அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில்..!

0
1224

நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..?
உங்களுக்கு ஓர் நற்செய்தி..!

தமிழகத்தில் பெரிய அளவில் போட்டிகள் கிடையாது. உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கினால் நமக்கு நல்ல லாபம்தான்! சில பெரிய ஹோட்டல்களில் பார்சல் செய்து தரும் உணவுப் பொருட்கள் வீட்டுக்குப் போகிறவரை சூடாக இருக்கிற மாதிரி அலுமினியம் ஃபாயில் பாக்ஸில் போட்டுத் தருவார்கள். இந்த அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்களைத் தயாரிக்கும் தொழிலைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

சரி வாங்க அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

சுயதொழில் – மூலப்பொருள் செலவுகள்:

நாள் ஒன்றுக்கு 80 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 100 கிலோ மூலப்பொருள் தேவைப்படும். உற்பத்தி செய்யும்போது 20 சதவிகிதம் கழிவு போய்விடும்.

1 கிலோ மூலப்பொருள் விலை 200 முதல் கிடைக்கும். கழிவு போக கிலோவுக்கு 225 நடுத்தர சைஸ் பாக்ஸ்கள் கிடைக்கும்.

இந்த பாக்ஸ்களை 1,500 எண்ணிக்கையில் அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியது தான்.

ஒரு மாதத்துக்கு (25 வேலை நாட்கள்) மூலப்பொருட்கள் செலவு 100X200X25=5,00,000 ரூபாயாக இருக்கும்.

தயாரிப்பு தொழில் – மூலப்பொருட்கள் கிடைக்கும் இடம்:

இதற்கான மூலப்பொருளான அலுமினியம் ரோல் ஜிண்டால் அலுமினியம் (Jindal Aluminium), குஜராத் ஃபாயில்ஸ் (Gujarat Foils) மற்றும் டால்கோ (Talco) போன்ற நிறுவனங்களிலிருந்து கிடைக்கும். அருகில் உள்ள விற்பனை மையங்களில் இருந்து வாங்கிக்கொள்ள முடியும்.

மாதத்துக்கு 2.5 டன் தேவை என்கிற போது, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். போக்குவரத்து செலவு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தோராயமாக 20 ஆயிரம் செலவாகும்.

250மி பெட்டிக்கு 40 மைக்ரான் அளவு ரோலும், 450மி பெட்டிக்கு 42 மைக்ரான், 750மி பெட்டிக்கு 45 மைக்ரான் அளவில் மூலப்பொருட்கள் வாங்கவேண்டும்.

தேவையான டை-யை இயந்திரத்தில் பொருத்தி, இந்த அலுமினிய ரோல்களை உட்செலுத்தினால் அலுமினியம் பாக்ஸ்களாக தனித்தனியே வந்து விடும். இவற்றை பாலிதீன் கவர்களில் அடைத்து, பேக்கிங் செய்யவேண்டும்.

தயாரிப்பு தொழில் – விற்பனை வரவு!

ஒரு பாக்ஸ் ரூ.1.60 வரை விற்க முடியும். 80 கிலோ மூலப்பொருளுக்கு 18,000 பாக்ஸ்கள் வரை ஒரு நாளில் உற்பத்தி செய்ய முடியும்.

இதன் அடிப்படையில் மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால், ஒரு மாத விற்பனை வரவு (18,000X1.60X25= 7,20,000) ஆக இருக்கும்.

கழிவு மூலப்பொருளை கிலோ ரூ.60 முதல் 70 வரை திரும்ப விற்க முடியும். அந்தவகையில் மாத வரவு 30,000 (20X60X25 = 30,000).

தயாரிப்பு தொழில் – செலவுகள்!

அலுமினிய பெட்டிகளை பாலிதீன் கவரில் அடைத்து, அட்டைப் பெட்டியில் பேக் செய்ய ஒரு பாக்ஸுக்கு 10 காசுகள் செலவாகும்.

இதன்படி 1,500 ஃபாயில்கள் என்கிற கணக்கில் அட்டைப்பெட்டியில் அடைப்பதற்கு ஒரு மாதத்துக்கு பேக்கிங் செலவு ரூ.45,000/-.

தயாரிப்பு தொழில் – சந்தை வாய்ப்பு:

போட்டியே இல்லாத தயாரிப்பு தொழில் என்பதால் பெரிய ஹோட்டல்கள், ரெஸ்ட்ராரண்ட் அதிகமாக விற்பனை செய்யலாம், அதேபோல் திருவிழாக்காலங்களில் இவற்றின் தேவை அதிகமாக இருக்கும்.

இயந்திரம்:

Aluminium foil container making machine:

இந்த அலுமினியம் ஃபாயில் கண்டைனர் இயந்திரம் அலிபாபா மற்றும் இந்தியாமார்ட் போன்ற வெப்சைட்டில் நாம் ஆடர் செய்தும் வாங்கலாம். இந்த இயந்திரங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு லிங்கையும் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • www.alibaba.com
  • www.indiamart.com











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here