அதிக லாபம் தரும் புதிய தொழில்..! Paper Box Making Business..!

0
1553

Paper Box Making Business:- புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பான வணக்கம். இன்று நாம் பேக்கேஜிங் துறைகளுக்கு அவசியம் தேவைப்படும் அட்டை பெட்டி தயாரிப்பு தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், இயந்திரங்கள், கண்ணாடி பொருட்கள், பிளாஸ்ட்டிக் பொருட்கள் என அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்து பத்திரமாக எடுத்து செல்ல பல நிறுவனங்களுக்கு இப்பொழுது இந்த அட்டை பெட்டிகள் மிகவும் பயன்படுகிறது. மக்களிடம் அதிக தேவையுள்ள இந்த அட்டை பெட்டிகளை நாம் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம். சரி இந்த பதிவில் அட்டைபெட்டி தயாரிப்பு தொழில் பற்றிய சில விவரங்களை இங்கு படித்தறியலாம் வாங்க.

அதிக லாபம் தரும் புதிய தொழில்..! Paper Box Making Business..!

இடம்:-

மொத்தமாக அட்டை பெட்டிகளை உற்பத்தித் செய்வதற்கு சொந்தமாக அல்லது வாடகைக்கு 5,000 சதுர அடி இடம் தேவைப்படும்.

மின்சாரம்:-

இந்த அட்டை பெட்டிகள் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 50 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும்.

தேவைப்படும் மூலப் பொருட்கள்:-

அட்டைப் பெட்டி தயாரிக்க முக்கிய மூலப் பொருள் கிராப்ட் பேப்பர் (kraft paper) எனப்படும் பேப்பர் ரோல். பேப்பர் ரோலின் அடர்த்திக்கு ஏற்றவாறு அட்டையின் தன்மை மாறும். 100 எம்.எம். முதல் 200 எம்.எம். வரையிலான பேப்பர் ரோல்கள் உள்ளன. இந்த அடர்த்தியைப் பொறுத்தே அட்டைப் பெட்டியின் கனமும், உழைப்பும் இருக்கும்.

அதன் பிறகு கம், Stitching Wire, Ink ஆகிய மூலப்பொருட்கள் தேவைப்படும்.

தேவைப்படும் இயந்திரம்:-

Paper Carton Box Making Machine

இந்த Automatic Paper Carton Box Making Machine இயந்திரம் அவசியம் தேவைப்படும். இந்த இயந்திரம் இந்தியாமார்ட் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கின்றது. எனவே அங்கு ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கு இரண்டு வேலையாட்கள் தேவைப்படுவார்கள்.

முதலீடு:-

இந்த தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை தாங்கள் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். இந்த தொழிலுக்கு தமிழக அரசு ரூ.7,50,000 வர மானியம் வழங்குகிறது. மேலும் இந்த தொழிலுக்கு 21 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது.

சந்தை வாய்ப்பு:-

அட்டை பெட்டிகளை பொதுவாக அதிகம் பொருட்களை பேக்கிங் செய்யும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்ற. எனவே அந்த நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று தரமான அட்டை பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்யலாம். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை பெட்டியின் தரம்தான் வாடிக்கையாளர்கள் சாய்ஸ். வாடிக்கையாளர்கள் என்ன அளவு மற்றும் தடிமனில் பெட்டி செய்து தரச் சொல்கிறார்களோ, அதனை சரியாகச் செய்து தர வேண்டும். தற்போது விற்பனையில் 20 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது. பெட்டியின் தரம் உயர்ந்து, விலை சற்று குறைவாக இருந்தால் உங்களைவிட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் போக மாட்டார்கள்.

இந்த அட்டை தயாரிப்பு தொழில் பொறுத்தவரை மக்களிடம் அதிக டிமாண்ட் உள்ள தொழில் என்று சொல்லலாம். பொருட்களை பத்திரமாக பேக்கேஜிங் செய்து எடுத்து செல்ல அட்டை பெட்டிகள் மிகவும் பயன்படுகிறது. மக்களிடம் இதன் தேவை எப்பொழுது இருக்கு என்பதால் இந்த தொழிலை தயக்கம் இல்லாமல் செய்யலாம்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here