பேக்கிங் கிளிப் தயாரிப்பு..! லாபம் தரும் சிறு தொழில்

0
1856

பொருட்களை பேக்கிங் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றாக விளங்குவதுதான் பேக்கிங் கிளிப். இந்த பேக்கிங் கிளிப் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த கிளிப்பினை தயார் செய்வதற்கு சில பிரத்யோக இயந்திரங்கள் உள்ளது. நல்ல தரமான இயந்திரங்களை வாங்கி இந்த பேக்கிங் கிளிப்பினை தயார் செய்து விற்பனை செய்தால் மாதம் நன்றாக சம்பாதிக்க முடியும்.

சிறுதொழில் – கட்டிட அமைப்பு:

இந்த பேக்கிங் கிளிப் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை குறைந்த பட்சம் 10க்கு10 அடி போதுமானது.

தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் ஒரு சிறு இடத்தை வாடகைக்கு பிடித்து இந்த இயந்திரத்தை கொண்டு தொழில் தொடங்க முடியும்.

சிறு தொழில் –  இயந்திரம் மற்றும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் முறை:

Single Phase Semi Automatic Packing Clip Machine இந்த இயந்திரத்தை www.indiamart.com, www.alibaba.com போன்ற வெப்சைட்டில் குறைந்த விலைகளில் கிடைக்கின்றது. எனவே தொழில் முனைவோர்கள் இந்த இயந்திரத்தினை ஆடர் செய்தும் வாங்கி கொள்ளலாம்.

இந்த பேக்கிங் இயந்திரம் செமி ஆட்டோமெட்டிக் முறையில் இயங்குகிறது. 0.5 குதிரை திறன் உள்ள மோட்டாரில் இயங்குகிறது. iso 9000 தரச்சான்றிதழ் பெற்ற மோட்டார் பொருத்தப்பட்ட கிளிப் இயந்திரத்தையே வாங்க வேண்டும்.

கிளிப் இயந்திரத்தில் பேக்கிங், கட்டிங் என இரண்டு பகுதிகள் உள்ளன. கட்டிங் பகுதியில் நாம் போடும் இரும்பு துகள்கள் ஒரு கிளிப் அளவிற்கு துண்டிக்கப்படும். பேக்கிங் மிஷின் பகுதி, துண்டிக்கப்பட்ட அந்த இரும்புத் துகளை கிளிப்பாக மாற்றிவிடும்.

இந்த பேக்கிங் கிளிப்பினை 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 மில்லி மீட்டர் அளவிலும் 1 இஞ்ச், 1.5 இஞ்ச் அளவுகளிலும் தயார் செய்யலாம். இவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்றால் இந்த மோட்டாரை சிங்கிள் ஃபேஸ் அல்லது 2 ஃபேஸ் கரண்டில் இயக்க வேண்டும்.

இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சியை அதன் விற்பனையாளரிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம். இந்த பேக்கிங் கிளிப் தயாரிப்பு தொழில் பெண்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுயதொழில் ஆகும்.

சிறுதொழில் – முதலீடு:

இயந்திரம் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 35,000/- முதல் 40,000/- வரை செலவாகும். பிறகு இதர செலவுகளுக்கு குறைந்த பட்சம் 10,000/- என்று முதலீடாக 50,000/- தேவைப்படும்.

சிறுதொழில் – விற்பனை:

தயார் செய்த கிளிப்பினை 1 கிலோ 50 ரூபாய் என்று விற்பனை செய்யலாம். லாபம் 1 கிலோவிற்கு ரூ.10 கிடைக்கும். வாடகை, மின்சாரம், ஊழியர் சம்பளம் என்று சிலவற்றை கழித்தால் கூட குறைந்த பட்சம் ரூ. 5 லாபமாக கிடைக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 கிலோ பேக்கிங் கிளிப்பினை தயார் செய்தால் ரூபாய் 750/- இலாபமாக கிடைக்கும்.

சிறுதொழில் – சந்தை வாய்ப்பு:

பேக்கிங் செய்யப்படும்  அனைத்து பொருட்களுக்கும் பேக்கிங் கிளிப் அவசியம் தேவைப்படும் என்பதினால், இதன் தேவை சந்தைக்கு மிகவும் தேவை. அதேபோல்  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கிளிப்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் வருடம் முழுவதும் தங்கு தடையின்றி இந்த தொழிலை செய்யலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here