ஸ்கிரீன் பிரின்ட்டிங் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..!

0
1111

பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்:-

Business ideas for women – பெண்கள் வீட்டில் இருந்தே, செய்யக்கூடிய சிறந்த தொழில் ஸ்கிரீன் பிரின்ட்டிங் சுயதொழில் ஆகும். பெண்கள் வீட்டில் இருந்தே ஒய்வு நேரங்களில் இந்த ஸ்கிரீன் பிரின்ட்டிங் சுயதொழில் செய்து, அதிக லாபம் பெறலாம். அதுவும் குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய ஒரு சிறந்த சுயதொழில்.

சரி வாங்க இனி இந்த ஸ்கிரீன் பிரிண்டிங் சுயதொழில் (Screen Printing At Home) பற்றி தெளிவாக இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

Screen Printing பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..!

”ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகிக்கும் ஸ்க்ரீன் வேறுபடும்.

குவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மட்டும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இரண்டாவதாக டைரக்ட் முறையில், மஞ்சள் பை, ‘நான் ஓவன்’ பைகளில் பிரின்ட்டிங் செய்யலாம். இதன் டைரக்ட் ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மூன்றாவது முறையான ‘லாஸ் ரன்னிங்’குக்கு, கிரோன் (Cron) லேயர் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது நீல நிற ஸ்க்ரீன் ஆகும்.

அதிக எண்ணிக்கையில் பிரின்ட் செய்ய இது உதவும். ஆக, எது உங்கள் வசதிக்கும், வரும் ஆர்டர்களுக்கும் ஏற்றது என்று யோசித்து, தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சரி, இனி ஸ்க்ரீன் பிரின்ட்டிங் யூனிட் அமைப்பது பற்றிப் பார்ப்போம். தரமான ஸ்க்ரீன் பிரின்ட்டிங் உபகரணங்களுக்கு பெரிய முதலீடு தேவையில்லை. வெறும் 6,000 ரூபாயிலேயே சாத்தியப்படுத்தலாம்.

ஸ்க்ரீன் பிரின்ட்டிங் – தேவையான உபகரணங்கள்:-

2 அடி அகலம், 1 அடி நீளம், 3 அடி உயரம் உள்ள ‘எக்ஸ்போசிஸ் பாக்ஸ்’.

இதன் மேல்பாகம் கண்ணாடியில் மூடப்பட்டு இருக்கும், உட்பாகத்தில் 4 டியூப் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். நீங்களே தயார் செய்துகொள்ளலாம், அல்லது 3,000 ரூபாய் செலவில் வாங்கிக்கொள்ளலாம். அடுத்ததாக, எக்ஸ்போசிஸ் ரசாயனக் கலவை ஸ்க்ரீன், இங்க், சட்டம் முதலியவற்றை 1,500 – 2,000 ரூபாய் செலவில் வாங்கிக் கொள்ளலாம். இவை தவிர, ஒரு மர மேஜை. இப்போது உங்கள் ஸ்க்ரீன் பிரின்டிங் யூனிட் ரெடி.

ஸ்கிரீன் தயார் செய்வது எப்படி என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்:-

இதற்காக பெரிய பயிற்சி தேவை இல்லை. முயற்சித்தால் நீங்களாகவே கற்றுக் கொண்டுவிட முடியும். ஆம், வீட்டில் இருந்தே செய்யும் அளவுக்கு மிக எளிமையானதுதான் இதன் செய்முறை.

முதலில் எந்தப் பொருள் மீது அச்சு தேவையோ, அதற்கான ஸ்க்ரீனை தேர்வு செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் டிசைன்களை பிரின்ட் செய்ய வேண்டியதை கம்ப்யூட்டர் சென்டரில் வடிவமைத்து, அதை ஸ்க்ரீன் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் தயார் செய்யும் டிரேஸ் பேப்பரில் பிரின்ட் செய்து கொள்ளுங்கள் (சாதாரண பிரின்டர் மூலமாகவே இதை பிரின்ட் எடுக்க முடியும்).

ஸ்க்ரீன் மீது எக்ஸ்போசிஸ் கெமிக்கலை தடவி, காய்ந்த உடன் டிரேஸ் பிரின்ட் செய்த மேட்டரை, ஸ்க்ரீனுடன் இணைத்து எக்ஸ்போசிஸ் பெட்டியின் கண்ணாடி மீது வைத்து, டியூப் லைட்டுகளை எரியவிட்டு எக்ஸ்போஸ் செய்யவும். சிறிது நேரத்தில் உங்கள் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் ரெடி!

இரண்டு அல்லது மூன்று நிறங்களிலும் பிரின்ட் செய்யலாம். தேவையான சட்டத்தில் ஸ்க்ரீனை ஒட்டி, தேவையான கலர் இங்க்கை கொண்டு பை மீது ஸ்க்ரீன் பிரின்ட்டிங் செய்யலாம். ஒவ்வொரு பிரின்ட்டிங் முடிந்த உடன் காய வைத்த பின்னரே பைகளை ஒன்றாக அடுக்க வேண்டும்.

மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள்:-

சென்னை, கோவை, திருச்சியில் இந்த ஸ்கிரீன் பிரின்டிங் செய்வதற்கான அனைத்து மூலப்பொருட்களும் கிடைக்கும்.

நான் ஓவன், பேக் ஃபைல் பிரின்டிங் செய்ய அதற்கான ஸ்கிரீனை வாங்கி உபயோகப்படுத்துங்கள், அதிக எண்ணிக்கையில் உற்பத்தியைக் குவிக்க, செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்களும் உள்ளன.

ஸ்கிரீன் பிரின்டிங் இயந்திரம் (Where to buy Screen Printing Machine in tamilnadu):-

  1. www.indiamart.com
  2. www.amazon.com
  3. www.alibaba.com
  4. www.ebay.com

ஆகிய வெப்சைய்டில் ஸ்கிரீன் பிரின்டிங் இயந்திரத்தை (Screen Printing Machine) ஆடர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்..!











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here