இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

0
75
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து உள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் இதன் 6 ஜிபி ரேம் மாடல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் முந்தைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் கேலக்ஸி ஏ51 மாடலின் 8 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஹெச்எஸ்பிசி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புதிய விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போன் துவக்க விலை ரூ. 22499 என மாறி உள்ளது.
 கேலக்ஸி ஏ51
தற்சமயம் கேலக்ஸி ஏ51 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23999 என மாறி இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 25999 என மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் இதே விலையில் ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் ஏப்ரல் மாதம் ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 இல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், இதன் விலை ரூ. 1251 வரை உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மே மாதத்தில் கேலக்ஸி ஏ51 மாடலின் 8 ஜிபி ரேம் வெர்ஷன் ரூ. 27999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் இதன் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 25999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு முன்னணி வலைதளங்கள் மற்றும் சாம்சங் இந்தியா இ ஸ்டோரில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here