வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்..! Suya tholil..! Business ideas in tamil..!

0
5152

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள் / Suya tholil:- பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இப்போது அனைவருமே சுயமாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டது. அந்த வகையில் இந்த பகுதியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய தொழில்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் (Suya tholil) பட்டியல்கள் சிலவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

ஊறுகாய் தயாரிப்பு:-

இந்தியாவின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஊறுகாய்க்கு மிக முக்கிய இடமுண்டு. இந்தியாவில் உள்ள வீடுகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஓர் ஊறுகாயாவது கட்டாயம் உணவில் பயன்படுத்துவார்கள்.

எனவே சிறுதொழிலாக ஊறுகாய் தயாரிப்பை தொடங்குபவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பான தொழில் மட்டுமன்றி எளிமையான தொழிலும் கூட. மேலும், ஊறுகாய்க்கு இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் ரூ.20,000/- இருந்தாலே போதும், ஊறுகாய் தயாரிப்புத் தொழிலில் துணிந்து இறங்கலாம்.

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் – காட்டன் பட் தயாரிப்பு
cottonbuds
காதுகள் சுத்தம் செய்யும் காட்டன் பட்ஸ் தயாரிப்பு மிகவும் சுலபமான தொழில். வீட்டில் இருந்தே அதற்குத் தேவையான பொருட்களை வரவழைத்து தயார் செய்யலாம். காட்டன் பஞ்சு, குச்சிகள் மற்றும் பேக்கிங் செய்யும் பொருட்கள் இருந்தால் போதும். இதை தயார் செய்ய சிறிய இயந்திரங்கள் உள்ளன.

காட்டன் பட்ஸ் தயாரிக்கும் தொழில் தொடங்க குறைந்தது 20,000/- ரூபாய் முதல் 40,000/- ரூபாய் இருந்தால் போதுமானது. இதற்கானத் தேவை இருந்து கொண்டே இருக்கும் என்பதால் சப்ளை செய்து விற்பனை செய்து லாபம் காணலாம்.

சிறு தொழில் பட்டியல்கள் / Business ideas in tamil / Suya tholil
தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழில்:-
முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளப்போகிற சிறு தொழில் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, அதாவது எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் இயற்கை முறையில் தேங்காய் எண்ணெய் தயார் செய்வது பற்றிதான்.

இயற்கையான முறையில் எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்தால், நல்ல வருமானம் பெறலாம்.

இந்த தொழில் துவங்குவதற்கு குறைந்த முதலீடு போதுமானது. மேலும் ஒரு சென்ட் அளவு உள்ள இடம் வசதி இருந்தால் இந்த சிறு தொழிலை மிக எளிதாக வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம்.

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயின் விலை இப்பொழுது சந்தையில் 250/- ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கின்றனர்.

இதற்கான மூலப்பொருள் நன்கு காய்ந்த தேங்காய் தான், இது மிக எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மூலப்பொருள் தான். இந்த உலர்ந்த தேங்காயினை விவசாய மக்களிடமிருந்தோ அல்லது தேங்காய் வியாபாரிகளிடமிருந்தும் எண்ணெய் உற்பத்திக்கு வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழிலுக்கு குறைந்தபட்சம் 1,00,000/- ரூபாய் இருந்தால் போதும். தினமும் நல்ல இலாபம் பார்க்கலாம்.

Homemade Biscuits:

பிஸ்கட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை வீட்டில் இருந்தபடி ஆண், பெண் இருபாலரும் செய்யக்கூடிய ஒரு சிறந்த சிறு தொழிலாகும். என்னதான் பலவகையான பிஸ்கட் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும். Homemade Biscuits-க்கு மக்களிடம் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. எனவே வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்க நினைப்பவர்கள் தாராளமாக இந்த பிஸ்கட் தயாரிப்பு தொழிலை துவங்கலாம்.

இந்த பிஸ்கட் தயாரிப்பு தொழிலுக்கு முக்கியமாக தேவைப்படும் மூலப்பொருட்கள் கோதுமை மாவு, கிரெண்டர், மிக்சி, சர்க்கரை மற்றும் பிஸ்கட் தயாரிக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்டவ் இவை அனைத்தும் ரூ.30,000/- யில் இருந்து ரூ.50,000/- குள் வாங்கி விடலாம்.

இந்த Homemade biscuits தயாரிப்பு பொறுத்தவரை சந்தையில் அதிக அளவு விற்பனையாகக்கூடிய ஒரு உணவு பொருள் என்பதால். வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்க நினைப்பவவர்கள் தாராளமாக இந்த தொழிலை துவங்கி நல்ல லாபம் பார்க்கலாம்.

சிறு தொழில் பட்டியல்கள் / Business ideas in tamil / Suya tholil
Homemade Organic Products Business Ideas in Tamil:-
Homemade Organic Products
இயற்கை சார்ந்த உணவு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை இயற்கையான முறையில் தயார் செய்து விற்பனை செய்வது. அதாவது வீட்டில் இருந்தபடி தங்களுடைய ஒய்வு நேரங்களில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி ஷாம்பு, சோப்பு, கூந்தல் எண்ணெய், குளியல் பொடி போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்யலாம்.

