புதுவித விற்பனை முறையில் டாடா நெக்சான் இவி

0
66
டாடா நெக்சான் இவி காரை வாங்க விருப்பம் இருந்தும் வாங்க தயக்கம் கொண்டவர்களை கவரும் வகையில் டாடா மோட்டார்ஸ் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் மாதாந்திர சந்தா அடிப்படையில் வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்து இருக்கிறது.
புதிய திட்டத்தை செயல்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆரிக்ஸ் இன்ஃபிராஸ்டிரக்ச்சர் சர்வீசஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. தற்சமயம் மாதாந்திர சலுகையில் டாடா நெக்சான் இவி எக்ஸ்இசட் பிளஸ் வேரியண்ட் கிடைக்கிறது. அதன்படி காரை 18 மாதங்களுக்கு பயன்படுத்துவோர் மாதம் ரூ. 47900 செலுத்தலாம்.
 டாடா நெக்சான் இவி
இதேபோன்று 24 மாதங்களுக்கு காரை பயன்படுத்த நினைப்போர் மாதம் 44900 ரூபாயையும் 36 மாதங்களுக்கு பயன்படுத்த விரும்புவோர் மாதம் ரூ. 41900 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் வரிகளும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தில் காரை பயன்படுத்த அனைத்து வழிமுறைகளையும் நிறைவு செய்த பின், வாடிக்கையாளர் வீட்டில் சார்ஜர் பொருத்தப்பட்டு எலெக்ட்ரிக் கார் வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here