பணக்காரராக மாற்ற உதவும் 7 ஆலோசனைகள்..!

0
1130

கார்ப்பரேட் உலகில் உங்கள் இடத்தைத் தக்க வைப்பது ஒரு எளிதான பணி அல்ல. அதுவும் பணக்காரர்களின் பட்டியலில் உங்கள் பெயர் வந்து விட்டால் உங்களின் பணி இன்னும் கடுமையாகின்றது. யாரும் பணக்காரராக வளர உதவும் இரகசியங்களை உங்களுக்குச் சொல்வதில்லை.

நாங்கள் பணக்காரர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாத உங்களைப் பணக்காரராக மாற்ற உதவும் ஆரோக்கியமான ஆலோசனைகளை உங்களுக்காக இங்கே தருகின்றோம்.

ஊதியம் மட்டுமே முழுமை அல்ல கார்பரேட் உலகில் நீங்கள் இதுவரை முன்னேறி ஒரு முக்கியமான இடத்திற்கு வந்து விட்டீர்கள். இந்தப் பொழுதில் நீங்கள் உங்களின் அதிகபட்சமான ஊதியத்தை பெறத்தோடங்கி விட்டீர்கள். இதற்கு மேல் உங்களின் ஊதியம் அதிகமாக உயரப்போவதில்லை. ஊதிய உயர்வு தட்டையாக மாறி வெகு நாட்களாகி விட்டது. இங்குதான் உங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வேறுபாடு தொடங்குகின்றது. பணக்காரர்களுக்கு மேலும் செல்வம் சேர்க்க, அவர்களுக்குப் பதில் அவர்களுடைய பணம் கடினமாக உழைக்க வேண்டும். தாங்கள் அல்ல என்கிற உண்மை தெரியும்.

உண்மையில், ராபர்ட் கியோசகி, உலகின் அதிகம் விற்பனையான சிறந்த நிதி புத்தகத்தின் ஆசிரியர் “பணக்கார அப்பா, ஏழை அப்பா,” என்கிற புத்தகத்தை இந்த கருத்தைச் சுற்றியே வடிவமைத்துள்ளார். செயலற்ற மூலதனத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் என்பது உங்களின் செயலாற்றும் மூலதனத்தில் இருந்து வரும் வருமானத்தை விட அதி விரைவில் உங்களைப் பணக்காரராக மாற்றும் எனத் தெரிவிக்கின்றார்.

காலகட்டத்தை அல்ல காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் சமீபத்திய டோவ் ஜோன்ஸ்ன் சரிவு எதையாவது நிரூபித்தது என நீங்கள் கருதினால் அது ஒரு சந்தை நாளை எவ்வாறு இருக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது என்பது தான். பணக்காரர்களுக்கு இது நன்கு தெரியும் எனவே அவர்கள் தங்களின் இரண்டாவது வேலையாகப் பகல் நேர வர்த்தகத்தை ஒரு பொழுதும் முயற்சிப்பதில்லை. “முதலீடு வெற்றி பெற காலகட்டத்தை விட நேரமே மிகவும் முக்கியமானது,” என பீட்டர் லசரோஃப், சான்றிதழ் பெற்ற நிதி திட்ட மேலாளர், தெரிவிக்கின்றார். அவர் ப்லான்க்ராப் நிறுவனத்திற்காக சுமார் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை நிர்வகித்து வற்றுகின்றார்.

“பெரும்பாலான மக்கள் காலகட்டத்தைச் சார்ந்த சந்தை நகர்வுகள் மூலம் பணக்கார வளர முடியும் என நம்புகிறார். எனினும் செல்வந்தர்களுக்கு நேரம் மற்றும் கலவை வருமானம் மட்டுமே செல்வத்தை பெருக்கும் என்பது மிக நன்றாகத் தெரியும்.”

திட்டங்களை எழுதி வையுங்கள் ஒரு யோசனையை உங்களிடிமே வைத்துக்கொள்வது மற்றும் காகிதத்தில் அதை மாற்றுவதிற்கு இடையே உள்ள வித்தியாசமே ஒரு சிறந்த வெற்றியாளரை ஒரு சராசரி மனிதனிடமிருந்து பிரிக்கின்றது. நீங்கள் உங்களின் வெற்றியைப் பொருளுடன் சமன் செய்ய விரும்பினால் இதுவே உகந்த தருணம். உங்களின் இலக்குகள் அது சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். அதைப் பேப்பரில் எழுதி வைக்க முயற்சி செய்யுங்கள்.

தாமஸ் கோர்லி, ஒரு நூல் ஆசிரியர் “பணக்கார பழக்கம்: பணக்காரர்களின் தினசரி வெற்றி பழக்கம்,” என்கிற தன்னுடைய நூலில் ஒரு முக்கிய விஷயத்தைத் தெரியப்படுத்துகின்றார். தன்னுடைய நூலில் தான் பேட்டி கண்ட பணக்கார மக்களில் சுமார் 67 சதவிகிதம் பேர் தங்களுடைய இலக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உடையவர்கள், மற்றும் சுமார் 81 சதவீத மக்கள் தாங்கள் செய்ய வேண்டிய பட்டியலை எழுதி வைக்கும் பழக்கம் உடையவர்கள் எனத் தெரிவிக்கின்றார். உங்களின் இலக்கு ஒரு கோடீசுவரர் ஆக வேண்டும் என்றால், அதை எழுதுவதுடன் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்கிற திட்டத்தையும் இணைந்து எழுதி வையுங்கள்.

