சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..!

0
1053

வீட்டில் காகிதம் கிடந்தால் குப்பை தொட்டியில் போடுவதற்கு பதில் கொஞ்சம் யோசித்தால் போதும். சுற்றுசூழலை பாதுகாக்கவும் மற்றும் பணமாக்கவும் முடியும். அதாவது குறைந்த வருமானத்தில் பழைய பேப்பர்களை வாங்கி பேப்பர் பை (paper bag) செய்து விற்பனை செய்தால் அதிக வருமானம் பெறமுடியும்.

தற்போது சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு எழுந்துள்ளதால் பாலீத்தின் மற்றும் பிளாஸ்ட்டிக் கவர்களுக்கு பதில் நாம் சந்தையில் பேப்பர் கவர் (paper bag)  விற்பனை செய்வது மூலம் அதிக இலாபம் பெற இயலும்.

பேப்பர் கவர் (paper bag) எப்படி தயாரிப்பது என்று இவற்றில் நாம் காண்போம்.

செலவு, வருமானம்:

ஒரு நாளில் 200 கிலோ பேப்பர் வீதம் மாதத்தில் 25 நாளில் 5 டன் பேப்பரில் கவர்கள் தயாரிக்கலாம். ஒரு கிலோ பேப்பர் ரூ.29 வீதம் 5 டன்னுக்கு ரூ.1.45 லட்சம், வாடகை ரூ.2500, மின்கட்டணம் ரூ.1000, 3 தொழிலாளர்கள் சம்பளம் ரூ.15 ஆயிரம்.

இதர செலவுகள் ரூ.5 ஆயிரம் என மாதத்துக்கு ரூ.1.68 லட்சம்.

கவர்கள் 100 எண்ணிக்கை வீதம் சராசரி விலை: 6 செமீ அகலம், 10 செமீ நீளமுள்ளவை ரூ.30.

7 செமீ அகலம்12 செமீ நீளமுள்ளவை ரூ.36,

9செமீ அகலம் 13 செமீ நீளமுள்ளவை ரூ.46,

10 செமீ அகலம் 16 செமீ நீளமுள்ளவை ரூ.65,

12 செமீ அகலம்19 செமீ நீளமுள்ளவை ரூ.85,

14 செமீ அகலம் 18 செமீ நீளமுள்ளவை ரூ.100,

14 செமீ அகலம் 22 செமீ நீளமுள்ளவை ரூ.115,

18 செமீ அகலம் 24 செமீ நீளமுள்ளவை, 18 செமீ அகலம் 26 செமீ நீளமுள்ளவை, 18 செமீ அகலம் 28 செமீ நீளமுள்ளவை, 18 செமீ அகலம் 33 செமீ நீளமுள்ளவை ஆகியவை ரூ.150,

22 செமீ அகலம் 26 செமீ நீளமுள்ளவை, 22 செமீ அகலம் 28 செமீ நீளமுள்ளவை, 22 செமீ அகலம் 30 செமீ நீளமுள்ளவை, 22 செமீ அகலம் 33 செமீ நீளமுள்ளவை, 22 செமீ அகலம் 37 செமீ நீளமுள்ளவை அனைத்தும் ரூ.230,

26 செமீ அகலம் 33 செமீ நீளமுள்ளவை, 26 செமீ அகலம் 37 செமீ நீளமுள்ளவை, 26 செமீ அகலம் 39 செமீ நீளமுள்ளவை அனைத்தும்  ரூ.250,

31 செமீ அகலம் 44 செமீ நீளமுள்ளவை ரூ.480, 36 செமீ அகலம் 48 செமீ நீளமுள்ளவை ரூ.570க்கு விற்கப்படுகிறது.

இந்த விற்பனை விலையோடு, உற்பத்தி செலவை ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 10 சதவீத லாபம் அல்லது மாதம் சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும்.

கடைகளில் நேரில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தால் கூடுதல் விலைக்கு விற்கலாம். லாபமும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.

பேப்பர் கவர் தயாரிப்பு – கட்டிட அமைப்பு:

20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட ஷெட். இதை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், ஸ்டோர் ரூம் என பயன்படுத்தலாம்.

வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். ஒரு எச்பி மின் இணைப்பு (ரூ.2 ஆயிரம்) வேண்டும்.

முதலீடு:

பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.5 லட்சம், 2 டேபிள் ரூ.8 ஆயிரம், 4 அலுவலக சேர்கள் ரூ.1,000, பசை காய்ச்ச இரும்பு அடுப்பு, அலுமினிய பாத்திரம், பிளாஸ்டிக் வாளி , 2 மக் உள்ளிட்ட இதர பொருட்கள் ரூ.1000.

முதலீட்டுக்கு ரூ.2.82 லட்சம் தேவை. (முதல் மாத உற்பத்தி செலவு ரூ.1.68 லட்சம் தனி)

தேவையான பொருட்கள் :

பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் (கிலோ ரூ.29), ரப்பர் பேண்ட் (கிலோ ரூ.350), பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக் கட்டு கயிறு.

கிடைக்கும் இடங்கள்:

பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.

சந்தை வாய்ப்பு:

மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், லாண்டரி, டெய்லரிங் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள்(paper bag) பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. கடைகளுக்கு நேரடியாகவோ, பேப்பர் கவர் மொத்த விற்பனை கடைகளுக்கோ வாடிக்கையாக சப்ளை செய்யலாம்.

பேப்பர் பை தயாரிப்பது எப்படி:

பேப்பர் ரோல் 13.5 செமீ, 15.5, 19.5, 21.5, 25.5, 29.5, 37.5, 45.5, 53.5, 63.5, 73.5 செமீ என பல்வேறு அகலங்களில் கிடைக்கிறது.

அதன் மூலம் 10 செமீ நீளம், 6 செமீ அகல கவர் முதல் 7 செமீ நீளம் 12 செமீ அகலம், 9 செமீ நீளம் 13 செமீ அகலம், 10 செமீ நீளம் 16 செமீ அகலம், 12 செமீ நீளம் 19 செமீ அகலம், 14 செமீ நீளம்18 செமீ அகலம், 14 செமீ நீளம் 22 செமீ அகலம், 18 செமீ நீளம் 24 செமீ அகலம், 18 செமீ நீளம் 26 செமீ அகலம், 18 செமீ நீளம் 28 செமீ அகலம், 18 செமீ நீளம் 33 செமீ அகலம், 22 செமீ நீளம் 26 செமீ அகலம், 22 செமீ நீளம் 28 செமீ அகலம், 22 செமீ நீளம் 30 செமீ அகலம், 22 செமீ நீளம் 33 செமீ அகலம், 22செமீ நீளம் 37 செமீ அகலம், 26 செமீ நீளம் 33 செமீ அகலம், 26 செமீ நீளம் 37 செமீ அகலம், 26 செமீ நீளம்39 செமீ அகலம், 31 செமீ நீளம் 44 செமீ அகலம், செமீ நீளம் 48 செமீ அகலம் ஆகிய அளவுள்ள பேப்பர் கவர்கள் தயாரிக்கலாம்.

வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும்.

கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்கில் நிரப்ப வேண்டும்.

பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும்.

அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும்.

அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு செல்லும்.

அங்கு கீழ் பகுதி ஒட்டப்பட்ட











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.