பெட் பாட்டில்கள் தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..!

0
1097

கண்ணாடி பாட்டில்களுக்கு நிகராக பயன்படுத்த கூடியவைதான் பெட் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்களை விட அதிகம் பாதுகாப்பும், காற்றழுத்தத்தை தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவைதான் இந்த பெட் பாட்டில்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடலாம் அல்லது மறு சுழற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். என்பதால் பெட் பாட்டில் தயாரிப்பு தொழில் சந்தையில் நிறைய வரவேற்பு உள்ளது.

மருந்து மற்றும் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை அடைத்து விற்பதற்கும், ஊறுகாய், பினாயில் போன்றவை அடைப்பதற்கும் ஏற்ற சின்ன சின்ன பாட்டில்களை தயார் செய்து விற்பனை செய்யலாம். எந்தப்பகுதியிலும் இந்த தயாரிப்பு தொழில் தொடங்கலாம் என்பது இதிலிருக்கும் கூடுதல் சிறப்பு.

பெட் பாட்டில் தயாரிப்பு தொழில்:

பெட் என்பது கிரானுவல் டைப்பில் வரும். இதனை இன்ஜெக்சன் மோல்டிங் என்கிற முறையில் ப்ரீபார்ம் (PREFORM) என்கிற சிறிய பாட்டில்களாக தயாரிப்பார்கள்.

இது சிறிய காற்று அடைக்கப்பட்ட பலூன்போல இருக்கும். இதுதான் பெட் பாட்டில் தயாரிப்பின் மூலப்பொருள்.

பெட் பாட்டில் தயாரிக்க அந்த இயந்திரங்களில் பொருத்துவதற்கு தேவையான அளவுகளில் அச்சுகளை இணைக்க வேண்டும்.

இந்த இயந்திரத்துடன் காற்று அழுத்தம் உள்ள கம்ப்ரஸர் இணைப்பு வேண்டும்.

இந்த ப்ரீபார்ம் பாட்டில்களை இயந்திரத்தில் பொருத்தி அழுத்தமான வெப்பக் காற்றை உள்ளே செலுத்தினால் சிறிய பாட்டில் போன்ற வடிவம் விரிவடைந்து, நாம் பொறுத்தியுள்ள அச்சின் வடிவம் பெற்று பாட்டில்களாக மாறும்.

அவற்றை வெளியே எடுத்து குளிர்வித்து அதற்கான மூடியை இணைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

பொதுவாக, பெட் பாட்டில்களுக்கான ப்ரீபார்ம் விற்பனை செய்பவர்களே பெட் பாட்டில் மூடியையும் தயாரித்து தருவார்கள். நாம் மூடியுடனோ அல்லது மூடி இல்லாமலோ விற்பனை செய்ய முடியும்.

தயாரிப்பு தொழில் – திட்ட அறிக்கை:

பெட் பாட்டில் தயாரிக்கும் ஒரு இயந்திரத்தை வாங்க ரூ. 5 லட்சம் ஆகும். நாம் இரண்டு இயந்திரங்கள் வாங்கலாம். ஒரு மணி நேரத்தில் 1200 பாட்டில்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கான கம்ப்ரஸர் இயந்திரம் ரூ.6 லட்சம் ஆகும்.

  • இரண்டு இயந்திரங்கள் வாங்க : 10 லட்சம்
  • கம்ப்ரஸர் இயந்திரம் வாங்க : 6 லட்சம்
  • மின்சாரம் செலவு : 1 லட்சம்
  • நடைமுறை மூலதனம் : 6 லட்சம் (அ) 3 லட்சம்.

நமது ஒரு நாள் உற்பத்தியான 14 ஆயிரம் பாட்டிலுக்கு 280 கிலோ ப்ரீபார்ம் தேவை. ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என கணக்கிட்டால், 8 டன் மூலப்பொருள் தேவைப்படும். (280 x 25 = 7,000 கிலோ)
ஒரு டன் மூலப்பொருள் விலை ரூ.1.40 லட்சம் எனில், 8 டன்னுக்கு ரூ.11.20 லட்சம் தேவை. நடைமுறை மூலதனம் குறைவாக இருப்பவர்கள் உற்பத்தியை குறைத்து கொள்ளலாம்.

தயாரிப்பு தொழில் – மானியம்:

பாரதப்பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் 25 முதல் 35% வரை மானியம் பெற முடியும். அல்லது நீட்ஸ் திட்டத்தில் 25% மானியத்துடன் துவங்கலாம்.

உற்பத்தி:

ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் பாட்டில்கள் வீதம் ஒரு ஷிப்ட்டுக்கு 7 ஆயிரம் பாட்டில்கள் வரை செய்யலாம். நாம் இரண்டு இயந்திரங்களை வைத்திருப்பதால் 14 ஆயிரம் பாட்டில்கள் வரை உற்பத்தி செய்ய முடியும்.

ப்ரீபார்ம் பாட்டில்கள் ஒரு கிலோ ரூ.140/-. ஒரு பாட்டில் 19 முதல் 21 கிராம் வரை வரும். நாம் ஒரு லிட்டர் அச்சில் தயாரிப்பதாக எடுத்து கொண்டால், ஒரு கிலோ ப்ரீபார்ம் மூலம் 50 பாட்டில்கள் கிடைக்கும்.

சுயதொழில் சந்தை வாய்ப்பு:

தயாரித்த பாட்டில்களை அனைத்து விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யலாம். குறிப்பாக மருந்து மற்றும் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை அடைத்து விற்பதற்கும், ஊறுகாய், பினாயில் போன்றவை அடைப்பதற்கும் ஏற்ற சின்ன சின்ன பாட்டில்களை தயார் செய்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் அதிக லாபமும் பெறலாம்.

பெட் பாட்டில் தயாரிக்கும் இயந்திரம்:











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here