பொக்கே தயாரிப்பில் இவ்வளவு வருமானமா ? பூங்கொத்து செய்வது எப்படி?

0
2174

பொக்கே தயாரிப்பு..!

பொதுவாக இயற்கையாக தயாரிக்கப்படும் பொக்கே பூ ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. எனவே நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கக்கூடிய செயற்கை பூ பொக்கே தயார்செய்யலாம். செயற்கை பூ பொக்கேக்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே செயற்கை பூ பொக்கே (How To Make Flower Bouquet) தயார் செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம்.

செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயார் செய்யலாம். மேலும் காதலர் தினம். திருமண வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளில் செயற்கை பொக்கே பூ அதிகம் பயன்படுகிறது. எனவே அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக காதலர் தினத்திற்கு சிவப்பு ரோஜாக்களும், நண்பர்கள் தினத்திற்கு பிங்க் ரோஜா பொக்கேகளை அதிகம் வாங்குகின்றனர். எனவே அந்த தினங்களுக்கு ஏற்ப பொக்கேகளை தயாரித்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் அதிக வருமானமும் பெறலாம்.

பொக்கே செய்வது எப்படி (How To Make Flower Bouquet In Tamil)?

பொக்கே கோன், பூ ஆகியவற்றை தனித்தனியாக தயாரிக்க வேண்டும்.

ராப்பரை முக்கால் அடி உயரம், ஒன்றரை இஞ்ச் திறப்பு உள்ளவாறு சுற்றினால் கோன் தயார்.

பூ தயாரிக்க முதலில் இதழ் தயாரிக்க வேண்டும், பின் அவற்றை பூவாக மாற்ற வேண்டும்.

ஒரு பூவுக்கு 7 இதழ்கள் தேவை. இதழ் தயாரிக்க ஆர்கன்டி துணியில் ஒன்றே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 2 இஞ்ச் அளவில் 1 துண்டு, இரண்டரை இஞ்ச் அளவில் 2 துண்டு, இரண்டே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 3 இஞ்ச் அளவில் 2 துண்டு என மொத்த 7 துண்டுகளை வெட்டி கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்ற வேண்டும்.

இதழ் செய்ய, முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும்.

பின்னர் கீழ், மேல் முனைகள் இணையும் வகையில் மடிக்க வேண்டும்.

பின்னர் அதை சமமாக இடது, வலதாக மடிக்க வேண்டும்.

இரு முனைகளையும் வெளிப்புறமாக மடிக்க வேண்டும்.

இப்போது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகும்.

பூ தயாரிக்க, முதலில் 5 இஞ்ச் நீளமுள்ள கம்பியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேல் பகுதியை கொக்கி போல் வளைத்து, சிறிய இதழை அதில் செருக வேண்டும், பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றியும் வைத்து, ஒவ்வொரு இதழுக்கும் பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். 7 இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும். (How To Make Flower Bouquet in tamil)

பூவின் கீழ் பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் அல்லது டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும்.

காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி, அதன் மேல் பூவை சொருகினால் செயற்கை ரோஸ் சிங்கிள் பொக்கே பூ ரெடி (How To Make Flower Bouquet in tamil).

பொக்கே பூ தயாரிக்க தேவையான பொருட்கள்:

பொக்கே தயாரிப்பு ஆர்கன்டி துணி (ஒரு மீட்டர் ரூ.30/- 20 பூக்கள் தயாரிக்கலாம்).

பொக்கே பூ கட்டும் கம்பி (தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் கிடைக்கும். ஒரு கம்பி ரூ.2/- 5 காம்புகள் தயாரிக்கலாம்)

கிரீன் பேப்பர் அல்லது டேப் (ஒரு ரோல் ரூ.25/- 20 காம்புகளில் சுற்றலாம்)

கிரீன் கிராப் (கம்பு தானிய கதிரின் சருகு, பொக்கே பூவை சுற்றி இலைகளாக அமைக்க பயன்படுவது. பல கலர்களில் கிடைக்கும். 100 கிராம் பாக்கெட் ரூ.25/- 4 பொக்கேவில் பயன்படுத்தலாம்)

பொக்கே ராப்பர் (பேக்கிங் ஷீட். ஒரு ஷீட் ரூ.8/- 10 பொக்கேக்கு பயன்படுத்தலாம்)
பேபி சாடின் ரிப்பன் (பொக்கேயின் கீழ் அழகுக்காக கட்டுவது. ஒரு ரோல் ரூ.15/- 25 பொக்கேக்களுக்கு பயன்படுத்தலாம்)

கிடைக்கும் இடங்கள்:

பொக்கே தயாரிப்பு ஸ்டேஷனரி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டோர்களில் கிடைக்கும். (How To Make Flower Bouquet in tamil)

பொக்கே பூ தயாரிப்பு வருவாய் மாதத்திற்கு:

பொக்கே தயாரிப்பு ஒரு செயற்கை பொக்கேவை மொத்த விற்பனை விலையாக கடைகளுக்கு சுமார் ரூ.20/- வீதம் விற்கலாம். இதன் மூலம் வருவாய் ரூ.16,000/-

உற்பத்தி செலவு போக லாபம் ரூ.9,600/- சில்லரையாக ரூ.25/-க்கு விற்கலாம். இவ்வாறு விற்றால் லாபம் கூடும். பெரிய பூக்களை செய்து, கொத்தாக உருவாக்கி, அதை வண்ணம் தீட்டப்பட்ட பொக்கே பூ ஸ்டாண்ட்களில் சொருகி ‘பிளவர் வாஷ்’ தயாரித்து விற்கலாம். அதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். (How To Make Flower Bouquet).உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here