில், அழுத்தங்களில் (ஜி.எஸ்.எம்) வாங்கிக்கொள்ளலாம். இந்த நான் ஓவன் மெட்டீரியல் ஆன்லைனில்  www.indiamart.com, www.alibaba.com, www.amazon.com போன்ற வெப்சைட்டில் குறைந்த விலையில் கிடைக்கின்றது, அவற்றை நீங்கள் ஆடர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.

தேவைப்படும் இயந்திரங்கள்:

  • Ultrasonic Sewing Machine
  • Ear Welding Machine
  • Tape Cutting Machine
  • Round Knife Cutting Machine
  • இந்த அனைத்து இயந்திரங்களும் www.indiamart.com, www.alibaba.com, www.amazon.com போன்ற வெப்சைட்டில் குறைந்த விலையில் கிடைக்கின்றது, அவற்றை நீங்கள் ஆடர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.

இந்த தொழிலை தொடங்க நினைப்பவர்கள் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை வாங்குவதே சிறந்தது. இந்த மிஷின் ரூ 31 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

இந்த மிஷினை வாங்குவதற்கு 70 சதவீதம் வரை வங்கிக் கடன் கிடைக்கிறது. மானியமாக 25 சதவீதம் மாநில அரசு மூலம் வழங்கப்படுகிறது.

முதலீடு:

முதலீடு செய்வோரிடம் 5 சதவீத பணம் இருந்தாலே போதுமானது. அதாவது குறைந்தபட்சம் ரூபாய் 4,00,000/- இருந்தால் போதும்.

தயாரிப்பு தொழில் விவரம்:

இந்த நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு தொழில் (non woven bags business plan) பொறுத்தவரை ஒரு சிப்டுக்கு 350 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பேக்ஸ் மற்றும் பல பொருட்களை நிறைய மாடல்களில் தயாரித்தால் ஆர்டர்கள் குவியும்.

சந்தை வாய்ப்பு:-

இந்த நான் ஓவனை (non woven bags business plan) பயன்படுத்தி கேரிபேக், தாம்பூலப்பை, தலையணை உறை, சீட் கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், கிளவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயார் செய்து அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யலாம்.

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் பலவகையான டிசைன்கள் பலவண்ணங்களில் தயாரித்து தருவதன் மூலம் நல்ல லாபத்தை இந்த தொழிலில் நாம் பெற முடியும்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here