உற்பத்தி செலவு 30 ரூபாய், விற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.!

0
1150

Mop Making Business:- புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது அன்பான வணக்கம்.. இன்று நாம் வீட்டில் இருந்து மிக குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில் வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது வீடு துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் மோப் (Mop) தயார் செய்து எப்படி விற்பனை செய்யலாம்..? என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகின்றோம். இந்த சுயதொழில் பொறுத்தவரை ஆண், பெண் இருபாலரும் வீட்டில் இருந்தபடியே, மிக குறைந்த முதலீட்டில் செய்யலாம். மக்களிடம் அதிக வரவேற்பு உள்ள பொருட்களில் தரை துடைப்பானிற்கு முதலிடம் உண்டு என்பதால் நீங்கள் தயாரிக்கும் அனைத்து தரை துடைப்பான்களும் சந்தையில் மிக சுலபமாக விற்பனையாகும். எனவே வீட்டில் குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க வேண்டும் என நினைக்கும் அனைவரும் இந்த மோப் தயரிப்பு தொழிலை தயக்கம் இல்லாமல் துவங்கலாம்.

சரி இப்பொழுது இந்த மோப் தயாரிப்புக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் என்ன? அவை எங்கு கிடைக்கும்..? மோப் தயாரிப்புக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்..? போன்ற விவரங்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

இடம்:-
இந்த மோப் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் என்பதால், வீட்டில் ஒரு சிறிய அரை இருந்தால் போதும். இதற்கென்று தனியாக இடம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இயந்திரம்:-

இயந்திரத்த்தின் பெயர்: Semi Automatic Mop Making Machine
விலை: குறைந்தபட்ச விலை ரூபாய்.7,000/-
இந்த மோப் தயார் செய்வதற்கு அவசியம் Semi Automatic Mop Making Machine-யின் தேவைப்படும். இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அங்கு ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் இந்த இயந்திரத்தை ஆர்டர் செய்து வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.indiamart.com/
தேவைப்படும் மூலப்பொருட்கள்:-
இந்த மோப் தயாரிப்பிற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்னவென்றால் காட்டன் கயிறு (Cotton Mop Yarn), கிளிப் (Plastic Wet Mop Clip), ஸ்டிக் (Mop Stick) இவை அனைத்தும் அவசியம் தேவைப்படும், இது போக தாயார் செய்த தரை துடைப்பனை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர் தேவைப்படும். இவை அனைத்து மூலப்பொருட்களை அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அங்கு ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் இந்த இயந்திரத்தை ஆர்டர் செய்து வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Mop Yarn link: https://dir.indiamart.com/
Mop Clips link: https://dir.indiamart.com/
Mop Stick link: https://www.indiamart.com/

தயாரிக்கும் முறை:-
முதலில் mop yarn கயிறினை இரண்டுமுழம் நீளத்திற்கு 200 கிராம் அளவிற்கு கட் செய்து எடுத்து கொள்ளுங்கள். பின் கட் செய்த கயிற்றின் நடுப்பகுதியில் ஒரு கிளிப்பை செட் செய்ய வேண்டியதாக இருக்கும். அதாவது கீழ் காட்டப்பட்டுள்ளது போல் கயிற்றை அந்த கிளிப்பில் செட் செய்ய வேண்டும்.

இவ்வாறு செட் செய்த கிளிப்பினை இயந்திரத்தில் பொருந்த வேண்டும். அதாவது கீழ் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு சிறிய பவுல் போன்று இருக்கு அவற்றில் தயார் செய்த கிளிப்பினை செட் செய்ய வேண்டும். பின் இயந்திரத்தின் பக்கவாட்டில் அதனை வைத்து ஒரு முறை அழுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் கயிறு கிளிப்பில் நன்றாக செட் ஆகிவிடும். அதன்பிறகு mop stick-யில், தயார் செய்த மோப்பை செட் செய்ய வேண்டும்.

இறுதியாக தயார் செய்த தரை துடைப்பானை பேக்கிங் செய்து சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பலாம்.

வருமானம்:-
ஒரு Mop தயார் செய்வதற்கு அடக்க விலை ரூபாய் 30 என்று வைத்துக்கொள்வோம், 30 ரூபாய் தயார் செய்த இந்த மோபை சந்தைகளில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் 20 ரூபாய் லாபம் பெறலாம். தினமும் 200 Mop Stick தயார் செய்தால் 4,000/- ரூபாய் லாபம் கிடைக்கும். மாதத்திற்கு 1,20,000/- லாபம் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு:-
நாம் தயார் செய்த Mop Stick-ஐ நம் ஊரில் உள்ள சிறிய மல்லிகை கடை, டிபாட்மென்ட் ஸ்டோர் போன்ற இடங்களில் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம். மக்களிடம் அதிக வரவேற்பு உள்ள ஒரு பொருள் என்பதால். மிக எளிதில் தங்களுடைய தயாரிப்புகள் விற்பனையாகிவிடும்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here