சுயதொழில் – விபூதி தயாரிப்பு..! குறைந்த முதலீடு அதிக லாபம்….!

0
1363

விபூதி தயாரிக்கும் முறை: சுய தொழிலில் சிறந்த தொழிலாக விளங்குகிறது விபூதி தயாரிக்கும் முறை. பொதுவாக நாட்டு மாடுகளை வளர்க்க தயங்குவதன் காரணம் பசு மாடுகளை விட, நாட்டு மாடுகள் மிகவும் குறைந்த அளவே பால் கிடைப்பதுதான் காரணம்.

இருப்பினும் நாட்டுமாடு வளர்ப்பில் பால் விற்பனை இல்லாமலேயே அதிக வருமானம் பார்க்க முடியும். அதாவது மாட்டு சாணத்தை வைத்து விபூதி தயாரிக்கும் முறை பற்றி இவற்றில் நாம் காண்போம்.

விபூதி தயாரிப்பு மூலதனம்:

விபூதி தயாரிப்பு முறை தொழிலுக்கு முதல் மூல பொருட்களே மாட்டு சாணம்தான். எனவே மாடுகள் சாணம் போட்டவுடனே அதை சேகரித்து வைக்க, பசு மாட்டுச் சாணத்தைத் தனியாகவும், காளைமாட்டுச் சாணத்தைத் தனியாகவும் பிரிச்சு வைக்க வேண்டும். பசு மாட்டுச் சாணத்துலதான் விபூதி (திருநீறு) தயாரிப்போம். காளைமாட்டுச் சாணத்தை உரத்துக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்.

விபூதி தயாரிக்கும் முறை :

விபூதி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை பசு மாட்டுச் சாணத்தைப் பச்சையா இருக்கும் போதே வைக்கோல், குச்சிகளைக் கழிச்சு சுத்தப்படுத்தி, சாத்துக்குடிப் பழ அளவுல கையால உருட்டி, வெயில்ல ஒரு வாரம் காய வெச்சுடுவோம்.

இரண்டு உருண்டைகளை எடுத்து, ரெண்டையும் தட்டிப்பார்த்தா ‘சிலிங்’னு சத்தம் வந்தா நல்ல காய்ஞ்சுடுச்சுனு அர்த்தம்.

காய்ஞ்ச சாண உருண்டைகளை, விபூதி தயாரிக்கிற பர்னர்ல அடுக்கி நெருப்பு வைக்க வேண்டும்.

ஒரு தடவைக்கு 150 கிலோ அளவுக்கு உருண்டைகளை வெக்கலாம்.

அடுப்பில் ஒரு வாரம் வெந்ததும், அடுப்பை அணைச்சுக் உள்ளேயே மூன்று நாள் குளிர வைத்து பிறகு வெளியே எடுப்போம்.

150 கிலோ சாண உருண்டைகள் மூலமா 25 கிலோ விபூதி கிடைக்கும். மாசம் 75 கிலோ வரை விபூதி கிடைக்கும். விபூதி தயாரான மறுநாளே விற்பனையாகிடும். அந்தளவுக்குக் கிராக்கி இருக்கிறது.

விபூதி தயாரிப்பு வருமானம்:

விபூதி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை ஒரு கிலோ விபூதியை 500 ரூபாய்க்கு விற்கும்போது, மாசம் 75 கிலோ விபூதி விற்பனை மூலமா 37,500 ரூபாய் கிடைக்கும்.

எனவே விபூதி தயாரிக்கும் முறை என்பது ஒரு மிகச்சிறந்த சிறு தொழில் ஆகும்.

ஒரு லிட்டர் சிறுநீரை 50 ரூபாய்க்கும், மாசம் 500 லிட்டர் வரை விற்பனை செய்யலாம். அது மூலமா மாசம் 25,000 ரூபாய் கிடைக்கும்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here