ஆடு கோழி முயல் பன்றி மற்றும் ஆண் எருமை வளர்ப்புக்கான பண்ணை அமைக்க மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியின் திட்டம்
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
Entrepreneurship Development & Employment Generation (EDEG) scheme
தேசிய கால்நடைதிட்டம்
மத்தியஅரசின்கால்நடைவளர்ப்புமற்றும் பால்வளத்துறையினால்இத்திட்டம்நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:-
தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு (2020-21நிதியாண்டு): ரூ.569.13லட்சம் (இதில், பொதுப்பிரிவினருக்கு(General) – ரூ.373.20லட்சம்; பட்டியல் சாதியினருக்கு(SC) – ரூ.135.77லட்சம்; பட்டியல் பழங்குடியினருக்கு(ST) – ரூ.60.16லட்சம்).
தகுதியான பயனாளிகள்: விவசாயிகள், தொழில் முனைவோர்கள், தொண்டு நிறுவனங்கள், கம்பெனிகள், கூட்டுறவு சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட/செய்யப்படாத குழுக்கள்(சுய உதவி குழுக்கள்(SHG)&கூட்டுப்பொறுப்பு குழுக்கள்(JLG)).
மானியம்:
- முதலீட்டுக்கடனுக்கானபின்விடுப்புமானியம் (Credit Linked Back-ended Capital Subsidy)
o 25% – வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்கள்(APL);
o 33.33% – வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள்(BPL), பட்டியல் சாதியினர்(SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர்(ST).
o நீலகிரிமாவட்டத்தினருக்கு: 35% – வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்கள்(APL); 50% – வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள்(BPL), பட்டியல் சாதியினர்(SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர்(ST)
- மானியமானது கடன்தொகை முழுவதும் கட்டி முடித்தபின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் (கடன் வாங்கியதிலிருந்து குறைந்தது மூன்று வருடங்களுக்கு அப்பால்).
- பயனாளி வங்கிக்கடனை செலுத்த தவறினால் (வாராக்கடனானால்), மானியம் திரும்பப் பெறப்படும்.
பயனாளியின் பங்களிப்பு:மொத்த திட்ட மதிப்பில் குறைந்தது 10% (வங்கிக்கடன் ரூ.1.60 லட்சத்திற்கு மேலிருப்பின்)
பயனாளி திட்டத்தை முடிப்பதற்கான கால அவகாசம்: பயனாளி முதல் தவணை வங்கிக்கடன் வாங்கியதிலிருந்து ஒரு வருடத்திற்குள் திட்டத்தை முடித்து தொழில் தொடங்க வேண்டும்.
கடன் தவணைக்காலம்:
செயல்கள் | கடன் தவணைக்காலம் | கருணைக்காலம் |
கோழிவளர்ப்புமுதலீட்டு நிதி | 5 – 9 வருடங்கள் | 6 மாதங்கள்- 1 வருடம் |
சிறிய அசைபோடும் விலங்குகள் மற்றும் முயல் வளர்ப்பு | அதிகப்பட்சம் 9 வருடங்கள் | 2 வருடங்கள் |
பன்றி வளர்ப்பு | 5 – 6 வருடங்கள் | 1 வருடம் |
ஆண் எருமைகள் மீட்டெடுப்பு மற்றும் வளர்ப்பு | 4 – 6 வருடங்கள் | 1 வருடம் |
அறிவிப்பு பலகை: இத்திட்ட பயனாளிகள் “Assisted under EDEG-NLM by Dept. of Animal Husbandry &Dairying, Govt. of India through NABARD” என்ற அறிவிப்பை, திட்டம் செயல்படுத்தப்படும் இடத்தில் வைக்க வேண்டும்
தகுதியான செயல்கள்:
வ. எண் | தகுதியான செயல்கள் | திட்டஅளவு | அதிகபட்சதிட்ட மதிப்பு | அதிகபட்ச மானியம்
(வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்கள்(APL)) |
அதிகபட்ச மானியம்
(வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள்(BPL), பட்டியல் சாதியினர்(SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர்(ST)) |
கோழிவளர்ப்புமுதலீட்டு நிதி | |||||
1. | இனப்பெருக்க பண்ணை – வான்கோழி, வாத்து (duck / geese), ஜப்பானிய காடை, கினி கோழி | — | ரூ.30 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.7.5 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.9.9 லட்சம்) |
2. | மைய வளர்க்கோழி பண்ணை | ஒரு சுழற்சியில் 16000 வளர்க்கோழிகள் | ரூ.40 லட்சம்
(16000 வளர்க்கோழிகள்) |
திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.10.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.13.3 லட்சம்) |
3. | கலப்பின முட்டைக்கோழி பண்ணை | 2000 முதல் 20000 கோழிகள்வரை | ரூ.80 லட்சம்
(20000 கோழிகள்) |
திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.20.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.26.6 லட்சம்) |
4. | கலப்பின கறிக்கோழி பண்ணை | 1000 முதல் 20000 கோழிகள்வரை | ரூ.44.8 லட்சம்
(20000 கோழிகள்) |
திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.11.2லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.14.9லட்சம்) |
5. | தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழியினங்கள் (நந்தனம் 99), வான்கோழி, வாத்து (duck / geese), ஜப்பானிய காடை, கினி கோழிவளர்ப்பு | — | ரூ.20 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.5.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.6.6 லட்சம்) |
6. | தீவன கலவை நிலையம்
நோய் புலனாய்வு ஆய்வகம் |
தீவன கலவை நிலையம் (1 மணி நேரத்தில் 1 டன் அளவு திறன்கொண்ட) | ரூ.16 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.4.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.5.3 லட்சம்) |
7. | கோழிக்கானபோக்குவரத்து வாகனங்கள் – திறந்த கூண்டு | — | ரூ.8 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.2.6 லட்சம்) |
8. | கோழிக்கானபோக்குவரத்து வாகனங்கள் – குளிரூட்டப்பட்டவை | — | ரூ.15லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.3.75லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.4.9லட்சம்) |
9. | சில்லறை வர்த்தக நிலையம்- இறைச்சிக்கூடம் | — | ரூ.10 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.5 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.3.3 லட்சம்) |
10. | சில்லறை வர்த்தக நிலையம்- விற்பனைக்கூடம் | — | ரூ.15 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.3.75 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.4.9 லட்சம்) |
11. | நடமாடும் விற்பனைக்கூடம் | — | ரூ.10 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.5 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.3.3 லட்சம்) |
12. | கோழிப்பொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு | — | ரூ.20 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.5.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.6.6 லட்சம்) |
13. | முட்டை/கறி வண்டி | — | ரூ.15,000 | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.3750) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.4990)
|
சிறிய அசைபோடும் விலங்குகள் மற்றும் முயல் வளர்ப்பு | |||||
1. | வெள்ளாடு/செம்மறியாடு வளர்ப்பு
(10 பெட்டை + 1 கிடா) |
10+1 / 20+2 / 30+3 / 40+4 | ரூ.2 லட்சம்
(40 பெட்டை + 4 கிடா) |
திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.50,000) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.66,660) |
2. | இனப்பெருக்க பண்ணை – வெள்ளாடு/செம்மறியாடு
(100 பெட்டை + 5 கிடா) |
100 பெட்டை + 5 கிடா | ரூ.10 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.5 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.3.3 லட்சம்) |
3. | அங்கோரா இன முயல் வளர்ப்பு
(15 பெண்+ 5 ஆண்) |
15 பெண்+ 5 ஆண் | ரூ.3 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.75,000) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.99,990) |
4. | இனப்பெருக்க பண்ணை – அங்கோரா இன முயல்
(15 பெண்+ 5 ஆண்) |
15 பெண்+ 5 ஆண் | ரூ.3 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.75,000) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.99,990) |
பன்றி வளர்ப்பு | |||||
1. | பன்றி வளர்ப்பு
(3 பெண் + 1 ஆண்) |
3+1 / 6+2 / 9+3 / 12+4 | ரூ.4 லட்சம்
(12 பெண் + 4 ஆண்) |
திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.1.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.1.3 லட்சம்) |
2. | இனப்பெருக்க பண்ணை – பன்றி
(20 பெண் + 4 ஆண்) |
20 பெண் + 4 ஆண் | ரூ.8 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.2.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.2.6 லட்சம்) |
