PMEGP – பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister Employment Generation Program –PMEGP)

0
1710

இந்தியாவின் தொழில் முனைவோருக்கான சிறந்த மானிய கடன் திட்டம். பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister Employment Generation Program –PMEGP)

 நகர் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள தொழில்முனைவோர்கள் புதியதாய் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வசதி.

பிரதம மந்திரியின் வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிய உற்பத்தி தொழில்களுக்கு ரூ.25 இலட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்பட உள்ளது. மானியமாக நகர்புறத்தை சேர்ந்த பொது பிரிவினருக்கு 15 விழுக்காடும், கிராம பகுதிகளில் 25 சதவீதமும் வழங்கப்படும்.எஸ்சி , எஸ்டி மற்றும் இதர பிற்படுத்த பட்ட வகுப்பினர், சிறு பான்மையினர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளி ஆகிய சிறப்பு வகை பிரிவினர்களுக்கு நகர்ப்புறமாக இருப்பின் 25% விழுக்காடும், கிராமப் பகுதியாக இருப்பின் 35% விழுக்காடும் மானியமாக வழங்கப்படும். பொதுப் பிரிவினர் முதலிடாக திட்ட மதிப்பீட்டில் 10% விழுக்காடும், சிறப்பு வகை பிரிவினர் 5% விழுக்காடும் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிகளில் கடனாக வழங்கப்படும்.

18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர், சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர், திட்ட அறிக்கை, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற்றிப்பின் அதற்கான சான்றிதழ் நகல் மற்றும் கல்வி சான்றிதல் உள்ளிட்ட சான்று நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 இதன் சிறப்பு அம்சங்கள் :

  • இதற்கு வயது வரம்பு கிடையாது.
  • எட்டாம் வகுப்பு தேர்வு செய்தவர்களுக்கு முழு கடன் வசதி வழங்கப்படும்.
  • படிப்பு சான்றிதல் இல்லாதவர்களும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலும்.உற்பத்தி தொழில்களுக்கு 10 லட்சம் வரையும் சேவை தொழில்களுக்கு 5 இலட்சம் வரை நிதி உதவி பெறலாம்.
  • திட்ட மதிப்பில் நிலம் நீங்கலாக கட்டிடம் , இயந்திரங்கள் மற்றும் ஒரு சுற்று நடைமுறை மூலதனம் அனைத்திற்கும் மானியம் வழங்கப்படும்.
  • சிறப்பு பிரிவினர்க்கு கிராமப்புறத்தில் 35% மானியமும் நகர் புறங்களில் 25% மானியமும் வழங்கப்படும்.
  • இத்திட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் வரை உள்ள வங்கி கடனுக்கு எவ்வித சொத்து பினையமும் சமர்ப்பிக்க தேவையில்லை.
  • நகர்ப்புறங்கள் மற்றும் கிராமபுரத்தில் வசிப்பவர்கள் மாவட்ட தொழில் மையத்தையும் (DIC), கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் KVIC மற்றும் KVIB மையத்தையும் அணுகலாம்.
  • மேலும் விண்ணப்பங்களை நேரடியாக இணையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.
  • தொழில் முனைவோர்களுக்கு இலவச மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.
  • வங்கி கடன் பெற்றப் பின் தொழில் துவங்குவதற்கு முன்பே மானியத் தொகை அவர்களின் வைப்பு நிதியில் செலுத்தப்படும்.

சில பொதுவான கேள்விகள் அதன் பதில்கள்:

இத்திட்டத்தில் அதிகபட்சமாக எவ்வளவு கடன் பெற முடியும்?

உற்பத்தி தொழிலாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ.25 லட்சம் வரையிலும் சேவைத் தொழிலாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ.10 லட்சம் வரையிலும் பெற முடியும்.

இந்த திட்டத்தில் நிலம் வாங்குவதற்கும் கடன் கிடைக்குமா?

நிலம் வாங்குவதற்கு இத்திட்டத்தில் கடன் கிடையாது. ஆனால் அந்த இடம் உங்கள் சொந்தமாகவோ அல்லது வாடகையாகவோ இருக்கலாம்.

கட்டிடம் (தொழிற்சாலை) அமைக்க கடன் கிடைக்குமா?

