பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் முழு விவரங்கள்..!

0
976

இப்போதெல்லாம் பிரஷர் குக்கர் இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பிரஷர் குக்கரை அனைவரது வீட்டிலும் பயன்படுத்துகின்றோம். எனவே நல்ல பொருளாதார வசதி உள்ளவர்கள், நடைமுறை மூலதனம் அதிகம் போடக்கூடிய தகுதி உள்ளவர்கள், பெரிய அளவில் விளம்பரம் செய்யும் எண்ணம் உடையவர்கள் இத்தொழிலை சிறப்பாக செய்யலாம்.

குறிப்பாக பல இடங்களில் பாத்திரக்கடை வைத்திருப்பவர்கள் இந்த சுயதொழில் துவங்கினால் நல்ல இலாபம் பார்க்க முடியும். குக்கரில் நேரம், எரிபொருள் செலவு குறைகிறது. எனவே 3, 5, 10 லிட்டர் கொள்ளளவுகளில் தயாராகி வருகிறது. 3 லிட்டர் அதிக அளவில் தயாரித்தால் விற்பனை அதிகமாகும்.

தேவைப்படும் இயந்திரங்களும் அதன் விலைகளும்:

இயந்திரங்கள்  அதன் விலைகள் 
1) கில்லட்டின் ஷீயரிங் மிஷின் 1 ரூ.2,00,000/-
2) சர்க்கிள் கட்டிங் மிஷின் 1 ரூ.50,000/-
3) பிகிள் பிரஸ் (மோட்டாருடன்) 1 ரூ.6,00,000/-
4) ஹைடிராலிக் பிரஸ் (50 டன்) 1 ரூ.2,50,000/-
5) பவர் பிரஸ் (50 டன்) 1 ரூ.2,00,000/-
6) லேத் மிஷின் (மோட்டாருடன்) 1 ரூ.1,40,000/-
7) டிரில்லிங் மிஷின் 1 ரூ.10,000/-
8) பப்பிங், பாலிஷிங் மிஷின் 2 ரூ.30,000/-
9) பெஞ்ச் கிரைண்டர் 2 ரூ.20,000/-
மொத்தம்: ரூ.15,00,000/-

 

பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் விவரம்:

8 மணி நேரத்தில் 100 குக்கர்கள் வரை தயாரிக்கலாம். வாரம் 600 முதல் 1000 வரை தேவையை பொறுத்து தயாரிக்கலாம்.

தேவையான மூலப்பொருட்கள், அலுமினிய அலாய் தகடுகள், ப்ரெஸ்ஸர் ரெகுலேட்டர், பேக்லைட் ஹண்ட்ஸ், கேஸ்கட், பிளக்ஸ், ஸ்க்ரூக்கள் போன்ற பல பொருட்கள், அட்டைப் பெட்டிகள் சென்னை மற்றும் முக்கிய தொழில் நகரங்களில் கிடைக்கிறது. இவற்றை தயாரிப்பது என்பது எளிது. பெரிய தொழில்நுட்பம் தேவையில்லை.

முதலில் தகடுகளை வட்ட வடிவில் வெட்டி, தொடர்ந்து இதர பாகத்தை தயாரித்து துளையிட்டு அசெம்பிள் செய்து பின்னர் பேக்கிங் செய்வார்கள்.

தயாரிப்பு தொழில் – முதலீடு:

1) கட்டிடம் (3000 ச.அடி மாத வாடகை ரூ.15000) அட்வான்ஸ் – ரூ.1,00,000/-
2) இயந்திரங்கள் – ரூ.15,00,000/-
3) இயந்திரங்கள் நிறுவுதல், பரிசோதனை கருவிகள், நடைமுறை மூலதனம் – ரூ.4,00,000/-

மொத்த முதலீடு – ரூ.20 லட்சம்.
முயற்சியாளர் மூலதனம் – ரூ.6,00,000/-
காலவரை கடன் (வங்கி) – ரூ.14,00,000/-
மொத்தம் – ரூ.20,00,000/-
இதில் இயந்திர விலையில் 25% இலவச மானியம் பெறலாம்.

பணியாளர்கள்:

  1. நிர்வாகி – 1
  2. மேற்பார்வையாளர் – 1
  3. வேலையாட்கள் – 3
  4. உதவியாளர்கள் – 4
  5. பேக்கிங் – 1
    ஆக 10 பேருக்கு வேலை தரலாம்.

தயாரிப்பு தொழில் – லாபம்

வருடம் ரூ.5.5 முதல் ரூ.7.5 லட்சம் வரை லாபம் பெறலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here