ATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் (ATM Milk vending Machine)

0
1135

புதிய தொழில் (95) – ATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் (ATM Milk vending Machine)

சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

உலகின் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு பால் உற்பத்தி மிக அதிகம். மத்திய, மாநில அரசுகள் பால் உற்பத்தியில் அதிக கவனம் கொண்டுள்ளதால் பாலின் தேவை அதிகம். சிறு குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் உகந்தது. இது மிகவும் சத்துள்ளது மேலும் எளிதில் ஜீரணமாக கூடியது.

நாம் இப்போது பதப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பதை வாங்குகிறோம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பாலை வாங்கி அதை மூன்று நிலைகளில் பதப்படுத்தி அதில் இருந்து கொழுப்புச்சத்தை நீக்கி பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறார்கள் இதனால் நமக்கு சுத்தமான கொழுப்பு நீக்கப்படாத நல்ல பால் கிடைப்பதில்லை. தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை அரசு தடை செய்வதால் நாம் பிளாஸ்டிக் பாக்கெட் பால்களை வாங்க முடியாது பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் சில பால் வியாபாரிகள் டின்களில் பாலைக் கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்யும் வியாபாரிகள் சில நேரங்களில் ரசாயன மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்கிறார்கள் இந்தப் பால் காலை அல்லது மாலை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் கிடைக்கும் சுத்தமான பால் எந்தவித ரசாயனமும் மற்றும் தண்ணீரும் கலைக்கப்படாமல் அப்படியே ஏடிஎம் பால் வெண்டிங் நிலையத்தில் சேமித்து வைத்து வேண்டும்போது நுகர்வோர் ஏடிஎம் கார்டு போன்ற பயன்படுத்தியும் மற்றும் பணமும் காசும் போட்டு தேவைக்கான பாலை தங்களுடைய பாத்திரத்தில் பிடித்துச் செல்லலாம் வீட்டுக்கு அருகில் இருக்கும் படி அமைவதால் எந்த நேரத்திலும் குளிரூட்டப்பட்ட சுத்தமான எந்தவிதமான கைபடாத ரசாயனம் மற்றும் தண்ணீர் கலக்காத பால் நியாயமான விலையில் கிடைக்க இந்தத் திட்டம் செய்கிறது வழிவகை

 சிறப்பம்சங்கள் :-

Ø  பாலில் இருந்து தயிர், மோர், நெய், பன்னீர் போன்ற பொருட்கள் தயாராகின்றன. மேலும் பால் மற்றும் நெய்யில் இருந்து இனிப்பு பலகாரங்களும் செய்யப்படுகின்றன.

Ø  கறந்த பாலை சில்லிட்டு குளிரூட்டி விற்பதால் பால் உடனே கெடாமல் இருக்கும்.

Ø  குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் நல்ல லாபத்துடன் நடத்தலாம்.

Ø  இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.(DED)

திட்ட மதிப்பிடு    : 3.00 லட்சம்

அரசு மானியம்: 25% DED (NABARD Scheme)











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here