கட்டிடம் கட்டுவதற்கும், எந்திரங்கள் மற்றும் நடைமுறை மூலதனம் அனைத்திற்கும் கடன் பெறலாம். இதன் மதிப்பீட்டையும் திட்ட அறிக்கையில் இணைத்து கடன் பெறலாம்.

இத்திட்டத்தில் கிடைக்கும் மானியம் எவ்வளவு?

பொதுப்பிரிவினர் நகர் புறங்களில் தொழில் தொடங்கினால் 15% சதவீதமும் கிராம புறங்களில் தொடங்கினால் 25% சதவீதமும் மானியம் கிடைக்கும்.

சிறப்பு பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், SC/ST, பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நகர் புறங்களில் தொழில் தொடங்கினால் 25% சதவீதமும் கிராம புறங்களில் தொடங்கினால் 35% சதவீதமும் மானியம் கிடைக்கும்.

இத்திட்டத்தில் கடன் பெற நமது பங்கு எவ்வளவு?

பொதுப்பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பில் 10% சதவீதமும் சிறப்பு பிரிவினராக இருந்தால் 5% சதவீதமும் கொண்டு வந்தால் போதுமானது. மீதம் உள்ள தொகையான 90% – 95% வங்கி கடனாக கொடுக்கும்.

இத்திட்டத்தில் யார் கடன் பெற தகுதியானவர்கள்?

தனிநபர், சுயஉதவி குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கோ-ஆப் சொசைட்டி போன்றவர்கள் கடன் பெறலாம்.

யாரிடம் கடன் பெற முடியும்?

பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சில பதிவு பெற்ற வங்கிகளில் கடன் பெறலாம்.

யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

கிராமம் மற்றும் நகரம் என்றால் மாவட்ட தொழில் மையத்திலும், கிராமமாக இருந்தால் KVIC, KVIB ஆகிய நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம். தற்போது இணையத்தின் மூலமாக நேரடியாகவும் விண்ணபிக்கலாம். மேலும் விபரங்களுக்கு http://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/loginPage.jsp   என்ற இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.

கிராமம் என்பது எதன் அடிப்படையில் உறுதி செய்யப் படுகிறது?

கிராமம் என்ற பதிவு பெற்றிருக்க வேண்டும். 20,000 பேருக்கு மிகாத நகரமாக இருந்தாலும் அது கிராமமாக கருதப்படும்.

இத்திட்டத்தில் கடன் பெற வயது வரம்பு உள்ளதா?

குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேற்படி அதிக வயது இதில் கணக்கில்லை.

இதில் கடன் பெற சொத்து பிணையம் தேவையா?

இந்த திட்டத்தில் ரூபாய் பத்து லட்சம் வரை கடன்பெற சொத்து பிணையம் தேவை இல்லை. பத்து முதல் 25 லட்சம் வரை வங்கிகள் உங்கள் தொழில் திட்ட அறிக்கையினை பார்த்து CGTMSE – திட்டத்தின் படி சொத்து பணையம் இல்லாமல் கடன் பெறலாம்.

ஏதேனும் பயிற்சி பெற வேண்டுமா?

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அவசியம் பெற வேண்டும் இதனை மாவட்ட தொழில் மையமே அமைத்து தருவார்கள். கடனில் முதல் தவணையைப் பெற இந்த பயிற்சி முடித்த சான்றிதல் இருக்க வேண்டும். இந்த பயிற்சியினை இலவசமாக தொழில்மையம் வழங்குகிறது.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் பயன்பெற முடியும்?

இத்திட்டம் பரவலாக செயல்படுத்த படுகிறது, எனவே ஒரு குடுமபத்தில் ஒருவர் மட்டும் இதில் கடன் பெற முடியும். ஒரு குடும்பம் என்பது கணவன் மனைவி சேர்ந்தது ஆகும்.

ஏற்கனவே தொழில் நடத்தி கொண்டிருக்கும் தொழிலுக்கு கடன் கிடைக்குமா?

இத்திட்டம் முழுமையாக புதிய திட்டங்களுக்கே பொருந்தும். ஏற்கனவே நடத்தி வரும் தொழிலுக்கும் அதன் விரிவாக்கத்திற்கும் பொருந்தாது.

மேலும் ஏற்கனவே மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது. 

மானியம் எப்போது நமக்கு கிடைக்கும்?

