ஃப்ளிப்கார்ட் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகள் சேர்க்கப்பட்டன

0
1011

ஃப்ளிப்கார்ட் மொபைல் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் செயலியில் இந்தி மொழிக்கான வசதி ஒன்பது மாதங்களுக்கு முன் சேர்க்கப்பட்டது.

புதிய மொழிகளை சேர்த்திருப்பதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் செயலி ஆங்கிலம் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் மட்டும் இயக்குவதற்கான வசதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய அனுபவத்தை செயல்படுத்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சுமார் 54 லட்சம் வார்த்தைகளை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. மொழிமாற்றம் செய்யப்பட்ட வார்த்தைகளை ஃப்ளிப்கார்ட் தள விளம்பரம் மற்றும் இதர வலைப்பக்கங்களில் பயன்படுத்த இருக்கிறது.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here