சணல் பொருள் தயாரிப்பில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் ?

0
1893

சணல் பொருள் (Jute Bags):

தொடக்கத்தில் சணல் மூலம் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் மிகவும் அழகாக இருப்பதால் பலர் விரும்பி வாங்குகின்றனர். எனவே சணல் பொருள் தயாரிப்பு (Jute Bags) முறையை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த சணல் பொருள் தயாரிப்பு (Jute Bags) மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றன.  கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர்.

அரசு கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறலாம்.
தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு, ஆனால் சணல் (Jute Bags) தனித்துவம் வாய்ந்தது. இந்த திட்டமே இதன் சிறப்பு.

பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு (jute bags) அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது.
சணல் பொருட்கள் (jute bags) அனைத்தும் சந்தையிலும் கிடைக்கிறது. விற்பனையில் அதிக லாபம் பெறலாம்.

இருப்பினும் சணல் பொருள் தயாரிப்பு (jute bags) முறை பொறுத்தவரை, சணல் பை தயாரிப்பு பயிற்சி தெரிந்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம்.

சரி வாங்க சணல் பை எப்படி தயாரிக்கலாம் என்று இந்த பகுதியில் நாம் காண்போம்.

சணல் பை தயாரிப்பு வியாபாரம் – உற்பத்தி செலவு:

சணல் துணியை கொண்டு 35 வகை பொருட்களை உற்பத்தி செய்யலாம்.
ஒரு நாள் செலவு ரூ.1000/- மாதம் 25 நாட்களுக்கு ரூ.25,000/-

இதர செலவு ரூ.5,000/- என மாத உற்பத்திக்கு ரூ.30,000/- என்று சணல் பொருள் தயாரிப்பு (jute bags) முறைக்கு தேவைப்படும்.

சணல் பை – வருவாய்:

சணல் பை வருவாய் மாதம் ரூ.25,000/- செலவில் தயாரான பொருட்களை சில்லரையாகவும், மொத்தமாகவும் 75% லாபத்தில் விற்கலாம்.

இதன் மூலம் வருவாய் ரூ.43,000/-, லாபம் ரூ.18,000/-. விற்பனை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் தையல் மெஷின்கள், கூலியாள் மூலம் உற்பத்தி மேற்கொண்டால் லாபம் கூடும்.

சணல் பை – சந்தை வாய்ப்பு:

வீட்டில் இருந்து விற்பனை செய்யலாம், கடை போட்டோ விற்பனை செய்யலாம், கல்லூரி, அலுவலகங்களில் லேப்டாப் பை, பைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம்.

திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பைக்கு ஆர்டர் வாங்கலாம்.

அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

பேன்சி கடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த ஹேண்ட் பேக் கடைகளுக்கு சப்ளை செய்யலாம்.

சணல் பொருள் தயாரிப்பு :

சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும்,

கலை நயத்தோடு தைக்கவும் அதற்கு பயிற்சி அவசியம்.

மின்சாரத்தில் இயங்கும் தையல் மெஷின்கள் கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது.

இந்த சணல் துணிகளை தைப்பது தொடக்கத்தில் கடினமாக இருக்கும். அதன் பிறகு பழகிவிடும்.

சணல் பை (jute bags) கிடைக்கும் இடம்:

சணல் துணி கொல்கத்தாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு மொத்தமாக கொள்முதல் செய்யலாம். விலை குறைவு.

இதுதவிர சென்னை, புதுவையில் கிடைக்கும். காட்டன் ரோப் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பவானி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மற்ற பொருட்கள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.

சணல் பை தனித்துவத்தை அறிந்து தைப்பது முக்கியம்:

உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும்.

தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும்.

காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும்.

பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, பைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை.

சணல் பொருள் தயாரிப்பு முறையில் முதலீடு:

சணல் பொருள் தயாரிப்பு (jute bags) முறையில் உற்பத்திக்கு இருப்பு வைத்தல், விற்பனைக்கு என 20க்கு 10 அடி கொண்ட தடுப்பு அறை போதும்.

பவர் தையல் மெஷின் ரூ.10,000/-, கட்டிங் டேபிள் ரூ.3,000/-, கத்தரிக்கோல் ரூ.250/-, ரேக், ஹேங்கர்கள் ரூ.6,750. முதலீடு ரூ.20 ஆயிரம்.

வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின், டேபிள் போன்றவை இருந்தால் முதலீட்டுக்கு ரூ.10,000/- போதும்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here