உங்கள் ஊழியர்களை சிறப்பாக செயல்பட வைக்க மற்றும் அவர்களை தக்க வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள் !!

0
678

சிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் (executive) இருக்கவேண்டும். அப்போது தான் ஊழியர்கள் (employee) எப்போதும் நம்முடன் இருப்பார்கள். இதோ அதற்கு சில ஆலோசனைகள் !!

உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும்போது, அதை எப்படி செய்யவேண்டும் என்று தெளிவாக சொல்லவேண்டும். முடிந்தால் அதை எழுதி கொடுத்தால் இன்னும் சிறப்பாக வேலை நடக்கும். நீங்கள் பட்டும்படாமல் ஒரு விசயத்தை சொல்லிவிட்டு பின் அது நடைப்பெறவில்லை என்று கத்தினால் யாருக்குத்தான் உங்களை பிடிக்கும்.

ஒரு பணியை ஒப்படைக்கும் போது அந்த பணி முடிவடைய வேண்டிய நேரத்தையும் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வேலை முடியும். சரியான இடைவெளியில் அவர்களை அந்த வேலை செய்கிறார்களா என கண்காணிக்கவேண்டும். அதே சமயம் ஆயிற்றா !! ஆயிற்றா !! என்று கேட்டுக்கொண்டே இருக்கக் கூடாது.

நாம் மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக நம் ஊழியர்களை மற்றவர்கள் முன் திட்டுவதோ கண்டிப்பதோ கூடாது.

நம் ஊழியர்களுக்கு இந்த விசயத்தில் நாம் இப்படித்தான் எதிர்பார்ப்போம் என தெளிவாக தெரியவேண்டும். அப்போது தான் ஒரு ஒழுங்குமுறை இருக்கும்.

எந்த பிரச்சனைகளிலும் நம் பணியாளர்களை விட்டுக் கொடுக்ககூடாது.

எப்போதும் நாம் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கவேண்டும், அப்போதுதான் நம் ஊழியர்களும் உற்சாகமாக வேலை செய்வார்கள்.

நாம் செய்யும் எந்த வேலையையும் திருத்தமாகவும் நேர்த்தியாகவும் செய்யவேண்டும் அப்போதுதான் நம் ஊழியர்களும் அப்படி செய்ய முற்படுவார்கள்.

பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றை அலுவலகத்தில் கொண்டாடலாம் இதனால் அவர்களிடையே உற்சாகம் பிறக்கும்.

நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் பிரச்சனைகளை புரிந்து வேலை வாங்கவேண்டும்.

நேர்மை அனைத்து மட்டத்திலும் இருக்கவேண்டும், அதை நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.

நம்மிடம் வேலைப்பார்ப்பவர்கள் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளவேண்டும், நம் தவறுகளை சொல்லுவதன்மூலம் அவர்கள் நமக்கு உதவிதான் செய்கிறார்கள்.

நீங்கள் உங்கள் உறவுகளை வெற்றி பெற்றவர்களிடம் மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் முடியாது, தோல்வி, பயம், போன்ற நெகடிவ் வைபரேசன் (எதிர்மறை) நம்மை தீண்டாது.

கேட்பதை, எதிர்பார்ப்பதை விட அதிகமாகவும், தரமாகவும். வேகமாகவும் கொடுப்பதால், நாம் மற்றும் நம் நிறுவனம் எப்போதுமே பந்தயத்தில் முதலில் இருப்போம்.

இது போதும் என்ற எண்ணத்தை விட்டு விட வேண்டும்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here