சிறுதொழில் தென்னம் பிள்ளை பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பு..!

0
1100

சிறுதொழில் நிலத்தில் தென்னங்கன்று நாற்றை வளர்ப்பதை விட தென்னங்கன்று மதிப்பு கூட்டும் முறைப்படி தனிதனி பிளாஸ்டிக் பைகளில் வளர்பதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பதன் பயன்கள்

  • தென்னம் பிள்ளைகளின் வேர்கள் எளிதில் பாதிக்கப்படுவது இல்லை.
  • பிளாஸ்டிக் பைகளில் ஓர் ஆண்டுகள் வைத்து இருக்க முடியும்.
  • எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்து வைத்து கொள்ள முடியும்.
    வாங்கி செல்பவர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும்.
  • தென்னங்கன்றுகள் இறந்து விடாமல் பாதுகாப்பாக இருக்கும்.
  • அதிக லாபம் கிடைக்கின்றது.
  • எளிதில் இடமாற்றம் செய்து கொள்ள முடியும்.
  • தென்னை மரம் இயற்கையாக வளர்வது போலவே வளர்ந்து வரும்.
  • நிலத்தில் நட்ட பின் வாடிவிடாமல் எடுத்து வந்தது போலவே இருக்கும்.
  • வாங்குபவர்களுக்கும் விற்பவர்க்கும் நஷ்டம் ஏற்படாது.

சிறுதொழில் – தேங்காய் தேர்வு செய்தல்:

இளம் தென்னங்கன்று வளர்க்க ஆரோக்கியமான தேங்காய்களை தேர்வு செய்ய வேண்டும். குறைந்தது 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அதிக தேங்காய் காய்க்கும் தென்னை மரங்களின் தேங்காய்களையே நாற்றுக்கு பயன்படுத்த வேண்டும்.

அத்தோடு தேங்காய் மரத்திலேயே நன்கு முற்றி திரண்டு, பழுத்து விழும் நிலையில் உள்ள தேங்காய்களில் பெரிய காய்களை மட்டும் தேர்ந்தெடுத்து நாற்றுக்கு பயன்படுத்த வேண்டும். தேங்காயில் தண்ணீர் இருக்க வேண்டும்.

சிறுதொழில் – பிளாஸ்ட்டிக் பைகள்:

இரண்டு தேங்காய் பிடிக்கும் அளவிற்கு மொத்தமான பிளாஸ்டிக் பைகளை வாங்கி பயன்படுத்தலாம். உர மூட்டைகள் வரும் பிளாஸ்டிக் சாக்குகள் அல்லது சிமெண்ட் மூட்டைகள் பயன்படுத்தும் சாக்குகள் வாங்கி பயன்படுத்தலாம்.

செடிகள் வளர்க்கும் பிளாடிக் பைகள் 5 ரூபாய்க்கு கிடைக்கும்.
சிமெண்ட் மூட்டை பைகள் 2 ரூபாய்க்கு கிடைக்கும்.
உர மூட்டை பைகள் 15 ரூபாய்க்கு கிடைக்கும்.

தேவையான அளவு பிளாஸ்டிக் பைகளை வாங்கி மண், வேப்பம் பிண்ணாக்கு, எரு, இவைகளை கலந்து பையின் அளவில் 30% நிரப்பவும், அதன் மேல் தேங்காய் குறுகலான பகுதியை கீழ் நோக்கியும் அகன்ற பகுதியை மேல் நோக்கி இருக்கும் படி வைத்து தேங்காய் மறையும் அளவிற்க்கு மண் கொட்டி வைக்கவும். தேங்காய் மண்ணில் முழுவதும் மறைந்தால் போதுமானது. பெரிய பைகளாக இருந்தால் மீதம் உள்ள பைகளை மடக்கி விடவும்.

சிறுதொழில் – தண்ணீர் ஊற்றுதல்

தேங்காய் பைகளில் வைத்த பின் தண்ணீர் ஊற்றவும், தேங்காய் மண்ணை விட்டு வெளியே வராமல் இருக்கும் படி முதல் இரண்டு நாட்கள் தண்ணீர் ஊற்றவும். பிறகு மண் இறுகி விடும். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றவும். பைகளை வரிசையாக தண்ணீர் ஊற்ற ஏதுவாக வைத்து கொள்ள வேண்டும்.

சிறுதொழில் – தென்னங்கன்று முளைத்தல்

சுமார் 60 நாட்களில் தென்னங்கன்றுகள் முளை வெளிவரத் தொடங்கும். சில தேங்காய்கள் 3 மாத காலங்கள் கூட ஆகலாம். 5 மாதங்கள் கடந்த பின் 1.5 அடிமுதல் 2 அடி வரை வந்ததும் விற்பனையை தொடங்கலாம் அல்லது வயல்களில் எடுத்து வைக்க ஏதுவாக இருக்கும்.

சிறுதொழில் – தென்னங்கன்று நடவு முறை

நிலத்தை அளவீடு செய்து தென்னம் பிள்ளை உள்ள பையின் அகலம் மற்றும் உயரத்திற்க்கு குழி எடுத்து பிளாஸ்டிக் பைகளில் கத்தியால் கீரல் போட்டு அப்படியே குழியில் இரக்கி மூடிவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

சிறுதொழில் – தென்னம் பிள்ளை விற்பனை 

தென்னங்கன்று 5 மாதம் வளர்ச்சி அடைந்ததும் விற்பனை செய்யலாம், பிளாஸ்டிக் பைகளில் வைத்து இருப்பதால் சிலர் 3 மாத கன்றுகளை கூட வாங்கி கொள்வார்கள்.

சிறுதொழில் – தென்னங்கன்று விலை

3 மாத தென்னங்கன்றுகள் 75 ரூபாய்க்கு விற்கலாம். நர்சரிகளிலில் இதன் விலை 125 ரூபாய். 5 முதல் 6 மாதம் வளர்ந்த தென்னங்கன்றுகள் 120 ரூபாய்க்கு விற்கலாம். பொதுவாக நர்சரி விலை 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

6 மாதத்திற்க்கு மேல் வளர்ந்த உயரமான தென்னங்கன்றுகள் 150 ரூபாய் வரை விற்கலாம். 300×120 = 36,000 ஆறுமாதத்திற்கு பின் கிடைக்கும். வருவாய், சராசரியாக மாதம் 12,000 ரூபாய் வருமானம் ஈட்டலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here