ரியல்மி 6 ப்ரோ புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

0
1032
ரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ப்ரோ லைட்னிங் புளூ மற்றும் லைட்னிங் ஆரஞ்சு நிற வேரியண்ட்கள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்.பி. சென்சார் மற்றும் 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
 
 ரியல்மி 6 ப்ரோ
 
ரியல்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார்
– 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.4
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.1, சோனி IMX1471
– 8 எம்.பி. இரண்டாவது 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்
ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் லைட்னிங் ரெட் நிற வேரியண்ட் 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் மற்றும் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here