ரூ.63.8 லட்சம் விலையில் எல்ஜி புதுவித டிவி விற்பனை துவக்கம்

0
1001

எல்ஜி நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் உலகின் முதல் ரோலபிள் OLED டிவி மாடலை அறிமுகம் செய்தது. இது சிக்னேச்சர் OLED ஆர் எனும் பெயர் கொண்டுள்ளது.

முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்டிருக்கும் இந்த டிவி உலகின் முதல் ரோபிள் டிவி மாடல் ஆகும். இது கடந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதன் விற்பனை தற்போது தான் துவங்கி உள்ளது.
 எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி
முதற்கட்டமாக எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி 65 இன்ச் மாடல் தென் கொரிய சந்தையில் 87 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63.8 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது. இதில் உள்ள OLED பேனல்கள் டிவி பயன்படுத்தாத போது, வித்தியாசமாக சுருங்கும் வசதி கொண்டுள்ளது.
இந்த டிவியை புல் வியூ, லைன் வியூ மற்றும் ஜீரோ வியூ என மூன்றுவித பார்மேட்களில் பார்க்க முடியும். இது சிக்னேச்சர் பிளாக், மூன் கிரே, டோபஸ் புளூ அல்லது டாபி பிரவுன் என நான்குவித ஷேட்களில் கிடைக்கிறது.
முதற்கட்டமாக தென் கொரியாவில் விற்பனை துவங்கி இருக்கும் நிலையில், எல்ஜியின் ரோலபில் டிவி மற்ற சந்தைகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here