ஆர்கானிக் உணவு பொருட்கள் சந்தை மதிப்பு 136 கோடி டாலர் 2020 ஆம் ஆண்டு

0
991

இரசாயனம் உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை உண்பதால் பாதிப்புகள் அதிகம் என்பது மக்களால் உணரப்பட்டுள்ளது. இதனால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவு பொருட்களின் (organic food) தேவை உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வும் நாளுக்கு நாள் விவசாயிகளுக்கிடையே அதிகரித்து வருவது மிகவும் ஆரோக்கியமானது.

விவசாயத் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில், இயற்கை விவசாய முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.

ஆர்கானிக் பொருட்களின் சந்தை மதிப்பு
இந்தியாவின் ஆர்கானிக் உணவுப் பொருட்களின் சந்தை மதிப்பை (market size) பற்றி ஆய்வை Assocham மற்றும் TechSci Research இணைத்து நடத்தியது. இதில் இந்தியாவின் ஆர்கானிக் உணவு பொருட்களின் சந்தை மதிப்பு 2020 ஆம் ஆண்டு $136 கோடி டாலர் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.

இப்போது, இந்தியாவில் ஆர்கானிக் பொருட்களின் சந்தை மதிப்பு $50 கோடி டாலராக இருக்கிறது. இது 2014 ஆம் ஆண்டு $36 கோடி டாலராக இருந்தது. வருடத்திற்கு ஆர்கானிக் உணவு பொருட்களின் சந்தை மதிப்பு 25-30 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்தியாவில், இப்போது 1.24 மில்லியன் டன் இயற்கை வேளாண்மை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவிலிருந்து ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கு மத்தியகிழக்கு (Middle-East) மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் (South-East Asia) ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி 2016-17 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெடில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வழிவகை செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here