தயாரிப்பு தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை..!

0
950

தயாரிப்பு தொழில் – வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெற வேண்டுமா? அப்படி என்றால் வெறும் ரூ.22 செலவில் பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிப்பு தொழில் செய்து நல்ல வருமானம் பெறலாம்.

இந்த தயாரிப்பு தொழில் செய்வதற்கு இடவசதியோ அல்லது அதிக முதலீடோ, வேலையாட்களோ தேவையில்லை. வீட்டில் இருந்தே வெறும் ரூபாய் 22 செலவில் இந்த தயாரிப்பு தொழில் மூலம் நல்ல இலாபம் பார்க்கமுடியும்.

குடிசை தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் செய்ய – தேவையான பொருட்கள்:

  1. SLES (sodium laureth sulfate) – 20 மில்லி
  2. Citric acid – 10 கிராம்
  3. Global salt – 40 கிராம்
  4. பேக்கிங் சோடா – 20 கிராம்
  5. RO water – 750 மில்லி
  6. லெமன் எசன்ஸ் – தேவையான அளவு
  7. புட் கலர் – தேவையான அளவு
  8. பிளாஸ்ட்டிக் வாளி – ஒன்று

குடிசை தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை ..!

தயாரிப்பு தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் செய்முறை விளக்கம், முதலில் பிளாஸ்ட்டிக் வாளியை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் SLES (sodium laureth sulfate) 20 மில்லி ஊற்றவும்.

SLES பயன்படுத்துவதால், பாத்திரத்தில் உள்ள கறைகளை நீக்குவதற்கும், பாத்திரங்களை ஜொலிஜொலிக்க வைப்பதற்கும் மேலும் அதிக நுரை வருவதற்கும் இந்த SLES பயன்படுகிறது.

பின்பு இந்த கலவையுடன் Citric acid 20 கிராம் சேர்க்கவும். பின்பு ஒரு மரக்கரண்டியை கொண்டு இந்த கலவையை சுமார் 5 நிமிடங்களை வரை நன்றாக கிளறி விடவும்.

Citric acid பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கும், பாத்திரத்தை பளபளக்கவும் பயன்படுகிறது.

Citric acid நன்றாக கரைந்த பின் 20 கிராம் பேக்கிங் சோடாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலவையை நன்றாக கிளறி விடவும்.

பின்பு இந்த கலவையுடன், Global salt அதாவது (G salt) 40 கிராம் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

G salt பாத்திரத்தில் உள்ள கறைகளை நீக்குவதற்கும், பாத்திரத்தில் உள்ள கிருமிகளை அகற்றுவதற்கும் பயன்படுகிறது.

பிறகு இதனுடன் RO water – 750 மில்லி சேர்த்து 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விடவேண்டும். இவ்வாறு கிளறி விடுவதினால் கலவையானது நல்ல கெட்டியாக மாறும்.

இறுதியாக தங்களுடைய விருப்பத்திற்கு லெமன் எசன்ஸ் மற்றும் புட் கலர் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

பின்பு இந்த கலவையை சுமார் 4 மணி நேரம் வரை, கலவையை தனியாக வைத்திருக்கவும்.

காலி பாட்டிலில் இந்த கலவையை ஊற்றி எப்போதும் போல் பாத்திரம் கழுவ பயன்படுத்தி கொள்ளலாம்.

பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிப்பு தொழில் – முதலீடு:

  • SLES (sodium laureth sulfate) – ஒரு லிட்டர் ரூ 100/-, நாம் 20 மில்லி மட்டுமே பயன்படுத்தவத்தினால் ரூ.20/-
  • Citric acid – 10 கிராம் – ஒரு கிலோ – ரூ 50/-, 10 கிராம் ரூபாய்: 0.50.P
  • Global salt – 40 கிராம் – ஒரு கிலோ – ரூ25/-, 40 கிராம் ரூபாய். 1/-
  • பேக்கிங் சோடா – 20 கிராம் – ஒரு கிலோ 45/- 20 கிராம் ரூ. 1/-
  • ஒரு லிட்டர் பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயார் செய்ய மொத்த செலவு ரூ 22.05/-

குடிசை தொழில் – சந்தை வாய்ப்பு:

  • சந்தையில் விற்கப்படும் பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் விலையை விட குறைந்த விலைக்கு சிறிய பெட்டி கடைகளில் மற்றும்  வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யலாம்.இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here