விலையை விட அதன் மதிப்பைப் புரிந்து கொள்ளுங்கள்

ஜஸ்டின் ஜே குமார், ஆர்லிங்டன் மூலதன மேலாண்மை நிறுவனத்தின் மூத்த போர்ட்ஃபோலியோ மேலாளரின் கூற்றுப் படி “பணக்கார நபர்களுக்கு மூன்று சிறந்த நண்பர்கள் உள்ளனர். அது அவரது வழக்கறிஞர், அவரது காசாளர் மற்றும் அவருடைய ஆலோசகர் ஆவர்.

பணக்காரர்கள் சட்டம் மற்றும் வரி குறியீடுகளை தங்களுக்குச் சாதகமாக குறிப்பாக தங்கள் செல்வத்தைப் பல தலைமுறைகளுக்கு அதிகரிக்க எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிவார்கள், மற்றும் அவர்கள் இதற்கான பதில்களை பெற, மற்றும் ஆலோசகர்களின் யோசனையைக் கோர பணம் செலவழிக்க ஒரு பொழுதும் தயங்க மாட்டார்கள் ”

குறைவாகச் சாப்பிடுங்கள்

சேமிப்பைப் பற்றி கவலைப்படும் மக்கள் பெரும்பாலும் தங்களுடைய தினசரி காப்பசினோ காபியை தவிர்க்க முயலுகின்றார்கள். செல்வந்தர்கள் எப்போது வேண்டுமானாலும் ஸ்டார்பக்ஸ் போன்றவற்றில் சிறிய அளவில் செலவழிக்க தயங்குவதில்லை. அதன் காரணமாக ஒரு பெரிய அளவில் சேமிக்கின்றார்கள்.

ஆசிரியர் பால் சல்லிவன் மற்றும் அவரின் சக ஊழியரான பிராட் க்லோன்ட்ஸ், கன்சாஸ் ஸ்டேட் பல்கலைக்கழக நியமன ஆசிரியர் மற்றும் ஒரு மருத்துவ உளவியலாளர், 1 சதவீதம் மற்றும் 5 சதவீதம் செலவு பழக்கம் வேறுபாடு உள்ளவர்களிடம் ஆய்வு நடத்தினர். 1 சதவீத மக்கள் வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பதன் காரணமாக சுமார் 30 சதவீதம் வரை சேமித்து அதை தங்களின் ஓய்வு காலத்திற்கு பயன்படுத்துகின்றார்கள் எனத் தெரிவிக்கின்றார்.

நீங்களே உங்களின் சொந்த முதலாளி

ஊழியர்கள் தங்கள் முதலாளிகள் பணக்காரர்கள் ஆவதற்காக வேலை செய்கின்றார்கள். நீங்கள் உண்மையாகச் செல்வம் சேர்க்க விரும்பினால், உங்களின் சொந்த வணிக நிறுவனத்தை தொடங்கி நடத்துங்கள். ஃபோர்ப்ஸ், கிட்டத்தட்ட பில்லியனர்கள் பட்டியலில் உள்ள1,426 மக்கள் அனைவரும் அவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உருவாக்கிய நிறுவனத்தின் மூலமே செல்வந்தர்களாக மாறினார்கள், எனத் தெரிவிக்கின்றது.

“பல நடுத்தர வர்க்க தொழிலாளர்கள் ஒரு வணிக நிறுவனம் தொடங்வது மிகவும் ஆபத்தானது என்று நினைக்கின்றார்கள்”, என ராபர்ட் வில்சன், ஒரு நிதி ஆலோசகர் மற்றும் சி என் என், என் பி சி, மற்றும் சி பி எஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பொறுப்பாளர் தெரிவிக்கின்றார்.

அடுத்தவர்களின் பணத்தைப் பயன்படுத்தவும்

ஒரு சராசரி நபருக்கு , “பணம் மட்டுமே பணத்தை சம்பாதிக்கும் ” என்கிற பகுத்தறிவற்ற மற்றும் அவரின் செலவுகளை நியாயப்படுத்தும் சோர்வான எண்ணங்கள் தோன்றலாம். ஆனால் பணக்காரர்களுக்கு இது ஒரு தங்க விதியாகும். இதில் கவனிக்கத்தக்க வேண்டிய மிக முக்கிய விஷயம் என்பது அடுத்தவர்களின் பணத்தைப் பயன்படுத்தி உங்களின் சொந்த செல்வத்தை அதிகரிப்பது மட்டுமே.

“டாலர்களின் வர்த்தக நேரம் தோற்றவர்களுக்கான ஒரு விளையாட்டு மைதானம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வேலைகளுக்குத் திறமையான மனிதர்கள் தேவைப்படவில்லை. எனவே இது பலரின் வேலைகளை அழிக்கின்றது”, என வில்சன் கூறுகின்றார். “வங்கிகள் / முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி உங்களுக்காக வேலை செய்ய பல மக்களைப் பணியமர்த்தி சொத்து சேர்ப்பது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட செயல்முறை ஆகும். இங்கு வரிச் சட்டங்கள் தொழில் புரிபவர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. இதுவே செல்வம் சேர்க்க உதவும் மிகவும் சக்தி வாய்ந்த சூத்திரம் ஆகும்.”உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here