3. | குளிரூட்டப்பட்டசில்லறை வர்த்தக நிலையம் | — | ரூ.12 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.3.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.3.9 லட்சம்) |
ஆண் எருமைகள் மீட்டெடுப்பு மற்றும் வளர்ப்பு | |||||
1. | சிறிய பண்ணை | 25 கன்றுகள் வரை | ரூ.6.25 லட்சம்
(25 கன்றுகள்) |
திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.1.56 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.2.08 லட்சம்) |
2. | வணிக பண்ணை | 25 முதல் 200 கன்றுகள் வரை | ரூ.48 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.12.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.15.9 லட்சம்) |
3. | இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணை | 200 முதல் 2000 கன்றுகள் வரை | ரூ.250 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.62.5 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.83.3 லட்சம்) |
விலங்கு கழிவு மேலாண்மை(மாநில அரசுகள் மூலம்) | |||||
1. | கட்டிடம் | — | ரூ.100 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.25.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.33.3 லட்சம்) |
2. | ஆலை மற்றும் இயந்திரங்கள் | — | ரூ.100 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.25.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.33.3 லட்சம்) |
3. | பயன்பாட்டு உபகரணங்கள் | — | ரூ.60 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.15.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.19.9 லட்சம்) |
4. | ஆலை செயல்பாட்டுக்கு முந்தைய செலவுகள் | — | ரூ.20 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.5.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.6.6 லட்சம்) |
5. | நடப்பு மூலதனபங்களிப்பு | — | ரூ.20 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.5.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.6.6 லட்சம்) |
தீவன சேமிப்பக அமைப்பு(மாநில அரசுகள் மூலம்) | |||||
1. | சேமிப்பக அமைப்பு | 1000 பசுக்களுக்கு தேவையான கொள்ளளவு | ரூ.500 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.125.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.166.6 லட்சம்) |
2. | தீவனங்கள் கையாள தேவையான உபகரணங்கள் | — | ரூ.100 லட்சம் | திட்ட மதிப்பில் 25% (அதிகபட்சம் -ரூ.25.0 லட்சம்) | திட்ட மதிப்பில் 33.33% (அதிகபட்சம் – ரூ.33.3 லட்சம்) |
குறிப்பு:
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்ட மதிப்புகள் உதாரணத்திற்கானவை. இந்த மதிப்பில் மாறுதல்கள் செய்யப்படலாம்.
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்ட மதிப்புகள் (EDEG) தீவனம், இன்சூரன்ஸ் மற்றும் இதர செலவுகளையும் உள்ளடக்கியது.
- ஒரு பயனாளி ஒரே செயலுக்கு ஒரு முறை மேல் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச அளவைவிட) பயன் பெற முடியாது.
- ஆண் எருமைகள் மீட்டெடுப்பு மற்றும் வளர்ப்பு – குறைந்தது 24 மாதங்களுக்கு – அதிகபட்ச மானியம்:25% முதல் 40% மட்டும்
மானியத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:
- வங்கிக்கடன் அனுமதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், வங்கிகள் https://ensure.nabard.orgஎன்ற இணையதளத்தில் வங்கிக்கடன் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து மானியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- இணையதளத்தில் முதல் பதிவேற்றம் செய்த 30 நாட்களுக்குள் கடனில் முதல் தவணையை பயனாளிக்கு விடுவித்து அந்த தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் (தவறினால் முதல் பதிவேற்றம் தானாக நிராகரிக்கப்படும்).
- வங்கிகள் நபார்டிலிருந்து மானியம் பெற்றதும் அதை “மானிய இருப்பு கணக்கில்(SUBSIDY RESERVE FUND ACCOUNT)” 7 நாட்களுக்குள் வரவு வைக்க வேண்டும். மானியம் பெற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் வங்கிகள் “பயன்பாட்டு சான்றிதழ்(Utilisation Certificate)” சமர்ப்பிக்க வேண்டும்.