இத்திட்டத்தில் கொடுக்கப்படும் மானியம் தொழில் ஆரம்பிக்கின்ற காலத்திலேயே உங்கள் வங்கிக்கு செலுத்தப்படும். அந்த தொகை வங்கியில் உங்கள் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்படும். மூன்று ஆண்டுகள் முடிவில் அந்த தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நாம் வாங்கும் மானியத்திற்கும் வட்டி கட்ட வேண்டுமா?

இந்த வைப்பு தொகைக்கு வட்டி கிடையாது. அதே போல நீங்கள் வாங்கும் கடனில் இந்த மானிய தொகைக்கு வட்டி கட்ட தேவையில்லை.

எந்த எந்த தொழிலுக்கு கடன் கிடைக்காது?

  • மாமிசம், சாராயம் மற்றும் புகையிலை சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் கடன் கிடையாது.
  • வியாபாரம் தனியாக செய்ய கடன் கிடையாது.
  • பயிர், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கடன் கிடையாது.
  • காபி, ரப்பர் முதலியன, பட்டு வளர்ப்பு, பூ வளர்ப்பு, காய்கறி வளர்ப்பு போன்றவற்றிக்கு மதிப்பு கூட்டும் தொழில்களுக்கு கடன் உண்டு.
  • ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகள் வளர்க்க, பதப்படுத்த இத்திட்டத்தில் கடன் கிடையாது.
  • பாலிதீன் பைகள் 20 மைக்ரான் கீழே தயாரிக்க கடன் கிடையாது.
  • கைத்தறி மற்றும் பவர் லூம் போன்றவை மேல் உள்ள தடையை நீக்கி கடன் பெற தகுதி பெரும் தொழில்களாக மாற்றப்பட்டுள்ளன.

 விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டியவை எவை?

உங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் போது திட்ட அறிக்கை மற்றும் எந்திர, மூலப் பொருட்களின் விலைப் பட்டியல் அவசியம் சேர்த்து விண்ணபிக்க வேண்டும்.

மேலும் தேவைப்படும் ஆவணங்கள்:

  • விண்ணப்ப படிவம் (on line)
  • திட்ட அறிக்கை (குறைந்த முதலீட்டு தொழில்களுக்கு பொருளாதார அறிக்கை போதுமானது)
  • எந்திரங்கள் தளவாடங்கள் விலைபட்டியல்
  • கட்டிடம் கட்ட வேண்டுமானால் கட்டுமான மதிப்பீடு மற்றும் வரைபடம் இணைக்க வேண்டும்.
  • நிலப்பத்திரம், மூலப் பத்திரம், வாடகை ஒப்பந்தம்
  • ஆணாக இருந்தால் ஜாதிச் சான்றிதல்
  • உற்பத்தி தொழிலுக்கு 10 லட்சத்திற்கு மேலும் சேவைத் தொழிலுக்கு 5 லட்சத்திற்கு மேலும் கடன் பெற குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அடையாள சான்று (ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு)
  • இரண்டு வாரம் குறையாமல் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற்றிருப்பின் அதற்கான சான்று அனைத்தையும் கொடுக்க வேண்டும்.
  • வங்கியின் விபரம்
  • இரண்டாவது வங்கியின் விபரம்.

தேர்வு செய்யும் முறை:

கடன் பெரும் வங்கியின் பெயர், முகவரி மற்றும் பதிவு எண் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இந்த விபரங்களை கொடுத்த உடன் இதை சேமித்து பின் இதற்கான ஆதாரங்களை அனுபினால் உங்களுக்கு மின்னணு அஞ்சல் கடவுச் சொல் தரப்படும்.

இரண்டு நகல்களுடன் நீங்கள் கேட்டுள்ள அலுவலகத்திற்கு திட்ட அறிக்கை, விலைபட்டியல் மற்றைய அனைத்து விபரங்களையும் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட திட்டத்தில் கடன் பெற விரும்புவோர் வங்கி மேலாளரை மதியம் 3 மணிக்கு மேல் முன் அனுமதி பெற்று சந்திப்பது நன்று. உடன்  அனைத்து ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

திட்ட அறிக்கை என்றால் என்ன?

திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.

நீங்கள் உங்களை விண்ணப்பங்களை நேரடியாக ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

http://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/pmegponline.jsp











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here