இந்த ஆர்கானிக் பொருட்களை இப்பொழுது மக்கள் அதிகம் வரவேற்கின்றன, எனவே இம்மாதிரியான பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானத்தை பெறமுடியும்.

உதாரணத்திற்கு கற்றாழையை பயன்படுத்தி கற்றாழை ஷாம்பு, கற்றாழை குளியல் சோப்பு, கற்றாழை எண்ணெய் ஆகியவற்றை தயார் செய்து விற்பனை செய்யலாம்.

உணவு சார்ந்த பொருட்களாக இருந்தால் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை பயன்படுத்தி ஹெல்த் ட்ரிங் பவுடர், ஆளிவிதை மற்றும் கொள்ளு பயிர்களில் செய்ய கூடிய இட்லி பொடி என்று பலவகையான உணவு பொருட்களை தயார் செய்து மக்களிடம் விற்பனை செய்யலாம், இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.

அப்பள தொழில்:-

இந்தியாவில் அதிகம் ஏற்றுமதியாகும் உணவு பொருட்களில் மிகவும் முக்கியமாக திகழ்வது அப்பளம் தான். எனவே பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழிலாக அப்பளம் தயாரிப்பு தொழில் திகழ்கின்றது.

இந்த அப்பளம் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை சுவை, கைப்பக்குவம் மற்றும் தரம் இவை அனைத்தையும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எனவே நல்ல கைப்பக்குவத்துடன், சுவையாக மற்றும் நல்ல தரமாக தயாரித்து மக்களிடம் விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் இந்த அப்பளம் தயாரிப்பு தொழிலில்.

இந்த அப்பளம் தயாரிப்பு தொழிலுடன் வத்தல், வடவம், மசாலா பொருட்கள், ஊறுகாய் போன்றவற்றை தரமாக தயார் செய்து விற்பனை செய்தால் நிச்சயம் நல்ல வருமானத்தை வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம்.

சிறு தொழில் பட்டியல்கள் / Business ideas in tamil / Suya tholil
20,000 முதலீட்டில் ஒரு சுவையான தொழில் – வீட்டிலிருந்தே மாதம் 30,000 சம்பாதிக்கலாம்..!
Biryani business
சுயமாக வீட்டில் இருந்த படியே குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ஒரு சுவையான சுயதொழில் வாய்ப்பு. உங்களிடம் உழைக்கும் மனமும், கைப்பக்குவமும் இருந்தால் இந்த தொழிலில் சர்வசாதாரணமாக மாதம் 30,000/- வரை சம்பாதிக்கலாம்.

இந்த தொழில் யாருக்கு ஏற்ற தொழில் என்று பார்த்தால், சொந்தமாக வீடு இருந்து, வெளியே சிறிய இடம் இருந்து அந்த இடத்தில தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும், குறிப்பாக சமையலில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கும், இது ஒரு அருமையான தொழில்.

அதாவது பிரியாணி கடை வைத்து அவற்றின் மூலம் தினமும் வருமானம் பார்ப்பது எப்படி என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இடம்:
10-க்கு, 10 அளவு கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் போதும் இந்த பிரியாணி கடை வைத்து அதிக வருமானத்தை பார்த்துவிடலாம்.

முதலீடு:
ஒரு பெரிய அடுப்பு, பிரியாணி செய்வதற்கு பாத்திரங்கள், சிலிண்டர், பேக்கிங் செய்வதற்கு கவர் போன்றவை வாங்குவதற்கு 10,000/- முதல் 15,000/- வரை தேவைப்படும்.

6 கிலோ அரிசியில் பிரியாணி செய்ய ஆகும் செலவு:

6 கிலோ பிரியாணி அரிசி மற்றும் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 1,500/- செலவாகும்.

இதன் மூலம் 45 பாக்கெட் பிரியாணி கிடைக்கும். ஒரு பிரியாணி பாக்கெட்டில் ஒரு பீஸ் சிக்கன் மற்றும் ஒரு முட்டை வைத்து ரூபாய் 75-க்கு விற்பனை செய்யலாம். தினமும் 45 பாக்கெட் பிரியாணி விற்பனை செய்தால் 3,375/- ரூபாய் கிடைக்கும்.

செலவுகள் போக தினமும் 1500/- ரூபாய் லாபம் கிடைக்கும். இதன் மூலம் மாதம் 30,000/- ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தொழில் குறிப்பு:-
இந்த தொழில் பொறுத்தவரை, சுவை மற்றும் கை பக்குவம் இரண்டும் அவசியம்.

இவை இரண்டும் இருந்தால் போதும் இந்த தொழில் தினமும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் தினமும் அதிக வருமானம் பெறலாம்.

சில நேரங்களில் பிரியாணி மீந்து விட்டால் அவற்றை வீணாக்காமல் பிர்ஜியில் வைத்து, பின் இட்லி பானையில் பிரியாணியை அவித்தும் விற்பனை செய்யலாம். இதனால் அவற்றில் இருக்கும் சுவையும், மனமும் மாறாது.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here