13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..! Ball Pen Business Ideas..!

0
74

நம் அன்றாட வாழ்க்கைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது பால் பாய்ண்ட் பென். இந்த பால் பாய்ண்ட் பேனாவை வீட்டில் இருந்து மொத்தமாக தயாரித்து கடைகளில் சில்லறை விலைக்கும், மொத்தமாகவும் விற்பனை செய்து லாபம் காணலாம். சரி வாங்க நண்பர்களே இப்போது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் எப்படி பெறலாம் என்பதை பற்றி முழுமையாக படித்து தெரிந்துகொள்ளலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

இந்த பால் பாய்ண்ட் பென் தயாரிப்பு தொழிலுக்கு தேவைப்படும் பொருள்கள் பேனாவின் மேல் இருக்கும் மூடியை செட் செய்வதற்கு நிப் மிசின். அடுத்து மூடியை சரி செய்வதற்கு மிசின், பேனாவிற்கு தேவைப்படும் மையின் மிசின், பேனாவில் நிப் செட் செய்த பிறகு பேனாவை அலுத்தக்கூடிய மிசின், பேனாவில் ஊற்றிய மை நிறைவதற்கு தேவைப்படும் மிசின்.

தேவைப்படும் இயந்திரம்:

pen making machine business plan

இந்த பென் தொழில் செய்வதற்கு Pen Making Machine அவசியம் தேவைப்படும். இந்த பேனா தயாரிக்கும் மிஷின் இந்தியாமார்ட் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கின்றது. தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த மிஷினை வாங்கி தொழிலை தொடங்கலாம்.

முதலீடு:

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பேனா தயாரிப்பு தொழிலை தொடங்க நினைப்பவர்கள் பேனா தயாரிக்கும் மிஷின் வாங்குவதற்கு  முதலில் 13,000/- முதலீடு செய்ய வேண்டும். வெறும் 13,000/- முதலீடு செய்து விட்டால் தொடர்ந்து அதிக லாபம் பெறலாம்.

இடம்:

இந்த பென் தயாரிக்கும் மிஷின் வைப்பதற்கு வீட்டில் சிறிய இட பகுதி போதுமானது.

பேனா தயாரிக்கும் முறை:

pen making machine business plan

முதலில் பேனாவை தயாரிப்பதற்கு பேனாவிற்கு மேல் இருக்கும் மூடியை இந்த nib-ல் செட் செய்ய வேண்டும்.

pen making machine business plan

அதன் பிறகு பேனாவின் மூடியை சரி செய்வதற்கு இந்த இடத்தில் வைக்கவேண்டும்.

pen making machine business plan

அடுத்து இந்த மிஷினில் பேனாவிற்கு தேவைப்படும் மையினை ஊற்றிக்கொள்ளவும். மிஷினில் பேனாவை வைத்த பிறகு அந்த கைப்பிடியினால் ஒருமுறை அழுத்திவிட்டால் போதும். பேனாவில் எந்த அளவிற்கு மையானது தேவைப்படுமா அந்த அளவிற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

pen making machine business plan

 

அடுத்து பேனாவின் nib-ஐ செட் செய்வதற்கு இந்த மிஷின் தேவைப்படுகிறது. இவற்றில் மையினை ஊற்றிய பிறகு பேனாவை இதில் வைத்து ஒருமுறை அழுத்த வேண்டும். nib செட் செய்துவிட்டு அழுத்தினால் போதும் பேனா ரெடி ஆகிவிடும்.

pen making machine business plan

இறுதியாக பேனாவில் இருக்கும் மையானது சீராக இல்லாமல் இருக்கும். அதாவது பேனாவினுள் மை நிரம்பிய நிலையில் இல்லாமல் இருக்கும். அதற்கு இந்த ரோலிங் மிஷினில் பேனாவை வைத்து ஸ்விட்ச்சை on செய்து விடவேண்டும். on செய்த பிறகு பேனாவில் இருக்கும் மையானது நிரம்பிவிடும்.

விலை மதிப்பு:

இதனை தயார் செய்வதற்கு 1.50 பைசா மட்டுமே செலவாகும். பேனாவை கடைகளில் சென்று விற்பனை செய்தால் நம் லாபத்திற்காக 50 பைசா அதிகம் வைத்து 2 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

லாபம்:

ஒவ்வொரு பேனாவிற்கும் 50 பைசா என்ற விலையில் விற்பனை செய்தோம் என்றால் மாதத்திற்கு 15,000/- முதல் 20,000/- வரை லாபத்தை அடையலாம். இந்த பேனா தொழிலை மொத்தமாக விற்பனை செய்து வந்தால் நிறைய லாபம் கிடைக்கும். அன்றாடம் நம் வாழ்க்கைக்கு பேனா என்பது மிகவும் முக்கியத்துவமாக இருக்கிறது என்பதால் தொழில் துவங்க நினைப்பவர்கள் தயக்கம் இல்லாமல் 13,000/- முதலீட்டில் இந்த லாபம் தரும் தொழிலை அனைவரும் செய்து பயன்பெறுங்கள்..! நன்றி வணக்கம்..!LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here