குறைந்த விலையில் நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

0
935
அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமான நாய்ஸ் இந்தியாவில் புதிதாக கலர்ஃபிட் நேவ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஜிபிஎஸ் வசதி கொண்ட நாய்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக இருக்கிறது.
புதிய கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் 1.4 இன்ச் 320×320 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன், பில்ட் இன் ஜிபிஎஸ், கஸ்டமைஸ் செய்யக்கூடிய கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
 நாய்ஸ் கல்ஃபிட் நேவ்
நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச்
– 1.4 இன்ச் 320×320 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன்
– ப்ளூடூத் 4.2
– கிளவுட் சார்ந்து இயங்கும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள்
– குறைந்த எடை, இம்கேட்-ரெசிஸ்டண்ட், பாலிகார்போனேட் ஷெல் மற்றும் சிலிகான் ஸ்டிராப்
– 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
– 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், இன்-பில்ட் ஜிபிஎஸ், ஸ்லீப் டிராக்கிங்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– 24×7 இதய துடிப்பு சென்சார்
– அழைப்புகள், டெக்ஸ்ட், ஆப் மற்றும் சமூக வலைதள நோட்டிஃபிகேஷன்கள்
– 180 எம்ஏஹெச் பேட்டரி
நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 4499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அமேசான் பிரைம் டே விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here