கொரோனா தடுப்பு நடவடிக்கை-டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்

0
122

கடந்த மார்ச் 16-ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் வங்கிகளை டிஜிட்டல் பேமண்ட் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்குமாறு தெரிவித்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மக்கள் வீட்டிலிருந்து பணி செய்யத் தொடங்கிவிட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பானது பணப் பரிமாற்றம் மூலம்தான் கொரோனா வைரஸ் எளிதாகப் பரவுவதாகவும், பன நோட்டுகளில் அதிக நாட்கள் கொரோனா நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்து.

அதனால் கொரோனா அச்சம் காரணமாக வீட்டுக்குப் பொருள்களை டெலிவரி செய்யும் கடை உரிமையாளர்கள் பேடிஎம் பயன்பாட்டையே அதிகளவில் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வல்லுநர்கள் முடிந்தளவு டிஜிட்டல் பேமென்டை பயன்படுத்தி பணம் செலுத்துமாறு வலியுறுத்திவருகின்றனர்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here