சுயதொழில் பிஸ்கட் தயாரிக்கும் முறை..! அருமையான தொழில்..!

0
1405

நொறுக்கு தீனி வகைகளில் முதல் இடத்தை பெற்றிருக்கும் பிஸ்கட் மக்களிடத்தில் எப்போதும் அதிக வரவேற்பு பெற்றிருக்கும். டீ, காப்பியுடன் பிஸ்கட்டுகளை நனைத்து சாப்பிடுவது பலரது அன்றாட பழக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகவும் விளங்குகிறது. அதுமட்டும் இல்லாமல் சந்தை வாய்ப்பு அதிகம் இருப்பதினால் இந்த பிஸ்கட் தயாரிக்கும் முறையில் (how to make biscuits at home) அதிக இலாபத்தையும் பெற முடியும்.

பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என மூன்று விதமாக பிரித்து கொள்ளலாம். இவற்றில் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிஸ்கட் அதிகளவு விற்பனையாகுகின்றன.

முக்கியமாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம், டீக்கடைகள், நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற இடங்களில் அதிகளவிலான விற்பனை வாய்ப்புகள் உள்ளது.

50-60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இதுபோன்ற இடங்களை மையப்படுத்தி டெலிவரி வேன் மூலம் விற்பனையைப் பெருக்கலாம்.

பிஸ்கட் தயாரிக்கும் முறை (how to make biscuits at home)..!

கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சர்க்கரை, பால், வனஸ்பதி, போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

பிறகு ‘டவ் மெஷின்’ மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.

பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.

பிஸ்கட் தயாரிப்பு (How To Make Biscuits) – தரக்கட்டுப்பாடு:

உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெறவேண்டும்.

பிஸ்கட் தயாரிப்பு (How To Make Biscuits) – நிலம் மற்றும் கட்டிட அமைப்பு:

இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 800 சதுரஅடி இடம் தேவைப்படும். பிஸ்கெட் தயாரிக்க  (how to make biscuits at home) 400 சதுர அடி இடமும் மீதமுள்ள இடத்தில் பேக்கிங் மற்றும் சில்லறை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதற்கு ரூபாய் 1.25 லட்சம் வரை செலவாகும்.

பிஸ்கட் செய்யும் முறை – இயந்திரங்கள்:

ஐம்பது டன் உற்பத்தி என்ற இலக்கு வைக்கலாம். ஆண்டுக்கு 330 வேலை நாட்கள், தினமும் 12-14 மணி நேரம் வேலை செய்தால் இந்த இலக்கை எட்டலாம்.

இயந்திரங்கள் புதுடெல்லி, ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கும்.

சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் மாவு பிசைவதற்கு வேலை ஆட்கள் வைத்துக் கொள்ளலாம். இது செலவை சற்று குறைக்கும்.

பிஸ்கட் தயாரிப்பு – செலவுகள்:

பிஸ்கட் தயாரிப்பு செலவு (how to make biscuits at home) மட்டுமல்லாமல் ஃபர்னிச்சர், அளவை சரி பார்க்கும் இயந்திரம், பேக்கிங் செய்ய, ஸ்டோர் செய்து வைக்க என்ற வகையில் 90,000 ரூபாய்வரை செலவாகும். தினமும் 20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் தேவை.

பிஸ்கட் தயாரிப்பு – மூலப்பொருட்கள்:

கோதுமை மாவு, மைதா மாவு, ஈஸ்ட், நெய் அல்லது வனஸ்பதி, சர்க்கரை, பால் அல்லது பால் பவுடர், உப்பு மற்றும் உணவு கலர் இவைதான் மூலப்பொருள்.

எல்லாமே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய பொருள்தான், அதனால் உற்பத்தியில் தொய்வு இருக்காது.

பிஸ்கட் செய்முறை – தேவைப்படும் வேலையாட்கள்:

  • முன்னனுபவம் உள்ள நபர் – 1
  • உதவியாளர்கள் – 2
  • விற்பனையாளர் – 1

பிஸ்கட் செய்முறை (How To Make Biscuits) – முதலீடு:

இந்த பிஸ்கட் தயாரிக்கும் முறை தொழில் துவங்குவதற்கு குறைந்தபச்சம் ரூ.50.000/- வரை தேவைப்படும்.

பிஸ்கட் செய்முறை – அரசு மானியம்:

இத்தொழில் சிறுதொழிலுக்கு கீழ் வருவதால் மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கும்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here