இந்தியாவில் தங்கத்திற்கு இருக்கும் மவுசு உலகம் அறிந்தது. இந்திய முதலீட்டாளர்களால் தங்கத்தை ஒதுக்கவோ, ஓரம் கட்டவோ முடியாது. தங்கம் கொடுக்கும் லாபத்தையும் தாண்டி அதனுடன் இந்திய மக்களுக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்கிறது. சிலருக்கு தங்கம் அந்தஸ்து சம்பந்தப்பட்ட விஷயம்.
மக்களில் பெரும்பாலானோர் தங்கத்தை நகையாக வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால், வேறு சில வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும். அவை பற்றி தற்போது பார்க்கலாம்.
தங்கப் பத்திரம்

தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கி தங்கப் பத்திரங்களை விநியோகித்து வருகிறது. தங்கத்தின் கிராம் அடிப்படையில் இப்பத்திரங்கள் வழங்கப்படும். தங்கத்தை சேமித்து வைக்க கூடுதல் செலவுகள் தேவையில்லை என்பதால் முதலீட்டாளர்கள் இதை விரும்புகின்றனர்.
இதை வாங்க விரும்புவோர் குறைந்தது ஒரு கிராம் தங்கத்திற்காவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ஓராண்டுக்கு 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் நேரடியாக வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படும்.
தங்க ETF

தங்க நிதி

தங்க நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட்களால் தங்க நிதித் திட்டம் வழங்கப்படுகிறது. தங்கத்தை நேரடியாக வாங்குவதைக் காட்டிலும் தங்க நிதியில் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பானது. இதில் முதலீடு செய்ய மிகப்பெரிய தொகை தேவையில்லை. வெறும் ரூ.500ஐ எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம். மூன்றே நாட்களில் கூட பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.