சுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

0
1128

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது.

நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

சரி வாங்க ஆயில் மில் தயாரிப்பு தொழில் பற்றி தெளிவாக படித்தறிவோம்..!

உணவு பொருட்களின் தேவை இருக்கும் வரை எண்ணெய்கள் தேவை இருக்கும்.

எனவே இவற்றின் தேவை சந்தையில் அதிகளவு கலைக்கட்டியிருக்கும்.

முதலீடு:

எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தயாரிப்பு தொழில் துவங்க நில கடலை, தேங்காய், சோயா பீன்ஸ், எள் போன்றவைதான் முக்கியமான பொருட்கள் ஆகும்.

இவற்றில் எது உங்களுக்கு எளிதாக கிடைக்குமோ அவற்றை வாங்கி நீங்கள் எண்ணெய் உற்பத்தி செய்யலாம்.

சில இடங்களில் எல்லா மூலப்பொருட்களும் கிடைக்கும்பட்சத்தில் எல்லா விதமான எண்ணெய்களும் உற்பத்தி செய்யலாம்.

இருப்பினும் ஒவ்வொரு எண்ணெக்கும் தனித்தனி இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு இயந்திரத்தில் ஒரு வகை எண்ணெயை மட்டுமே தயாரிக்க இயலும்.

இயந்திரங்கள்:

இந்த ஆயில் மில் தயாரிப்பு தொழில் துவங்க எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.

தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? – இதோ தெளிவான விளக்கம்

தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம்.

இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள்.

பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது.

இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here