கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

0
966
கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
முன்னதாக மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் மேலாளர் மேரியா கியூரோஸ் தெரிவித்து இருந்தார். எனினும், இந்த மாடலின் சரியான பயன்பாடு பற்றி தெளிவற்ற சூழல் நிலவுவதாக கூகுள் தெரிவித்து இருந்தது.
தற்சமயம் இணையத்தில் லீக் ஆகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய பிக்சல் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்த மாடல் வெளியாக ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும் என தெரிகிறது. ரேவென் மற்றும் ஒரியோள் எனும் குறியீட்டு பெயர்களில் பிக்சல் 6 வேரியண்ட்கள் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு மடிக்கக்கூடிய சாதனம்
இவற்றுடன் பார்பெட் மற்றும் பாஸ்போர்ட் என்ற பெயர்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் உருவாகி வருகின்றன. இதில் பார்பெட் பெயரில் உருவாகும் மாடல் பிக்சல் 5ஏ என்றும் பாஸ்போர்ட் பெயரில் உருவாகும் மாடல் மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது.
புதிய பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாக இருக்கும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ மற்றும் இதர மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும்.
பிக்சல் 6, பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்கள் 2021 ஆண்டின் இறுதி காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என்றும் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் 2021 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here