PMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்

0
1023

இந்த திட்டம் கதர் கிராமிய தொழில் வாரியத்தின் திட்டமாகும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் இத்திட்டத்தில் இதுவரை 4,66,471 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் KVIC,KVIB  மற்றும் மாவட்டத் தொழில் மையத்தின் (DIC) மூலம் நிறைவேற்றப்படும் கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் நடைபெறும் ஆண்டு இருக்கும் ஆண்டிற்கும் பி எம் இ ஜி பி(PMEGP)   திட்டத்திற்கு ரூபாய்5,500  கோடி மத்தியஅரசு ஒதுக்கி உள்ளது.

 இது வெற்றிகரமாக தொழில் செய்யும் பி எம் இ ஜி பி(PMEGP)   கடன் பெற்ற நிறுவனங்கள் கடன் கட்டி முடிக்கப்பட்ட பின் அவர்களுக்கு இரண்டாவது கடன் மரு நிதி அளிக்கும் கடன் திட்டம்

உற்பத்தித் துறைக்கு ஒரு கோடி ரூபாய்

சேவைத் துறைக்கு 25 லட்ச ரூபாய் வரை கிடைக்கும்

இந்தக் கடன் திட்டத்திற்கு தகுதி பெறும் நிறுவனங்கள்

1)       நன்றாக வெற்றிகரமாக இலாபத்துடன் ஓடும் நிறுவனங்கள் தங்களது விரிவாக்கம் மற்றும் மேம்பாடு உற்பத்தி அதிகரிப்பதற்கும் கடன் பெறலாம்

2)      தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பம் மற்றும் தானியங்கு தொழில்நுட்பம் மூலம் தொழில் அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம்

3)      உற்பத்தியை அதிகப்படுத்துதல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான தேவைக்கு உதவுதல் ஆகியவற்றிற்கும் கடன் பெறலாம்

4)      உற்பத்திப் பெருக்கம் நடந்து வரும் தொழில்கள் விரிவாக்கம் செய்யவும் கடன் பெறலாம்

5)     கடன் உதவும் பெரும் வேலையில்  தொழில் செய்ய வேலை ஆட்கள் அதிகப்படுத்துதல் அவசியம் கடன்

6)     விவரங்கள்

மூலதனம் 10 சதவிகிதம்

மானியம் 15 சதவிகிதம்

மற்றவை வங்கி கடன் 75%

உற்பத்தித் துறைக்கு கடன் ஒரு கோடி ரூபாய்

சேவைத் துறைக்கு கடன் 25 லட்சம் வரை

10 சதவிகிதம் பங்கு தொகை மூலதனப் பங்கு தொகை மற்றும் 15 சதவிகிதம் மானியமாக பெறலாம்

 திட்டத்தின் பெரும் கடன் மதிப்பு

 கட்டிடம் எந்திரங்கள் வாங்க இத்திட்டத்தில் இடம் உண்டு ஆனால் அதில் கட்டிட கட்டுமானங்கள் திட்ட மதிப்பில் 25 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது மொத்தத்தில் திட்ட மதிப்பில் மொத்த கேப்பிட்டல் செலவு கட்டிடம் உட்பட திட்ட மதிப்பில் 60 சதவிகிதம் வரை இருக்கலாம்.

 மேலும் நடைமுறை மூலதனம் 40 சதவிகிதம் வரை இருக்கலாம் வங்கிகள் தேவைப்பட்டால் இந்தக் கடன் சதவிகிதங்கள் ஐ மாற்றி அமைத்துக் கொள்ளலாம்

யாரெல்லாம் பயன்பெறுவார்கள்

1)      எல்லா நடைபெற்றுக் கொண்டு நிறுவனங்கள் பி எம் இ ஜி பி(PMEGP)  முத்ரா(MUDRA) திட்டத்தின் கீழ் கடன் பெற்றிருக்க வேண்டும் இந்தத் திட்டத்தில் வட்டியுடன் தவணை தவறாமல் கட்டி முடித்து இருக்கவே வேண்டும்

2)      எந்த வங்கியின் முதல் முறையாக கடன் பெற்றுள்ளோ மோ

அந்த வங்கியிலேயே கடன் பெறலாம் அல்லது வேறு வங்கியிலும் கடன் பெறலாம்

3)      இந்தத் தொழில் நடப்பாண்டு க்கு முந்திய மூன்று வருடங்களில் நல்ல லாபத்தில் இயங்கி இருக்க வேண்டும்

4)      இந்தத் தொழில் உத்யோக் ஆதார் பதிவு பெற்று இருத்தல் அவசியம்

5)      இரண்டாம் கடன் பெறும்போது கடனுக்கு ஏற்றபடி வேலையாட்கள் அதிகப்படுத்துதல் அவசியம்

6)      இந்தத் திட்டம் பி எம் இ ஜி பி(PMEGP)   திட்டம் போலவே மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக ஏற்றப்படும் இந்த திட்டம் மாவட்ட தொழில் நலமாக நடைமுறைப்படுத்தப்படும்

எந்தெந்த வங்கிகள்

எல்லா பொதுத்துறை வங்கிகள்

எல்லாக் கிராமப்புற வங்கிகள்

டாஸ்க் போர்ஸ் கமிட்டி ஒப்புதல் பெற்ற கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகள் இக் கடனைப் பெறலாம்

தொழிற்சாலைகள் நாட்டின் எல்லா பகுதியிலும் இருக்கும் தொழில்சாலைகள் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்’

 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் முறை பி எம் இ ஜி பி(PMEGP இ போர்தல்9E-Portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும்போது அதுக்கான குடைய விரிவாக்கத்திற்கு உடைய

திட்ட அறிக்கை

போட்டோ

3 ஆண்டுகள் வருமான வரி செலுத்திய படிவம்

மூன்று வருட சார்ட்டட் அக்கவுன்டன்ட் கணக்குப் பரிந்துரை இவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்

மாநில டாஸ்க் போர்ஸ் கமிட்டி விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை ஆராய்ந்து அனைத்தும் சரியாக உள்ள பட்சத்தில் இத்திட்டத்தை ஒப்புதல் அளித்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புவார்கள்

இத்திட்டத்தில் வங்கிகள் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் முதல் தவணையை கொடுக்க வேண்டும் அதன்பின் மானியத் தொகையை வங்கிகள் பெற்று  18 மாதம் வங்கியில் டெபாசிட்டாக வைக்கப்படும் அதற்கு வட்டி கிடையாது அதைப்போலவே வாங்கியவன் ஈடான கடனுக்கும் வட்டி கிடையாது

இதில் கடன் பெற சொத்து பிணையம் தேவையா?

இந்தத் திட்டம் சி ஜி  டி எம் எஸ் சி (CGTMSE) இத்திட்டத்தின் மூலம் எந்தவித சொத்துப் பிணையம் இல்லாமலே வங்கிகள் கடன் கொடுக்கலாம். எனவே சொத்துப் பிணையம் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடன் பெறலாம்

கடனை இக்கடன் ஐ வங்கிகளும், மானியம் வழங்கும் ஏஜென்சி களும் சேர்ந்து மேற்பார்வை இடுவார்கள் அதுமட்டுமின்றி மூன்றாம் தர ஒருவரை நியமித்து மேற்பார்வையிட செய்வார்கள்

திட்ட அறிக்கை என்றால் என்ன?

திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here