நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..!

0
1201

புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ஒரு புதிய தொழில் வாய்ப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

அதாவது நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் (Banana Chips Business Plan) பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

இடம்:

இந்த நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை, 100 சதுர அடி இடம் போதுமானது. குறிப்பாக இந்த சுயதொழில் வீட்டில் இருந்தே செய்ய கூடிய ஒரு சிறந்த தொழில்.

தயாரிப்பு தொழில் – நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் நூறு பங்கு தண்ணீருக்கு 0.1 பங்கு வீதம் சிட்ரிக் ஆசிட், 0.1 பங்கு வீதம் பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்டும் போட்டு கரைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நன்கு முற்றிய நேந்திரம் வாழைக்காய்களை தோல் உறித்து, சீவல் மெஷின் மூலம் மெல்லியதாக சீவிக்கொள்ள வேண்டும். சீவிய வாழைக்காய் துண்டுகளை நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தண்ணீரில் 1 மணி நேரம் கழுவி எடுக்க வேண்டும்.

பின்னர் தண்ணீரை வடிகட்டி வாழைக்காய் துண்டுகளை மூங்கில் தட்டு அல்லது பாய்களில் பரவலாக பரப்பி வெயிலில் காயவிட வேண்டும்.

நன்கு காய்ந்த பிறகு வாழைக்காய் துண்டுகளை ஒரு அறையில் வைத்து ஒரு மண் சட்டியில் கரி நெருப்பு மூட்டி அதில் 3 கிராம் கந்தகத்தை போட்டு புகை காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

அதன் பிறகு மீண்டும் வாழைக்காய் துண்டுகளை வெயிலில் நன்கு காயவைத்து, பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயிலில் பொன்னிறமாக பொறித்து எடுத்து பாலிதீன் பைகளில் நிரப்பி விற்பனைக்கு அனுப்பலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை நேந்திரங்காய் மிகவும் முக்கிய மூலப்பொருளாக இதனுடன் எண்ணெய், உப்பு, மிளகாய் தூள், பேக்கிங் செய்வதற்கு பை ஆகியவை அவசியம் தேவைப்படும்.

இயந்திரங்கள்:

 • வாழைக்காய் கழுவும் தொட்டி – 1
 • பெரிய சைஸ் பாத்திரம் – 1 (ரூ.500)
 • பழத்தை உரிக்கும் கத்தி – 3 (ரூ.300)
 • பழம் சீவும் இயந்திரம் (கையால் இயக்குவது) – 1 (ரூ.650)
 • பேக்கிங் இயந்திரம் (கையால் இயக்குவது) – 1 (ரூ.2000)
  மொத்தம் ரூ.3450

நடைமுறை செலவுகள்:

 • மின்சாரம் மற்றும் எரிபொருள் – 2,000
 • நிர்வாக செலவு – 2,000
 • போக்குவரத்து செலவு – 2,000
 • இதர செலவு – 1,000
  மொத்தம் – 7,000

முதலீடு:

இந்த நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை மேல் கூறப்பட்டுள்ள மூலப்பொருட்களை கொண்டு, மாதம் 750 கிலோ நேந்திரங்காய் சிப்ஸ் தயார் செய்வதற்க்கு முதலீடாக 1,00,000/-.

மொத்த முதலீடு பற்றிய விவரங்கள்:

மூலப்பொருட்கள் – 76,600/-
இயந்திரங்கள் செலவு – 3,450/-
நடைமுறை செலவு – 7,000/-
மொத்த செலவு – 87,050/-

விற்பனை வருமானம் (மாதத்திற்கு)

 • மாத உற்பத்தி – 750 கிலோ
 • ஒரு கிலோ விலை – ரூ.150
 • மாத வருமானம் 750 x 150 = 1,12,500
  மொத்த மாத செலவு – 87,050

வருமானம்:

இந்த நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை விற்பனையில் லாப சதவீதம் 25% கிடைக்கின்றது. எளிமையான தொழில். நேந்திரங்காய் மற்றும் சந்தைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினால் 100% வெற்றி உறுதி.

இதனை புதிய தொழில் முனைவோர்கள் பெரிதும் முயற்சிக்கலாம். கவர்ச்சியான பேக்கிங் மூலம் ஒரு குறிப்பிட்ட ஏரியாவை கருத்தில் கொண்டு ஆரம்பித்தால் லாபம் அடையலாம்.

நேந்திரம் வாழைக்காய் திருச்சி (காந்தி மார்க்கெட்), கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் (வடசேரி சந்தை) போன்ற இடங்களில் விலை மலிவாக கிடைக்கின்றது. சுத்தமான, தரமான ரீபைண்ட் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சிப்ஸ் தயாரித்தால் சிப்ஸ் தரமானதாக இருக்கும்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here