தொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி? & அதன் பயன்கள்..! Udyog aadhar registration online..!

0
1750

சிறு தொழில் தொடங்க லைசென்ஸ் வாங்குவது எப்படி?

வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் தொழில் துவங்குவதற்கு உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். முன்பெல்லாம் SSI, em1 em2 என்று இருந்தது. இப்பொழுது அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு உத்யோக ஆதார் என்று வைத்துள்ளன. சரி இந்த பதிவில் ஆன்லைன் மூலம் இலவசமாக உத்யோக ஆதார் பதிவு (udyog aadhar registration online in tamil) செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

உத்யோக ஆதார் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்:-

உத்யோக் ஆதார் (Udyog Aadhar) என்பது இந்திய அரசினால் வழங்கப்பட்ட 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண் ஆகும். இதனை இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சகமானது இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர முனைவகத்திற்காக வழங்குகிறது. மேலும் இது வணிகத்திற்கான ஆதார் எனவும் அழைக்கப்படுகிறது.

SSI பயன்கள் | உத்யோக ஆதார் பதிவு பயன்கள்

உங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில்,

  1. உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும்.
  2. மானியம் பெறுவதர்க்கும்.
  3. குறைந்த வட்டியில் கடன் பெற உதவும்.
  4. வரி சலுகை பெற உதவும்.
  5. மின்சார கட்டணத்தில் சலுகை பெற உதவும்.
  6. மத்திய, மாநில அரசுககளின் சலுகை மற்றும் முன்னுரிமை பெற உதவும்.

சரி, வாருங்கள் சிறு தொழில் மையத்தில் உத்யோக ஆதார் பதிவு (udyog aadhar registration online in tamil) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் உத்யோக ஆதார் பதிவு செய்யும் முறை | சிறு தொழில் பதிவு செய்வது எப்படி | udyog aadhar registration online in tamil:-

உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி ? ஸ்டேப்: 1

பதிவு செய்வதற்கு முதலில் இதன் இணையதளமான udyogaadhaar.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.

உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி? udyog aadhar registration online in tamil step: 2

அதில் உங்கள் ஆதார் கார்ட் நம்பர் மற்றும் உங்கள் பெயர் டைப் செய்து validate & generate OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் மொபைல்க்கு ஒரு OTP எண் வரும். அந்த OTP எண்ணினை டைப் செய்து Validate என்பதை கிளிக் செய்யுங்கள்.

உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி ? udyog aadhar registration online in tamil step: 3

பிறகு Application form open ஆகும்.

அதில் பின் வரும் விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த விவரங்களை நிரப்பினால் தங்களின் சான்றிதழ் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வரும்.

அதற்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், வங்கியின் `ஐஎஃப்எஸ்சி கோடு’ மற்றும் மின்னஞ்சல் முகவரி முக்கியம்.

இந்த உத்யோக ஆதார் பதிவு செய்ய கட்டணம் எதுவும் இல்லை (udyog aadhar free registration).

இதில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால் திருத்தங்கள் செய்ய முடியாது என்பதால், தேவையான விவரங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு நிதானத்துடன் பதிவு செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின், அதற்கான சான்றை (அக்னாலெட்ஜ்மென்ட்) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

அதில் யாருடைய கையெழுத்தும், ஒப்புதலும் தேவையில்லை.

தொழில்முனைவோரின் முதலீட்டு தொகைக்கு ஏற்றபடி குறு, சிறு, நடுத்தர தொழிலா என்பதை அக்னாலெட்ஜ்மென்டில் தெரிந்து கொள்ளலாம். இதில் இரண்டு வகையான பதிவுகள் உண்டு. அவை… உற்பத்தித் தொழில் பதிவு, சேவை தொழில் பதிவு.

உற்பத்தி தொழில் பதிவுக்கு…

1. குறு தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் (micro): தொழில் உபகரணங்களுக்கு 25 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்.

2. சிறு தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் (small): தொழில் உபகரணங்களுக்கு 5 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்

3. நடுத்தர தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் (medium): தொழில் உபகரணங்களுக்கு 10 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்

சேவை தொழில் பதிவுக்கு…

1. குறு தொழில் சேவை தொழில்முனைவோர் (micro): தொழில் உபகரணங்களுக்கு 10 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
2. சிறு தொழில் சேவை தொழில்முனைவோர் (small): தொழில் உபகரணங்களுக்கு 2 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
3. நடுத்தர தொழில் சேவை தொழில்முனைவோர் (medium): தொழில் உபகரணங்களுக்கு 5 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்

தொழில் பதிவின் பலன்கள் | உத்யோக ஆதார் பயன்கள்!

UAM-ல் உத்யோக ஆதார் பதிவு செய்து அதற்கான சான்றைப் பெற்றவர்கள், கீழ்க்காணும் பலன்களைப் பெற முடியும். இது ஒரு நிரந்தர பதிவு ஆகும்.

  1. தொழில்முனைவோர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் தொழிற்பயிற்சி மற்றும் விழாக்களில் கலந்துகொள்ளலாம்.
  2. தொழிலை விரிவுபடுத்த வங்கிக்கடன் பெறும் போதும் இதைச் சமர்ப்பிப்பது கூடுதல் பலமாக இருக்கும்.
  3. உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு பெறவும். மத்திய, மாநில அரசுகளின் மானியங்களைப் பெறவும் இந்த பதிவு மிகவும் அவசியம்.


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here