ஏற்றுமதி தொழிலில் அதிக வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்..!

0
1247

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது. எனவே இந்த தயாரிப்பு சுய தொழிலை செய்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இவற்றை விற்பனை செய்து அதிக வருமானத்தை பெறலாம்.

எனவே புதிதாக சுய தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த சேப்டி கிளவுஸ் (safety gloves) தயாரிப்பு தொழில் துவங்கலாம்.

safety gloves images

Suya Tholil – இடவசதி:

Own business ideas in tamil – இந்த கையுறை தயாரிப்பு தொழில் துவங்குவதற்கு குறைந்தது 5 சென்ட் அளவு கொண்ட ஒரு சிறிய இடம் இருந்தால் போதும்.

தாராளமாக இந்த இடத்திலேயே இயந்திரத்தையும் வைத்து சேப்டி கிளவுஸ் தயாரித்து விற்பனை செய்து விடலாம்.

Suya Tholil – மூலப்பொருட்கள்:

Own business ideas in tamil – இந்த கையுறை தயாரிப்பு தொழில் பொறுத்தவரை மூலப்பொருட்கள் என்று பார்த்தால் yarn என்று சொல்லக்கூடிய நூல் மற்றும் plastic bag இவை இரண்டும் மட்டும் தான். இந்த கையுறை தயார் செய்வதற்கான மூலப்பொருட்கள் ஆகும்.

இந்த yarn என்று சொல்லக்கூடிய நூல் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் அதிகமாக கிடைக்கின்றது. எனவே அங்கு சென்று இந்த மூலப்பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இல்லை என்றால் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் இந்த நூலினை ஆடர் செய்தும் பெற்று கொள்ளலாம்.

Yarn images

yarn images

own business ideas in tamil – அதாவது இந்த நூல் www.amazon.in, www.indiamart.com, www.marymaxim.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் இந்த நூலினை ஆடர் செய்தும் பெற்று கொள்ளலாம்.

Suya Tholil – இயந்திரம்:

Own business ideas in tamil – இந்த கையுறை சேப்டி கிளவுஸ் தயார் செய்வதற்கு Gloves Knitting Machine, cylinder bed machine, Gloves Packing Machine ஆகிய இயந்திரங்கள் தேவைப்படும்.

இவை அனைத்தும் www.indiamart.com போன்ற  ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் ஆடர் செய்தும் பெற்று கொள்ளலாம்.

Suya Tholil – இயந்திரங்களின் விலை:

Own business ideas in tamil – இந்த Gloves Knitting Machine விலை 1.5 லட்சம், cylinder bed machine விலை Rs.26,750/-, Gloves Packing Machine விலை Rs 20,000/-

Suya Tholil – வேலையாட்கள்:

Own business ideas in tamil – இந்த சேப்டி கிளவுஸ் தயார் செய்வதற்கு வேலையாட்கள் தேவைப்படும். அதாவது இயந்திரங்களை இயக்குவதற்கு நன்கு திறன் உள்ள 3 நபர்கள், அவர்களுடன் உதவி செய்வதற்கு 4 ஆட்கள் என்று மொத்தம் 7 வேலையாட்கள் தேவைப்படும்.

இந்த கையுறை தயாரிப்பு தொழிலை இன்னும் பெரிய அளவில் செய்வதாக இருந்தால் இன்னும் அதிகமான வேலையாட்கள் தேவைப்படுவார்கள்.

Suya Tholil – சேப்டி கிளவுஸ் தயாரிக்கும் முறை:

Own business ideas in tamil – இந்த சேப்டி கிளவுஸ் தயாரிப்பு செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை இல்லங்க. இந்த Gloves Knitting Machine இயந்திரத்தில் நூலினை செட் செய்து அவற்றை இயக்கினால் போதும்.

கையுறை அந்த இயந்திரத்தில் தானாகவே பின்னப்பட்டு வெளியே வரும். எனவே இந்த Gloves Knitting Machine இயந்திரத்தை இயக்குவதற்கு ஓரளவு பயிற்சி பெற்றிருந்தால் போதும்.

அதன் பிறகு கையுறை இந்த இயந்திரத்தில் பின்னப்பட்டு வெளிவந்ததும், கையுறை பின்னப்பட்ட இறுதி பகுதியில் தையல்கள் பிரிந்து வராமல் இருப்பதற்காக cylinder bed machine இயந்திரத்தை கொண்டு அவற்றை சுற்றிலும் ஒரு தையல் போட வேண்டும்.

இறுதியாக Gloves Packing Machine கொண்டு தயாரித்த சேப்டி கிளவுஸ்சினை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

Suya Tholil – சந்தை வாய்ப்பு:-

Safety equipment stores, Approach automobile industries, Machinery industries, Packaging industries போன்ற நிறுவனங்களிடம் நேராகவே சென்று அவர்களிடம் ஆடர் பெற்றுக்கொள்ளலாம்.

அதன் பிறகு ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்களில் தாங்கள் தயாரித்த இந்த கையுறையினை விற்பனை செய்யலாம். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் இந்த கையுறையினை ஏற்றுமதி செய்யலாம்.

எந்த தொழிலாக இருந்தாலும் ஆரம்பத்தில் ஆடர் பெறுவதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். திறமையுடன் ஒரு தொழிலை செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

Suya Tholil – முதலீடு:-

இந்த தொழிலை துவங்க நினைப்பவர்கள் Gloves Knitting Machine, Cylinder bed machine, Gloves Packing Machine  இயந்திரங்களை வாங்குவதற்கு குறைந்த பட்சம் 2,50,000/- தேவைப்படும்.

அதன் பிறகு மூலப்பொருட்கள் மற்றும் இதர செலவுகளுக்கு 1,00,000/- தேவைப்படும். எனவே முதலீடாக 3,50,000/- தேவைப்படும்.

Suya Tholil – வருமானம்:

திறமையாக இந்த தொழிலில் இறங்கி செயல்பட்டால் நிச்சயமாக மாதம் 30% – 40% இதன் மூலம் வருமானம் பெறலாம்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here