போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: சூப்பரா சம்பாதிக்கலாம்!

0
998

கடந்த பல ஆண்டுகளாக அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குகள் மக்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. பாதுகாப்பான சேமிப்பு கருவியாக மட்டுமல்லாமல், நல்ல வருவாய் வழங்கக்கூடிய அம்சங்கள் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குத் திட்டங்களுக்கு உண்டு. இதனால் இத்திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதீதமாக பிரபலமடைந்துள்ளன.

இந்திய அஞ்சல் துறை அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு நிதியாண்டின் ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படாது என்று தெரிவித்துள்ளது. ஆக, அஞ்சல் துறை சேமிப்புத் திட்டங்களில் என்ன விகிதத்தில் வருமானம் கிடைக்கும் என பார்க்கலாம்.

அஞ்சல் சேமிப்புக் கணக்குகளுக்கு 4% வட்டி வருமானம் கிடைக்கும். தொடர் வப்பு நிதிக்கு (recurring deposit) 5.8% வட்டி வருமானம் கிடைக்கிறது. 1 முதல் 3 ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு (term deposit) 5.5% வட்டி வருமானம் கிடைக்கிறது.

ஐந்து ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு 6.7% வட்டி வருமானம் கிடைக்குறது. இதுமட்டுமல்லாமல், ஐந்து ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-க்கு கீழ் வருமான வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ஒரு அஞ்சல் அலுவலகத்தில் மட்டுமே கணக்கு துவங்க முடியும். எனினும், ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு கணக்கை மாற்ற முடியும். அஞ்சல் துறை சேமிப்புக் கணக்குகளின் சிறப்பம்சமே டிடிஎஸ் வசூலிக்கப்படாது. இதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் உத்தரவாதம் கூடுதல் பலம்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here