MSME-DI வரையறுக்கும் – தொழில் நிறுவனங்கள் நலிவடைவதற்கான சில முக்கிய காரணங்கள்:

0
742

நிறுவனம் இலாபகரமான முறையில் இயங்குவது தொழில் முனைபவருக்கு உற்சாகமூட்டும் விஷயம். ஆனால் சில நேரங்களில் தொழிலில் தேக்கமும், நலிவும் ஏற்படுகின்றன. திட்டம் தீட்டி முறைப்படி தொழில் நடத்தினாலும் வேறு சில சூழ்நிலைகளின் காரணமாக தொழில் நலிவுறுதல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

MSME-DI  வரையறுக்கும் -தொழில் நலிவடைவதற்கான சில முக்கிய காரணங்கள் :

போதிய நிர்வாக அனுபவம் இல்லாமை.

தொழிலை நடத்துவதற்குரிய முறையான திட்டம் மற்றும் எவ்வித எதிர்கால திட்டமும் தீட்டாமை,

உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தில் உள்ள குறைபாடு,

எவ்வித குறிக்கோள் இன்றி செயல்படுதல்.

உற்பத்தி செய்யும் பொருள் பற்றிய முழு விவரங்களும் தெரியாமல் இருத்தல்,

பொருட்களுக்கான தேவை இருந்தும் உற்பத்தியை பெருக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருத்தல்,

உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கு தேவையான தொழில்நுட்பம் பற்றிய போதிய அறிவு இல்லாமை,

உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்த தெரியாமை,

விற்பனையில் உள்ள குறைபாடு மற்றும் விற்பனையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருத்தல்,

கணக்கு, வழக்குகள் முறை சரியில்லாதிருத்தல்,

முறையான பட்ஜெட் தயாரிக்காதது,

நுகர்வோர் மற்றும் பொருட்களை வாங்குபவருக்கு ஒழுங்கான சேவைகள் அளிக்காமல் இருத்தல்,

தேவைக்கு மேற்பட்டத் தொகையை இயந்திரம், நிலம், கட்டிடம் போன்ற அசையாச் சொத்துகளில் முடக்கி வைத்தல்,

மூலப்பொருட்கள் தட்டுபாடு,

கையிருப்பு சரக்குகளில் சரியாக கவனம் செலுத்தாமல், அதனால் நஷ்டம் ஏற்படுதல்,

செய்யக் கூடாதவற்றைத் தவிர்த்தாலே, நஷ்டமும், தேக்கமும் இல்லாமல் தொழிலைச் செய்யலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here