உங்கள் நிறுவனம் மேலும் சிறப்பாக இயங்க, அடுத்த நிலையை அடைய ஒரு சில டிப்ஸ் !!

0
1184

உங்களுக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள ரொக்கத்தை வங்கியிடம் (bank) தக்க ஆவணங்களுடன் சமர்ப்பித்து நீங்கள் அதன் பெயரில் கடன் (loan) பெறலாம்.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு (customer) எவ்வாறு மேலும் சிறந்த சேவை அளிக்க முடியும் என்று முயற்சி செய்யுங்கள்.

அவர்களுக்கு மேலும் என்ன சேவை (service) மற்றும் பொருள்கள் (product) தேவை என அறிந்து அவற்றையும் கொடுங்கள்.

உங்கள் ஊழியர்களை (employees) சரியான இடைவெளியில் பயிற்சியளியுங்கள்.

நீங்கள் சார்ந்த துறையில் வந்திருக்கும் புதிய தொழில் நுட்பங்களை (technology) உங்கள் பொருள்களில் புகுத்துங்கள்.

அனைத்து வேலைகளையும் நீங்கள் உங்கள் தலையில் போட்டுக்கொண்டு செய்யாதீர்கள், தொழிலின் முக்கிய அம்சங்களை விட்டுவிட்டு மற்றவற்றை அவுட் சோர்ஸ் (outsource) செய்யுங்கள்.

நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்குங்கள்.

நிறுவனத்தை மேம்படுத்த தேவையான மென்பொருள்களை (software) நிறுவுங்கள்.

உங்கள் நிறுவனத்தின் இணையதளத்தை மேம்படுத்துங்கள், அதில் enquiry, live chat போன்றவற்றை உருவாக்குங்கள்.

உங்கள் வாடிக்கையாளர்கள் (customer) கொடுக்கும் புகார்கள், சந்தேகங்களுக்கு உடனே தீர்வு காணுங்கள்.

உங்களுடய ஊழியர்களிடம் புது ஐடியாக்களை (idea) கேளுங்கள்.
ஏதேனும் புதிய விசயங்களை உங்கள் தொழிலில் முயற்சி செய்து பாருங்கள்.

உங்கள் நிறுவனத்திற்கு facebook ல் ஒரு பக்கத்தை (FB page) தயார் செய்யுங்கள், அதில் அடிக்கடி நிறுவனத்தை பற்றிய தகவல்களை பகிருங்கள் (post sharing). வாடிக்கையாளரிடம் தொடர்பில் இருங்கள்.

உங்கள் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் (machines) மற்றும் சாதனங்கள் (equipment), மேலும் சிறப்பாக செயல்பட மற்றும் சக்தியை குறைவாக செலவழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.

உங்கள் துறை சார்ந்த, உங்கள் போட்டியாளர்களாக இல்லாதவர்களிடம் சேர்ந்து வாடிக்கையாளர்கள் தகவல்களை பெற்று இருவரும் வளரலாம்.

உங்கள் வளர்ச்சி (growth) குறித்து உங்கள் வங்கிக்கு தகவல் கொடுங்கள்.

உங்கள் நிறுவனத்தின் (company) அடுத்த 5 ஆண்டுக்கான இலக்குகளை இப்போதே முடிவுசெய்யுங்கள்.

உங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒரு சட்ட புத்தகத்தை, ஒரு கலாசாரத்தை (culture) உருவாக்குங்கள்.

உங்கள் நிறுவனத்தை எங்கிருந்தும் கண்காணிக்க தேவையான மென்பொருள்களை நிறுவுங்கள் (cloud computing).

இவை அனைத்தும் உங்கள் நிறுவனத்தை ஒரு படியாவது முன்னேற்றும் என்ற நம்புகிறேன்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here