லாபத்தை அள்ளித் தரும் மிட்டாய் தயாரிப்பு தொழில் !!!

0
1023

தயாரிப்பு தொழில் – நெல்லி மிட்டாய், கடலை மிட்டாய் மற்றும் கடலை உருண்டை இது போன்ற மிட்டாய்கள் இப்போது சந்தையில் அதிகளவு விற்பனையாகிறது. இவற்றின் தேவை அதிகளவு உள்ளதால் நம் வீட்டில் இருந்தே சுயதொழிலாக  செய்யலாம். இதன் மூலம் அதிக லாபமும் பெறலாம்.

நெல்லி மிட்டாய் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  1. நெல்லி – 1 கிலோ
  2. சர்க்கரை – 1.120 கிலோ
  3. தண்ணீர் – 500 மில்லி லிட்டர்
  4. சிட்ரிக் அமிலம் – 6.4 கிராம்
  5. பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் – 1.2 கிராம்

செய்முறை:

சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும் (765 கிராம் சர்க்கரையுடன் 500 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்).

அதனுடன் சிட்ரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் சேர்க்க வேண்டும்.

சர்க்கரை கரைசலை 60 Bx க்கு கொதிக்க வைக்க வேண்டும்.

நெல்லியை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

நெல்லித் துண்டுகள் மற்றும் சர்க்கரையின் அளவு (1 : 1.5)

பதப்படுத்தப்பட்ட நெல்லியை கண்ணாடிக் குடுவையில் வைக்க வேண்டும்.

இதை நிழலில் உலர்த்தி நெல்லி மிட்டாய் பெறலாம்.

தயாரிப்பு தொழில் – கடலை மிட்டாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. வறுத்த நிலக்கடலை : 100 கிராம்
  2. வெல்லம் : ½ கிலோ

செய்முறை

வெல்லத்தை பாகு காய்ச்சவும். பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும்.

கலவையை அரிசி மாவு தடவிய‌ சதுர பலகையில் கொட்டவும். சூடு ஆறுமுன் பூரிக்கட்டையால் விரித்து உடனே வில்லைகள் போடவும்.சுவையான கடலை மிட்டாய் ரெடி.

பலகையில் அரிசி மாவு தடவிக் கொள்ளவதால் கடலை மிட்டாய் பலகையில் இருந்து எளிதாக எடுக்க வரும்.

கடலை உருண்டை – தயாரிப்பு தொழில் :

தேவையான பொருட்கள்

  1. வெள்ளம் – அரை கப்
  2. வேர்க்கடலை – இரண்டு கப்
  3. ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

கடலை உருண்டை செய்முறை:

வேர்க்கடலையை நன்றாக சுத்தம் செய்து வறுத்து தோல் நிக்கி கொள்ளவும்..

பின்னர் வெல்லத்தை சீவி, பொடியாக்கி கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு செய்து கொள்ளவும்.

பின்பு கடலையை பாகில் கொட்டி நன்றாக கிளறி விடவும். பின்பு சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடிக்கவும். அவ்வளவுதான் கடலை உருண்டை தயார்.

தயாரிப்பு தொழில் – இலாபம்:

இந்த தொழிலை துவங்க ரூ.500 முதலீடு செய்து, ரூ.2,500 இலாபம் பெறலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here